02-18-2004, 02:21 PM
யாழ்/yarl Wrote:சேர்ந்திருக்கும் போது இனக்கலவரங்கள் தூண்டப்படலாம்.நடக்கலாம்.
சிறுபான்மையினம் என ஒதுக்கப்படலாம்.அல்லது ஒதுக்கப்படுவதாக எண்ணம் கொள்ளலாம்.பின்னர் பிரிந்துபோகப்போவதாக அடம் பிடிக்கலாம்.
இப்போது தமிழர் சிங்களவர் பிரச்சனைபோல் நாளை கிளர்ச்சி உருவாகி இரு தரப்பிலும் மீண்டும் உயிர்கள் பலியாகலாம்.
அப்படி என்றால் தமிழர்களும் ஆதிக்க வெறியர்கள் என்கிறீர்களா.....?! ஏன் தமிழர்கள் பரந்த அதிகாரப்பரவலின் மூலம் அனைத்துச் சமூகத்தும் சம உரிமையை தமது பாரம்பரிய நிலத்தில் வழங்கும் மனநிலை அற்றவர்கள் என்கிறீர்களா....???!
சரி அப்படித்தான் என்று கொண்டாலும் பிரிந்து போகும் இடங்களில் எல்லாம் தமிழர்கள் மீண்டும் சிறுபான்மை இனமாகி அல்லலுறும் போது அதற்குள் பிரிவினை என்பது ஏற்படாதா.....உயிரிழப்பு நிகழாதா....???!
சிங்களவர்கள் அன்றே அதிகாரங்களை எல்லா இனத்தவருடனும் சம அளவில் பங்கிட்டு வாழ்ந்திருந்தால் இலங்கையில் இனப்பிரச்சனை வந்திருக்குமா.....அப்போ தந்தை செல்வா போன்றோர் கேட்டதெல்லாம் சொன்னதெல்லாம்...வரலாறுகள் பொய்யா....?!
ஏன் அன்றே முஸ்லீம்கள் பிரிவினை கோரிக்கை விடவில்லை....???!
அதேபோல் இன்னொன்றும் உண்மை.... சிங்களவர்கள் தமிழர்களை நம்பும் அளவிற்கு முஸ்லீம்களை நம்பவில்லை.....! ஏன்....???! நிச்சயம் தமிழர்கள் தனி அலகு கொடுக்க முன்வந்தாலும் சிங்களவர்கள் அதற்கு அனுமதியார்.....அப்படி ஒன்று நடந்தால்... சிங்கள தேசம் அதனால் இன்று போலல்லாது அதிகம் பாதிக்கப்படும் காரணம் வடக்குக்கிழக்கை விட தெற்கில் தான் முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர்.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

