02-20-2004, 04:58 PM
ஆமாம் ஏன் இப்படி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நியாயத்தை சொல்ல ஓரிரு வரிகளே போதுமே?
BBC Wrote:Eelavan Wrote:பாராட்டுக்கள் B.B.C குட்டிக்கதைக்கு
ஆனால் கதையை இப்படி திருத்தி எழுதுங்கள்.
தந்தை இறக்கும் தறுவாயில் கடைக்குட்டி பால்குடி பெரியண்ணாவின் மடியிலும் சின்னண்ணணின் தோளிலும் தொங்கிக்கொண்டிருந்தான் சரியாக தவளக்கூட தெரியாது
இந்த வேளையில் நிலத்தில் எப்படி அவனுக்கு பங்கு ஒதுக்கலாம அப்பா யோசித்தார் பெரியவனும் சின்னவனும் வளர்ந்துவிட்டார்கள் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நியாயம் கடைக்குட்டி எனது பிள்ளை என்றாலும் நிலத்தை வைத்து எதுவும் செய்யமாட்டான் எனவே நிலத்தை பெரியவனிடமும் சின்னவனிடமும் ஒப்படைத்து விட்டு கடைக்குட்டியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்
ரொம்ப லேட்டா பதில் சொல்லுறேன் மன்னிக்கணும் பொஸ். கடைக்குட்டி பால்குடின்னு நீங்க சொன்னா சின்ன அண்ணனுக்கு கடைகுட்டிய விட ரொம்ப வயசு கிடையாது. பெரியண்ணன் ஒருத்தர் தான் பெரியவர்.
அப்பா சொத்தை பெரியவன் கிட்ட தான் குடுத்துட்டு போனார்.
Eelavan Wrote:சின்னவருக்கு ஒரே தலையிடி கடைக்குட்டிதனே அடிக்கவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை கடசியில் பொறுக்கமுடியாமல் வீட்டை விட்டுப் போகும் படி கடைக்குட்டிக்கு சொன்னார் அத்துடன் இந்த வீட்டில் இருப்பதெல்லம் எனது சொத்து எதையும் நீ எடுக்க கூடாது எல்லாம் நான் கஸ்டப்பட்டு சம்பாதித்தவை
அதுல கடைக்குட்டி சம்பாதித்ததும் இருந்தது. 24 மணி நேரத்தில போனதால எடுக்கலை. எடுக்கவும் விடலை.
அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது.
[quote=Eelavan]
இந்த சின்னவரின் காணியில் தென் கிழக்கு மூலையில் சின்னதாக பாத்தி கட்டி கடைக்குட்டி மிளகாய் வளர்த்து வந்தார் அதே போன்று மேற்கு கரையோரம் சின்னவர் தம்பி விவசாயம் செய்யவும் அனுமதித்திருந்தார் அதே போன்று பெரியவரின் காணிக்குள் கடைக்குட்டியின் மிளகாய்த் தோட்டங்களும் வயல்களும் இருந்தன அவை அளவிலும் பெரியவை இதெல்லாம் இருவரும் விபரம் தெரிந்த காலத்திலிருந்தே நடந்து வருபவை
வீட்டை விட்டு வெளியேரிய கடைக்குட்டி தான் இதுவரை காலமும் சின்னவருக்கெதிராக மறைமுகமாக செய்த வேலைகளை மறைமுகமாக செய்ய ஆரம்பித்தார் தான் இதுவரை செய்த மிளகாய்த்தோட்டம் தவிர காய்கறித்தோட்டம் அது இது என்று போட்டு தென்கிழக்கு மூலையை ஆக்கிரமித்துகொண்டார் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் கடைக்குட்டி தோட்டம் செய்ய சகல உத்வியும் வழங்கியதோடு தனது காணி எல்லையை சின்னவரிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார் கடைக்குட்டியும் சின்னவரிடம் இருந்த கோபத்தை சின்னவர் வளர்க்கும் நாய் கோழி முதலியவற்றை அழித்து தீர்த்துக்கொண்டார்
அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது. சின்னவரும் கடைக்குட்டியோட நாய் கோழி முதலியவற்றை அழித்தார்.
