02-19-2004, 04:00 AM
நண்பர் B.B.C
நீங்கள் ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் அந்தக்கருத்தின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மையை ஒருதரம் சரி பார்த்துக்கொள்ளுங்கள் எடு கோள்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்
ஒரு தடவை இலங்கையின் குடிசனப் பரம்பல் பற்றிய வரைபடத்தினை எடுத்துப்பாருங்கள் தென் கிழக்கு அலகினை விட பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசிக்கும் இடங்கள் தெரியவரும்
இப்போது தனித்தமிழீழம் என்பது கேள்விக்குறியாகி அதிகாரப்பகிர்வு என்றொரு பேச்சு வந்தததின் பின்னர் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தென் கிழக்கு அலகு என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இது முஸ்லிம் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையே அன்றி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரல் அல்ல ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் தென் கிழக்கு இலங்கையை தளமாக கொண்டு வளர்ந்தது அதாவது முஸ்லிம்களிலும் ஒரு பிரதேசவாதிகளினது ஆதரவுடன் மட்டும் வளர்ந்த கட்சி எனவே மு.கா. சொல்வதை ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் குரல் என்று சொல்லமுடியாது
இப்போது முஸ்லிம்களினது குரல் பல்வேறு பட்டு இருப்பதை பாருங்கள்
காலத்துக்கு காலம் அரசை அமைக்கும் இரு கட்சிகளிலும் அங்கத்துவர்களாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர் இன்றும் இருக்கின்றனர் அவர்களுக்கு தென்பகுதி முஸ்லிம்களிடம் நிறைந்த செல்வாக்கும் இருக்கிறது
அவர்கள் வேண்டுவது நாடு பிரியக்கூடாது இயன்றவரை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுப்போம்
இன்னொரு பகுதி புத்தளம் மற்றும் நாட்டின் மேற்கு கரையோரங்களில் வசிக்கும் யாழில் இருந்தும் வன்னியின் பிற பகுதிகளில் இருந்தும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களின் பரம்பலில் கணிசமான எண்ணிக்கையானோர் இவர்கள் விரும்புவது யாழ்ப்பாணம் திரும்பி சென்று தங்கள் பழைய வாழிடங்களில் வாழ்வது.இவர்களது தலமை புலிகளுடன் பேசி புலிகளினது சம்மதத்துடன் இன்று பலர் மீளக்குடியேறியும் வருகின்றனர் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது அவர்களில் ஒருவருக்கு தமிழ்க்கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை விட புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிலரும் பாராளுமன்றம் சென்றால் முஸ்லிம்கள் தமிழருடன் சேர்ந்திருப்பதையே வலியுறுத்துவர்
மற்றது பிரதேச வாரியாக முஸ்லிம்களின் ஆதரவை வைத்துக்கொண்டு தாம் தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் மு.கா இவர்கள் தாம் வலியுறுத்தும் தனி அலகு என்பதையே வலியுறுத்துவர்
பாராளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்று இதுவரை காலமும் சொல்லி வந்தது மு.கா இன்று உடைந்துபோய் மூன்றாக ஆகிவிட்டது ஒரு பிரிவு தான் கக்கீம் அவர் தனி அலகில் உறுதியாக இருப்பார் மற்றைய பிரிவுகள் ரணிலுக்கோ சந்திரிக்கவுக்கோ முட்டு கொடுக்கும் அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும்
இவ்வாறு முஸ்லிம்களினதும் பல்வேறு பிரதேச வாரியான பிரதிநிதிகள் பலவற்றை கேட்பார்கள் இதில் நாம் எதை செவி மடுப்பது?

\" \"