Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களத்தில் ஆங்கிலம்: தெளிவுறுத்துக!
#1
யாழ்க் களத்து விதிமுறை ஆறின்படி (6):
"6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். "

வேற்று மொழியினை தமிழெழுத்துருபில் எழுதினாலும் அது பிறத்திதானே (வேற்றுமொழி தானே). ஆகையால் ஆங்கிலத்தைத் தமிழில் தேவையின்றி எழுதுவது குற்றமன்றோ! அப்படியிருக்கையில் ஏன் இவ்விதியை மட்டுறுத்துநர்கள் வலியுறுத்துவதில்லை? இக்களத்தினைத் தமிழ்க்களமாக வைத்திருக்க இவ்விதி இன்றிமையாததொன்றல்லவா?

என்றன் கருத்துடன் வேறுபடின், என்னைத் தெளிவுறுத்துங்கள், இலையேல் இவ்விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுங்கள்.

அதோடு எனக்கொரு ஐயம், தமிங்கலத்தை இவ்விதியின் கீழ் வேற்று மொழியெனக் கருதுகிறீர்களா? ஆமெனில் இவ்விதியை மீறியத்தற்காக நடவடிக்கை எடுங்கள், இலையேல் தமிங்கலதை மட்டுப்படுத்த புது விதி எழுதுமாறு வேண்டுகிறேன்.

இதில் மற்ற உறுப்பினர்களின் கருத்து என்ன? Idea

-
Reply


Messages In This Thread
களத்தில் ஆங்கிலம்: தெள - by Kanakkayanaar - 02-20-2004, 02:32 AM
[No subject] - by Paranee - 02-20-2004, 07:56 AM
[No subject] - by kuruvikal - 02-20-2004, 09:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)