02-19-2004, 08:53 PM
BBC Wrote:shanmuhi Wrote:<b>திருமணம் முடிக்காதஇளம் பெண் தனியே வாழ்வது இதனை முன் வைத்ததற்கான காரணம். எம் இளம் சமுதாயத்தினர் படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி, தொழில் என்று தனியே வாழ முற்படும் போது நடைமுறை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி சற்றே ஆராய்வதற்காகத்தான்.</b>
உண்மை தான், ஆனா கருத்து எழுதுறவங்க சரின்னு தப்புன்னும் சொல்றவங்களா பிரிஞ்சுபோயிட்டாங்க. தப்புன்னு சொல்றவங்களும் இருக்கிறார்கள் என்பது ரொம்ப கவலைக்குரிய விசயம்.
shanmuhi Wrote:இப்படிப்பட்ட பெண்கள் இளைஞர்களுக்கு டைவோர்ஸ் கொடுத்து விடுவார்கள் என்றும்
குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்பாலும் கோர்;ட்டில் வந்து நிற்பார்கள் என்றும்
நாணயம் கட்டாத வண்டில் மாடுகள் என்றும்
என்றும்
இப்படி பலவிதமான கருத்துக்கள்.....
படித்த/சுயமா வாழ்கையை நடத்த கூடிய பெண்களை பெரும்பாலான ஆண்கள் விரும்பல என்பதைதான் இது காட்டுது. பெரும்பாலான ஆண்கள் உலககமறியாத அடக்கி வைத்திருக்ககூடிய பெண்களை தான் விரும்புறாங்க என்றது கசப்பான உண்மை.
shanmuhi Wrote:தனித்து வாழும் இளம்பெண்ணை வேடதாரிகள் என்று
ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு ஏன் சித்தரிக்கப்படுகிறது. அது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் அதுமட்டுமல்ல
உண்மை. பெண்கள் பத்தின ஆண்களின் பார்வையில நிறைய மாற்றம் தேவை.
shanmuhi Wrote:தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்
தலைப்புக்குள் அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை. யாழ்களத்தில் எத்தனை தலைப்புக்கள் தலைப்போடு. அலசப்படுகின்றன
இந்தக் கருத்து மட்டும் ஏன் தவறப்பட்டுள்ளது.
விந்தையிலும் விந்தை....
உண்மை தான். இது ஒரு நழுவல்தான்.
ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட பழக்கம்.. பிள்ளைகள் படித்துமுடித்து வேலைசெய்யத் தொடங்க.. முதலில் அவர்கள் சிந்திப்பது வேலைக்கு கிட்ட.. பெற்ரோரின் கண்ணானிப்பிலிருந்து சற்று எட்ட.. சிறிது தூரத்தில் தமக்கென ஒரு Flat வேண்டுவது..
இதை விரும்பாதோர் தாய்மாரேயன்றி தகப்பன்மாரல்ல..
பிள்ளைகள் நாடுவது சக உழியர்கள்.. சக மானவ மாணவியருக்குச் சமமான போட்டியான வாழ்க்கை.. நல்லதோ கெட்டதோ நடைமுறைக்கு வந்துவிட்டபின் சரியா பிழையா அலசி என்ன பயன்..?
மேலும் நாட்டு சட்டதிட்டங்கள் நன்கே அறிந்தவர்கள் நம் பிள்ளைகள்.. அவர்களை சிறுவர்கள்போல பராமரிப்பது முடியாதகாரியம்..
பொதுவாக பிள்ளைகள் என்று எழுதியதன் நோக்கம்.. அம்மாக்கள் குமருகளை விட பெடியளைத்தான் தங்கள் சேலைத்தலைப்பிலை முடிஞ்சு வச்சிருக்க ஆசைப்படுறினம்.. ஒருவேளை சீதணம் வேண்டுற ஆசையோ.. என்னவோ..
பெடியளுக்கும் சமையல் பிரச்சனையில்லையே.. எண்டு வலு சந்தோசம்.. வீடு வேண்டி வாடகைக்கு விட்டிட்டு இருக்கிறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