[quote=Eelavan]
சின்னவருக்கு இவ்வளவு காணியும் போகக்கூடது என்ற நோக்கத்துடன் பெரியவரும் அவனும் அபா பிள்ளை தானே அவனுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் தானே என்று ஊர் பெரிய மனிதர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார் உண்மையில் சின்னவருக்கு கிடைக்க இருப்பதோ 1/3 பங்குதான் அதிலும் கடைக்குட்டி பங்கு கேட்டால் தனக்கு என்ன மிச்சம் என்பது சின்னவரின் ஆதங்கம் வேண்டுமானால் பெரியண்ணன் வைத்திருக்கும் பெரிய காணியில் பங்கு கேட்கட்டுமேன் அவன் செய்து வரும் பெரிய தோட்டங்கள் அங்குதானே இருக்கின்றன இது சின்னவர் வாதம்
பெரியவர் பார்த்தார் சின்னவனிடமிருந்தே காணிகளை ஆக்கிரமித்த எனக்கு இந்த கடைக்குட்டி எம்மாத்திரம் அதனால் கடைக்குட்டி கேட்பதெல்லாவற்றுக்கும் தலையாட்டியவாறே சின்னவரின் காணியில் பங்கு பிடுங்கி கடைக்குட்டிக்கு கொடுப்பதில் குறியாக இருக்கிறார் கடைக்குட்டி வாங்குவதை வாங்கட்டும் அப்புறம் அவனிடமிருந்து நாம் எல்லாவற்றையும் தான் பறித்துக்கொள்ளலாம் என்பது பெரியவர் திட்டம்
இது தெரியாத கடைக்குட்டி தனக்கு சொந்தமில்லாவிட்டாலும் தான் தோட்டம் செய்த காரணத்துக்காக தனக்கு தென்கிழக்கு மூலையை பிரித்து தரவேண்டும் என நிற்கிறார்
சரி எங்கே வாசகர்களே உன்கள் கருத்தை சொல்லுங்கள்.
சின்னவர் தம்பி செய்த அனியாயங்களை மன்னித்து பழகியபடி அரவணைக்க தயார் ஆனால் இவர் போக மாட்டேன் என்கிறார் இது நியாயமா?
அப்படித்தான் அவனும் பிள்ளைதானே அவனுக்கும் அப்பா சொத்தில் பங்கு உள்ளதுதானே என்று நியாயம் தான் ஆனால் அதனை பெரியவர் வைத்திருக்கும் பெரிய காணியில் கேட்கவேண்டியதுதானே ஏன் ஏற்கனவே துண்டாடப்பட்டிருக்கும் சின்னவர் காணியில் கேட்பான்?
நியாயப்படி பெரியவர் சின்னவர் பங்கு பிரிக்கும் இடத்தில் இவருக்கு இடமும் இல்லை அவசியமும் இல்லை இது யார் யார் அப்பா பிள்ளை என்ற பிரிப்பு இல்லை இது சின்னவனுக்கு எந்தெந்த காணிகள் சேரவேண்டுமென பெரியவர்கள் பிரிக்கும் பங்கு கடைக்குட்டி கைகட்டி வேடிக்கை பார்க்கலாம் அல்லது இதைவிட்டால் தனக்கு காணி கிடைக்காது என்று தெரிந்தால் பெரியவரின் காணியில் தனது பெரிய தோட்டம் இருக்கும் இடமாக பார்த்து அது தனக்கு வேண்டுமென்று பெரியவரிடம் கேட்கட்டும் சண்டை பிடிக்கட்டும் பெரியவருடன் சண்டைபிடிக்க பயமாக இருந்தால் அவர் தருவதை வாங்கிக்கொண்டு இருக்கட்டும் அது சின்னவர் கவலை இல்லை அவன் பங்கு கேடட்டும் அவனுக்கு உரிமை இருக்கு இல்லை எல்லாம் இவரது கவலை இல்லை தனது காணியில் பங்கு கேட்டால் தரமுடியாது இது சின்னவர் வாதம்
பெரியவர் வைச்சிருக்குறதிலயும் கடைக்குட்டியோட காணி இருக்கு, சின்னவர் வைச்சிருக்கிறதிலையும் கடைக்குட்டியோட காணி இருக்கு.
இப்போ சின்னவருக்கு காணி பிரிக்கிறதால அதுல இருக்கிற பங்கை கேக்கிறார்.
BBC Wrote:யாழ்/yarl Wrote:http://www.yarl.net/?q=node/view/50
<b>பேசாப் பொருளை பேச துணிதல்</b>
தமிழர், முஸ்லிம்கள் உறவுகள், ஊடாட்டங்கள் பற்றிய ஒரு சிந்திப்பு
ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும். அந்த ஒரு நிலைப்பாட்டிýல் இருந்தே; கடந்த இரண்டு வருடங்களாக படிýப்படிýயாக கீழேயே நோக்கிச் செல்லும் தமிழ்- முஸ்லிம் உறவுகள் பற்றி பேசாமல் இருக்க முடிýயாத ஒரு காலகட்டமாக தற்போதுள்ள தேர்தல் சூýழல் அமைந்துள்ளது.
தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்ட நிலையில் இன்றுள்ள நிலைமையை காய்தல், உவத்தல் அற்ற முறையில்; அதாவது, 'பிணியறி" கண்ணோட்டத்தில் வெளிப்படையாக எடுத்துக் கூýறுவது முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும்.
இந்தக் கடமையில் இறங்கும்போது தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்டத்தை எந்த அடிýப்படையில் பார்ப்பது என்பது அச்சாணியான ஒரு விடயமாகும்.
<b>முதலாவது, இரு பகுதியினரையும், தனித்தனி இனக் குழுமங்களாகக் கொள்வதாகும்.அதில் எவ்வித சந்தேகமும் இருத்தல் கூýடாது.
இரண்டாவது, இவர்கள் ஒரே தாய்மொழியைக் கொண்டவர்கள் என்பதாகும். மொழி அடிýப்படையில் மக்களை இனங்கானும் சூýழல்களில் இது ஒரு மிகவும் சிக்கலான விடயமாகும்.
மூýன்றாவது, இந்த மொழி நிலையும், வாழ் பிரதேச நிலையும் ஒரு முக்கிய பிரதேசத்தில் (வட, கிழக்கில்) ஒன்றாகவே உள்ளது. உண்மையில் இந்த அம்சமே பிரச்சினையின் உக்கிரப்பாட்டிýற்கான காரணமாகும்.
நான்காவது, மொழி ஒருமை வழியாக வரும் பண்பாட்டுரிமையைப் பேனுதல் அவசியமாகும்.
ஐந்தாவது, இலங்கையின் இனக்குழும வரலாற்று நிலை நின்று நோக்கும்போது, இந்த இரு பகுதியுமே இன்னொரு பகுதியினரால் பாதிக்கப்பட்டவர்களேயாவர்.
இந்த இனக்குழுமங்களினை நோக்கும்போது இதுவரை பார்த்தவற்றிலிருந்து இரு விடயங்கள் முக்கியமானதாகும். ஒன்று, இவர்களின் தனித்துவம், அடுத்தது, இவர்களின் வாழ்புல ஒருமை.
இந்த வாழ்புல ஒருமை பற்றி ஒரு மிகச் சிறிய குறிப்பினைக் கூýறுதல் அத்தியாவசியமாகிறது. [b]வாழ்நிலை ஒருமை காணப்படும் இடமாக வட, கிழக்கு மாநிலத்தைக் கொள்வதற்கான காரணம், மற்றைய மாநிலங்களில் இவர்களுக்கு சமத்துவமான பராமரிப்பு இல்லாது இருந்தமையும், அது தொடர்ந்தும் உள்ளமையும் ஆகும்.பின், அது மாத்திரமல்லாமல் வட, கிழக்கிற் கூýட சில எல்லைப் புறங்களில் இருப்பு பலத்தை இழந்துள்ளமை ஆகும். கிழக்கெல்லை உட்பட. எனவே, இப் பிரச்சினையை நாம் அனுகுவது, அனுக வேண்டுவது வட, கிழக்கில் இவர்களுக்குள்ள வாழ்புல ஒருமையைப் பேனுவதும், அதற்கு மேல் மற்றைய எல்லா இடங்களிலும் மொழி ஒருமையைப் பேனுவதற்குமாகும்.
இந்த அடிýப்படையில் நின்று, கொண்டே நாம் இன்றுள்ள பிணியறி நிலைக்கு வர வேண்டும்.
[b]முதலாவது யதார்த்தம் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். இரண்டாவது, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தைப் பேணக்கூýடிýய ஒரு அரசியல் ஒழுங்கமைப்பினை வேண்டிý நிற்பதாகும். இதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பிரதானமான வருமான நர்;டங்களாகும்.</b>
இக்கட்டத்திலே ஒரு ஜீவாதாரமான உண்மையைக் குறிப்பிடல் வேண்டும். இந்தக் கருத்தாடலுக்கே அத்திவாரம் அதுதான். அதாவது, இந்தப் பிரச்சினைகளை நாங்கள் இப்போது ஆராய்வதற்கான காரணம், இருக்கின்ற இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும், இனிமேல் அத்தகையன தோன்றாது தடுப்பதுமாகும்.
இவற்றைத் திரும்பத் திரும்ப பேசுவது ஏற்கனவே புண்ணாக உள்ள இடத்தை மேலும் வெட்டுக் காயத்திற்கு உள்ளாக்குவதற்காகவல்ல.
