02-21-2004, 10:41 AM
thambu:
தம்பு வம்புக்கெழுதிய வரிகட்கு விடையிறுக்கும் வண்ணம், :mrgreen: தீராநதியில் இராசேந்திரசோழனின் "தமிழ் அடையாளம் அழிப்பும் மீட்பும்" எனும் கட்டுரையில் இருந்து வரிகளை மேற்காட்டி அவற்றுக்கு என் கருத்துக்கள் சிலவற்றையும் கீழே எழுதியுள்ளேன். அக்கட்டுரையின் நீளம் மிக நீளமாததால் இவ்விடுகை நீண்டதாக இருக்கும்,(என்னுடைய வெட்டல்கட்குப் பின்னரும்) பொறுத்தருள்க. ...
இராசேந்திரசோழனின் மேற்கூறிய கட்டுரை (kumudam.com) இல், தீராநதியில் உள்ளது. நன்றி குமுதம்.
Quote:நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......தமிழரைத்தான் அறியவில்லை, பிரஞ்சு மக்களையும் உடொச்சு மக்களையும் கூட அறியாத குடியியல் வல்லுநரா?
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....
தம்பு வம்புக்கெழுதிய வரிகட்கு விடையிறுக்கும் வண்ணம், :mrgreen: தீராநதியில் இராசேந்திரசோழனின் "தமிழ் அடையாளம் அழிப்பும் மீட்பும்" எனும் கட்டுரையில் இருந்து வரிகளை மேற்காட்டி அவற்றுக்கு என் கருத்துக்கள் சிலவற்றையும் கீழே எழுதியுள்ளேன். அக்கட்டுரையின் நீளம் மிக நீளமாததால் இவ்விடுகை நீண்டதாக இருக்கும்,(என்னுடைய வெட்டல்கட்குப் பின்னரும்) பொறுத்தருள்க. ...
Quote:மனித இருப்பு, அடையாளம் சார்ந்தே அறியப்படுகிறது. அடையாளம் சாராத மனித இருப்பு இல்லை. அடையாளங்கள் பல தரப்படலாம். ... இரு வகைப்படுத்தலாம். உடல் கட்டமைப்பு. தோற்றம், நிறம் ஆகியன இயற்கை சார்ந்தவை. பெயர், மொழி, சாதி, மதம் ஆகியன சமூகம் சார்ந்தவை. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.தமிழரென்பது காக்க வேண்டிய அடையாளம், சிறிலங்கன் எனபது அழிக்க வேண்டிய அடையாளம்.
...் மனிதன் திராவிடன், ஆரியன், மங்கோலியன், நீக்ரோ என மரபினமாக வகைப்படுத்தப் படுகிறான். இம்மரபினமே, வரலாற்று வளர்ச்சிப்போக்கு மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக பல்வேறு கலப்புகளுக்கு உட்பட்டு பேசும் மொழி சார்ந்தும், வாழும் நிலம் சார்ந்தும், தனித்த ஒரு மக்கள் சமூகமாக பரிணமிக்கிறது. இதுவே, தேசிய இனம் எனப்படுகிறது.
வரலாற்று வளர்ச்சியால் உள்வாங்கப்படாத சில சிறு சிறு பழங்குடிகள் தவிர, உலகில் வாழும் மக்கள் சமூகம் அனைத்தும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி, மரபினமாக அல்ல.
இவ்வாறே தமிழ்ச் சமூகமும், தமிழ்த் தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்கு மொழியும், வாழ்நிலமும் முதன்மையான காரணிகளாய் அமைகின்றன.
ஐரோப்பா il கிறித்துவர்கள், மேற்கு ஆசியாil இஸ்லாமியர்கள், இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்றும் பல்வேறு சாதியினர் எவருமே மத அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கவில்லை. மாறாக, தேசிய இன அடிப்படையிலேயே ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
[/color]
ஆக, மொழி அடையாளம் உலகில் பரவலாக மட்டுமில்லாமல், ஏற்கத்தக்க ஒன்றாகவும் உள்ளது. மாந்தனில் இயல்பும் மொழியால் அடையாளப் படுவது.
[quote]...் ஒடுக்கு முறையானாலும், உரிமைப் போராட்டங்களானாலும், மக்கள் சமூகங்களுக்கிடையே நிகழும் மோதல்களானாலும், பெரும்பாலும் அவை தேசிய இன அடிப்படையிலேயே நிகழ்கின்றன. ... உலகெங்கும் நடைபெற்றிருக்கும் போராட்டங்களை, கலவரங்களை நோக்கும்போது, இந்த உண்மையை உணர முடியும். இதில் விதி விலக்காக சில அமையலாம். அது பொதுப் போக்கு அல்ல. எந்த ஒரு தேசிய இனத்தையும் அடிமைப்படுத்த, மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும், அதன் அடையாளத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது ஆதிக்க சக்திகளின் கோட்பாடாக இருக்கிறது. ...
