![]() |
|
களத்தில் ஆங்கிலம்: தெளிவுறுத்துக! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: களத்தில் ஆங்கிலம்: தெளிவுறுத்துக! (/showthread.php?tid=7448) |
களத்தில் ஆங்கிலம்: தெள - Kanakkayanaar - 02-20-2004 யாழ்க் களத்து விதிமுறை ஆறின்படி (6): "6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். " வேற்று மொழியினை தமிழெழுத்துருபில் எழுதினாலும் அது பிறத்திதானே (வேற்றுமொழி தானே). ஆகையால் ஆங்கிலத்தைத் தமிழில் தேவையின்றி எழுதுவது குற்றமன்றோ! அப்படியிருக்கையில் ஏன் இவ்விதியை மட்டுறுத்துநர்கள் வலியுறுத்துவதில்லை? இக்களத்தினைத் தமிழ்க்களமாக வைத்திருக்க இவ்விதி இன்றிமையாததொன்றல்லவா? என்றன் கருத்துடன் வேறுபடின், என்னைத் தெளிவுறுத்துங்கள், இலையேல் இவ்விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுங்கள். அதோடு எனக்கொரு ஐயம், தமிங்கலத்தை இவ்விதியின் கீழ் வேற்று மொழியெனக் கருதுகிறீர்களா? ஆமெனில் இவ்விதியை மீறியத்தற்காக நடவடிக்கை எடுங்கள், இலையேல் தமிங்கலதை மட்டுப்படுத்த புது விதி எழுதுமாறு வேண்டுகிறேன். இதில் மற்ற உறுப்பினர்களின் கருத்து என்ன?
- Paranee - 02-20-2004 தமிழ் வாசத்துடன் மட்டும்தான் இருந்தது. கடந்த சில வாரங்களாகத்தான் திமிங்கிலம் இல்லை தமிங்கிலம் புகுந்துள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையை நிர்வாகத்தினர் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது - kuruvikal - 02-20-2004 கணக்கயனாரின் கருத்துடன் எங்களும் உடன்பாடு உண்டு...எங்களுக்கும் தமிங்கிலம் நல்லாத் தெரியும்....ஏன் யாழ்ப்பாணத்தமிழ் கொழும்புத்தமிழ் மலையகத்தமிழ் தமிழ்நாட்டுத்தமிழ் இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்....ஆனால் இயன்றவரை தெளிந்த தமிழில் எழுதுவது என்று நினைத்தால் களத்தில் நிகழும் மாற்றங்களும் போக்குகளும் எங்களையும் அப்படியான பல நிலைத் தமிழ் எழுத தூண்டுகின்றன...இதை நாம் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி இருந்தோம்....இங்கு தமிங்கிலம் எழுதுபவர்களுக்கு தெளிவாக தமிழ் எழுதத் தெரிந்தும் கள விதியில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர்.....! இதை உரிய நேரத்தில கருத்தில் எடுக்காவிட்டால் இக்களத்தின் தனித்துவம் விரைந்து இழக்கப்படலாம்....! :twisted: :twisted:
|