<b>இன்றுள்ள இன்னொரு மிகச் சிக்கலான அரசியல் நிலையையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தமிழர்களிடையே நிலவும் பயம் என்னவென்றால், முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் சில காரணமாக அரசியல் போராட்டம் பற்றிய தமது இலக்கு நோக்கே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது என்பதுதான்.</b>
[b]முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்கள் எதிர்கால அரசியல், வாழ்வியல் ஸ்திரப்பாட்டிýற்கான தடயம் எதையும் தமிழர்களின் நடவடிýக்கையில் காணவில்லை என்பதாகும்.
இவ்விடத்திலேயே அர்;ரப் மறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பிளவுகளின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டிýயுள்ளது.
விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, குறிப்பாக, இன்று, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிலையில் 3 அரசியல் நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. இவற்றினூடே காணப்படும் போட்டிýகள், முஸ்லிம்கள் பாராளுமன்ற அரசியலை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
இவற்றைவிட, உண்மையில் இவற்றிலும் பார்க்க முக்கியமானதாகவுள்ள, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மேல் கிழம்பிவரும் முஸ்லிம் தேசிய நிலைப்பாடாகும்.
தமிழர்கள் தமது ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் நேர்ன் (யேவழைn) எனும் சொல்லிற்கு பயன்படுத்தாத ஒரு சொல்லை 'தேசம்" என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முக்கியமான குரல்.
வட, கிழக்கு முஸ்லிம் நிலைப்பாட்டை சற்று உன்னிப்பாக நோக்கும்போது இன்னுமொரு அம்சமும் புலனாகிறது. அது வடபுல முஸ்லிம்கள் பற்றியதாகும். அவர்களுக்கான தலைமைத்துவக் கோரிக்கைகள் அடிýக்கடிý செய்யப்படுவதுண்டெனினும், உண்மையில் அவர்களுக்கு அசைவியக்க பலமுள்ள ஒரு அரசியல் தலைமை இன்னுமில்லை என்பதேயாகும்.
தமிழ்த் தரப்பு நிலைப்பாடுகளைப் பற்றிய சிந்திப்பில் இறங்கும் போது இந்த விடயத்தை மிகுந்த நிதானத்துடனும், நல்லெண்ண உணர்வுடனும் நோக்குதல் அவசியமாகும்.
வடபுல முஸ்லிம்கள் இன்று அகதிகளாக வாழ்ந்தாலும், அவர்கள் மற்றைய பகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளோடு தமது பிரச்சினைகளை இணைத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு முக்கிய உண்மையாகவே சொல்லப்பட வேண்டும்.
வட, கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவு ஊடாட்ட விடயத்தில் தமிழ்த் தரப்பு தமது நல்லெண்ணத்தை நன்கு புலப்படுத்துவதற்கான, அந்த நல்லெண்ணத்தின் செயல் விளக்கமாக அமையக் கூýடிýய பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக ஏற்கனவே, ஒத்துக்கொள்ளப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடிýயிருத்துகைகளை திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் பங்கேற்புடன் நிறைவுறச் செய்ய வேண்டிýயதற்கான கருமங்களில் முன்னிற்பதும், முனைந்து செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூýலம் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கான ஒரு நல்ல சூýழல் உருவாகும்.
கிழக்கிற்கு வரும்பொழுது நிலைமை சற்று வித்தியாசப்பட்டிýருப்பதை அவதானிக்கலாம். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையில் மிக முக்கியமான அதேவேளையில், ஒளிவு மறைவற்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிýயதுமான உண்மை என்னவெனில், அங்கு தமிழர்கள் சம்பந்தமான ஒரு அரசியல் குரோத உணர்வு முஸ்லிம்களிடையே வளர்க்கப்பட்டிýருப்பதாகும். அங்குள்ள அரசியற் பன்முகப்பாடும், அதன் காரணமாகத் தோன்றிய தெளிவற்ற நிலைமைகளும், இதனைச் சுலபமாக்கிவிட்டன.
தென்னிலங்கை சிங்கள நிலைப்பாட்டு அரசியல், இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தேச மட்டத்திலுள்ள ஆங்கில, சிங்கள பிரதான ஊடகங்கள் இச்சூýழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.
இத்தகையதொரு சிக்கலனா நிலைக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ்தரப்பு உள்@ýர் மட்டங்களிலுள்ள சமய, சமூýக தலைவர்களுடன் ஒன்றிணைந்து சில அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன.
