02-18-2004, 10:18 PM
Eelavan Wrote:வரலாற்றையும் வரலாற்றில் எங்கள் மூதாதையர் விட்ட தவறையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தம்பு
உங்களிடம் ஒரு கேள்வி முதலில் நிகழ்ந்தது மலையள_சிங்கள இனக்கலவரம் என்கிறீர்கள் மலையள என்றொரு இனம் இலங்கையில் இருந்ததா? மலையகத்தமிழர் தானே?
அத்துடன் இனக்கலவரம் பற்றிய தகவலை இங்கே இணைத்திருக்கிறேன்
அவற்றில் நான் சுட்டிக்காட்ட விரும்பும் விடயங்கள்
கலவரம் நடந்த வேளையில் அதற்கும் தமிழருக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை தமிழர் சிங்களவருடன் சேர்ந்து நின்று முஸ்லிம்களை அழிக்கவில்லை.
கலவரம் நடந்த நேரம் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் இக்கலவரத்தில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்ட அநாகரிக தர்மபால,சேனநாயக்க போன்றோர் பௌத்த மதவாதிகளாக மட்டுமல்ல இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுவிக்க போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் அறியப்பட்டவர்கள் சேர்.பொன்.இராமநாதனும் அவர்களுடன் சேர்ந்து போராடிய தமிழ்த்தலைவர்
இந்த இடத்தில் ஒன்றை கவனிக்கவேண்டும் தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லோருக்கும் பொது எதிரி ஆங்கிலேயர் அவர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க போராடியவர்கள் சிறையிலிருந்தால் போராட்டம் தடைப்படும் என்ற காரணத்துக்ககவே சிங்களத்தலைவர்களை விடுவிக்க இராமநாதன் அவர்கள் முயற்சித்து வெற்றியும் கண்டார் முஸ்லிம்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருக்கவில்லை தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சனையும் இருக்கவில்லை இதிலே தப்பபிப்பிராயம் எங்கே வந்தது யார் கொண்டார்கள்?
அப்படியானாலும் முஸ்லிம்கள் கோபப்படவேண்டியது சிங்களவர் மேலன்றி தமிழர் மீது அல்லவே!
.
Kumari Jayawardene in her book on Ethnic and class clashes in Sri lanka wrote:...............
While plantation labour went from India in search of jobs, Anagarika Dharmapala was furious over British for importing untouchables to Sri Lanka. This stands testimony to the anti-dalit mentality of the Sinhalese chauvinists.
The next to be targeted were small traders from Bombay and South India. Buddhist religious leader Anagarika Dharmapala spitted venom in his speeches against North and South Indian traders. The culmination of this hate campaign resulted in wherein numerous lost their lives in 1915.In 1930 Sinhalese chauvinists next ignited their campaign of hate against the 30000 settlers from Kerala. A.E.Gunesingha, a trade unionist groomed by none other than Communist leader A.K.Gopalan launched vituperative attacks through his mouthpiece ”Veeraiyya”
நண்பர் ஈழவன்
நான் குறிப்பிட்ட குமாரி ஜெயவர்தனாவின் இலங்கை வரலாறு மிகவும் பயனுள்ளது......
நீங்கள் குறிப்பிட்டது போல் அநகாரிக தர்மபாலா ஒன்றும் பிரித்தானிய எதிர்ப்புவாதி அல்லர்.....
பொன் ராமநாதன் ஒற்றும் தமிழர் நலன் விரும்பியும் அல்லர்............
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