[quote]
அடையாள அழிப்பு முயற்சிக்கு, மக்கள் உட்படாது, <b>விழிப்புற்று தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க முனையும்போது,</b> ஆதிக்க சக்திகள் அவர்கள் மீது நேரடி நடவடிக்கைகளில் இறங்குகின்றன. <span style='font-size:25pt;line-height:100%'>பிராந்திய வெறியர்கள், குறுகிய நோக்குடையோர்கள், பிரிவினைவாதிகள் என்னும் சொல்லாடல்களால் அழைத்து, அவர்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களை ஏவுகின்றன. சிறைப்படுத்தி ஒடுக்குகின்றன. தேவைப்பட்டால், ‘மோதல் கொலைகள்’ என்கிற பெயரில் தீர்த்துக் கட்டவும் செய்கின்றன.</span>
அப்ப, இந்த முசுலீம் தனி அலகுக் கோரிக்கையும் (சிங்கள) ஆதிக்க வல்லமைகளின் இவ்வகை நுட்பமோ?
[quote] ... ஆதிக்கங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்களை, மக்கள் தங்கள் நலன் காக்கும் கருத்தாக்கங்கள் போல் நம்பி, அது சார்ந்த மதிப்பீடுகள், அபிப்ராயங்களை தாங்களும் கைக்கொண்டு, ஆதிக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதுடன்,...
மக்கள் தாங்கள் பாதுகாக்க வேண்டிய அடையாளங்களை அழிக்கவும், அழிக்க வேண்டிய அடையாளங்களைப் பாதுகாக்கவுமான தவறான உளவியலுக்கும், உணர்வுகளுக்கும் உள்ளாகி வருவதால், இவ்வடையாளங்கள் சார்ந்து, விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது, இது சார்ந்து இயங்குபவர்களுக்கு முன்னால் உள்ள முக்கியப் பணியாக இருக்கிறது.
Quote: சில அடையாளங்கள் மனிதனுக்குத் தேவையற்றவை, மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை என்பது பற்றிய கவனமும் தேவை. எடுத்துக்காட்டாக, சாதி மத அடையாளங்கள் ஒரு மனிதனுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இவை மனிதர்களுக்குள்ளே பகைமையையும், மோதலையும் தூண்டி, அப்பாவி மக்கள் பலரை பலி கொள்கின்றன என்பதைத்தான் நடைமுறையில் பார்க்கிறோம்.இறைநெறி என்பது, மாந்தனுக்கு மேம்பாட்டை அளித்தாலும், அதை முதன்மையான அடையாளமாகக் கொளல் தேவையற்றதும் தீங்கு தருவதுமாகும். வடகிழக்கு முசுலீம்கள் இதை உணர்வரோ?
Quote:மொழி அடையாளம்கூடத்தான் பல நேரங்களில் மோதலை உருவாக்குகிறது; ஆகவே, அதையும் அழித்து விடலாமா என்று சிலருக்குக் கேட்கத் தோணலாம். இதற்கு மனித அடையாளங்கள் குறித்து வேறு சில உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.இப்பொழுது அட மொழிகூடத்தானே... என வாய்திறப்பவர்க்கு மேலே உள்ள இ.சோ வின் வரிகள் விடையிறுக்குமென நம்புகிறேன். :mrgreen:
மனிதனை அறியப் பயன்படும் தோற்ற அடையாளம், பெயர், மொழி என்பவை இழக்கச் சாத்தியமற்றவை. ஒன்றை மாற்றினாலும், இன்னொன்று வாய்த்தே தீரும். ஆனால், சாதி, மதம் இல்லாமலும் மனிதன் வாழ முடியும். பலர் வாழ்ந்தும் கொண்டிருக்கிறார்கள். எனவே, மொழி அடையாளத்தை சாதி மத அடையாளத்துக்கு நிகரானதாகக் கொள்ள முடியாது.
Quote:எம்மொழி பேசும் மனிதன் என்பதே ஒருவனை உலகப் பொது மனிதனிலிருந்து தனியாகப் பிரித்து, அடையாளப்படுத்தி, அவனது சமூக இருப்பை வெளிப்படுத்துகிறது. மனிதனைக் குறிப்பாகச் சுட்டுவதே மொழி அடையாளம்.
Quote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு’ என தங்களுக்கென்று தனித்த மொழி அடையாளத்தை ... கொண்டு, வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம்.அஃதாவது, சிறிலங்கன், இந்தியன், இறைநெறி அடையாளங்கள் (முசுலீம் உட்பட), போன்ற அடையாளங்களை விட "நாம் தமிழர்" எனும் தொன்மையானது.
Quote:... எப்படிப்பட்ட மொழியின், மரபின், பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம் என்கிற நமது அடையாளத்தை உணர்த்தவும், அதற்காகப் பெருமிதம் கொள்ளவும், அந்த அடையாளத்தை நவீனகால சமூக வளர்ச்சிற்கேற்ப மீட்டெடுக்கவும், பாதுகாக்கவுமான உணர்வைப் பெற வேண்டும் ... மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு ... ஏன் சாத்தியப்படாது என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.சிந்தித்துச் செயற்படுவார்களாக.
இராசேந்திரசோழனின் மேற்கூறிய கட்டுரை (kumudam.com) இல், தீராநதியில் உள்ளது. நன்றி குமுதம்.
-