இது ஒரு நல்ல முறையே என்றாலும், மேலாண்மையுடன் கட்டிýயெழுப்பப்பட்டுள்ள ஊடக மனப்பதிவுகளுக்கு எதிராக, இந்த நடவடிýக்கைகள் முக்கியத்துவம் பெற முடிýயாமலே போகும். எனவே, உள்@ýர் மட்டங்களில் தொழிற்படும் போதும், பிரதேச முக்கியத்துவம் உள்ள சமூýக சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இவை யாவற்றிற்கும் மேலாக, இந்த துரதிர்;டவச உறவு சீர்கேடு காரணமாக, இப்பொழுது ஏறத்தாழ மறக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள (அ)வடக்கு, கிழக்கு பிரதேச அரசினதும் (ஆ) கிழக்கு மாநிலத்தை அந்த அரசிலிருந்து பிரிக்கக் கூýடாததற்குமான இலங்கை அரசியல் யதார்த்தத்தை மறக்காமல் இருப்பதாகும்.
அதாவது, கல்லோயா, அம்பாறை உருவாக்க காலத்து அரசியலை மீள நினைவுறுத்தல் வேண்டும். இந்த உண்மை உணரப்படுமேயானால், வடக்கு, கிழக்கு அலகிற்குள்ளேயே கிழக்கின் உடைவும், பிரிபாடும் தவிர்க்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால், வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ர்;டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது.
கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகளை பெரிதுபடுத்தும் சக்திகள், இவர்களை ஒன்றாக இணைத்துள்ள பந்தங்களை மறந்தே தொழிற்படுகின்றன. அந்த இணைப்புகளை வலியுறுத்துவது நம் எல்லோரினதும் கடமையாகும்.
இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிýய முக்கியமான விடயம், இன்று அந்த உறவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மையாகும். பலவீனமான நிலையில் சிகிச்சை தேவை, மருந்துகள் தேவை.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்- தமிழ் உறவுகளை ஆராயும் இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியலின் இன்னொரு முக்கிய யதார்த்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். [b]அதாவது, இலங்கை முஸ்லிம் சனப்பரவலில் நிலம் சார்ந்த உழைப்பினையுடைய முஸ்லிம்கள் பிரதானமாக வட, கிழக்கிலேயே உள்ளனர். மற்றைய இடங்களில் அவர்களது பிரதான தொழில் வணிகமாகும். அதன் காரணமாக, அப்பிரதேசங்களில் (புத்தளம் நீங்கலாக) தமது தனித்துவத்தைப் பேனுவது சிரமம். இதனால், வடக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் கூýட குறிப்பாக, கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை பற்றி அதிக சிரத்தை செலுத்துவர். கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல் சக்தியே இலங்கை முஸ்லிம்கள் எல்லோருக்குமான பயமற்ற குரலாக ஒலிக்க முடிýயுமென்ற உண்மையை காலஞ்சென்ற அர்;ரப் எடுத்து நிறுவினார்.
கிழக்கு மாகாணத்தில் பலமாக இருக்கும் முஸ்லிம் கட்சியால் மாத்திரமே இலங்கை முஸ்லிம் சகலருக்குமாக பயமற்றுப் பேச முடிýயுமென நிலைநாட்டிýயவர் அவர்.
இந்த அரசியல் உண்மை மிக முக்கியமானதொன்றாகும். தமிழர் வடக்கு, கிழக்கிற்கு வெளியே மலையகம் தவிர, அரசியல் பலமற்றவர்களே. இந்த உண்மை காரணமாகவே தமிழர் அரசியலில் வடக்கு, கிழக்கு பெறுகின்ற அழுத்தம் போன்ற ஒரு அழுத்தத்தை முஸ்லிம்களும் கோருவது, வடக்கு, கிழக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதிக்கும் நிலைமைகளை ஏற்படுத்தலாம். இதனால்தான் வட, கிழக்கிற்குள் மாத்திரம் நின்று, அதற்குள் முஸ்லிம்கள் பெறும் இடத்தை நிர்ணயிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலைமைக்குச் சிரமமாகவுள்ளது. இந்த வெளிப்பாடுகளையும் நாம் காணக்கூýடிýயதாகவேயுள்ளது.இந்தக்கட்டத்தில் தான், தமிழர்கள் முஸ்லிம்களிடமிருந்து மொழிநிலை ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கின்றனர் எனலாம்.
இலங்கை தமிழர், முஸ்லிம்களின் உறவில் ஒரு பரஸ்பர நல்லுறவு அவசியம். அது இல்லாவிடிýல், இந்த இரண்டு இனக் குழுமங்களுக்குமே அரசியல் சிரமப்பாடுகள் தவிர்க்கப்பட முடிýயாதவை ஆகிவிடும்.
தினக்குரல் 15.02.04
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

