02-21-2004, 12:53 PM
Quote:இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது....தண்ணீரில் நடப்பதோ... இந்தப் பெண்ணியக்காரர்கள் இன்னும் புராணகாலத்தில் தான் இருக்கிறார்கள் போலும்!
Quote:ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை; அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண...ஆமாம், ஆண்களுக்கு அது சில நுணுத்த வேலை தான், அத்துடன் அவர்கள் வேலை முடிந்து விடுகிறது! பெண்ணியத் தேவதை மட்டும் இல்லாவிட்டால் பெண்களின் பாடு பெரும்பாடு. ஏனெனில் பெண்ணியத்தேவைதை தானே, மாடா உழைச்சு கருவளர்ச்சிக்கான ஊட்டச் சத்துணவு வழங்குது. பெ.தே தானே நிறைமாதமாக இருக்கும்பொழுது அன்பாகவும் ஆதரவுடனும் கவனிக்குது (நானே சில பெ.தே கள் நாரைப்பழச் சாறு கரைச்சுக் கொடுத்த). "அம்மா வயிறு வலிக்குதே" எனும்போழ்து, பெ.தெ தானே அரக்க்கப் பரக்க, தன்னிடம் உள்ள ஊர்தியிலோ, மிதிவண்டியிலோ (அததன் வருவாய்க்கேற்ற வகையில்) மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகுது. பிள்ளை பிறந்த பிறகு பெ.தெ தானே சாணத்துணியில் இருந்து சட்டை வரை வாங்கி வருது.
பின்னர் பிள்ளையை நல்ல பள்ளிக்கு அனுப்ப ஊக்கம் கொடுக்குது.
ஆன இது வரைக்கும் இந்த ஆண்கள் எங்காவது கள்ளுக்கொட்டிலில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறர்கள் போலும். பெ.தே மட்டும் இல்லை என்றல் எண்ணிப் பாருங்கள் பெண்ணின் நிலையை. கலாநிதி ச. வாமதேவாவும் இதைப் போய் தடிப்பாக்கி வலியுறுத்துகிறார்.
கடுரையே சொல்கிறது:
Quote:ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.பின்னர் இப்படியும்:
Quote: ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியேபெண்களுக்கு ஆணுக்கு நிகரான திறமையிருக்கென அம்மாச்சி எண்ணினால்; திறமை, தகமை அடிப்படையிலல்லவோ பணியில் சேர்க்க முன்மொழியவேண்டும
் அதை விடுத்து ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள். ஆண்களுக்கு ஆண்கள் என்ற காரணத்துக்காக பதவியும் பணிகளும் வருவதில்லையே அவரவர் திறமைக்கும் தகமைக்கும் தானே அவை வரும்.
இங்க சிலர் கோயில் ஆக்களப் போல தலையாட்டுகிறதால் தான் இது போன்று பெண்ணியக்காரரும் எழுதி வடிக்கிறர்கள். :mrgreen:
-

