02-18-2004, 01:31 PM
யாழ்/yarl Wrote:சேர்ந்திருக்கும் போது இனக்கலவரங்கள் தூண்டப்படலாம்.நடக்கலாம்.
சிறுபான்மையினம் என ஒதுக்கப்படலாம்.அல்லது ஒதுக்கப்படுவதாக எண்ணம் கொள்ளலாம்.பின்னர் பிரிந்துபோகப்போவதாக அடம் பிடிக்கலாம்.
இப்போது தமிழர் சிங்களவர் பிரச்சனைபோல் நாளை கிளர்ச்சி உருவாகி இரு தரப்பிலும் மீண்டும் உயிர்கள் பலியாகலாம்.
உண்மை யாழ். உங்கள் கருத்தை முழுசா ஏத்துக்கிறேன். இதுபோன்ற ஒரு நம்பிகையில்லாத நிலைமையில் அவர்கள் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொன்னால் விட்டுவதே நல்லது. இல்லன் சேர்ந்து தான் இருக்கணும் என்று சொல்லி பயனில்லை. இன்னொரு பிரச்சனையை தாங்கும் அளவுக்கு மக்கள் இல்லை. உள்ள பிரச்சனையை தீர்த்து மக்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எத்தனையோ ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறார்கள். வெளி உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டும். மற்றயவையெல்லாம் அப்புறம் தான், நாமெல்லாம் அந்த பிரதேசங்களுக்கு வெளியால் இருந்து இண்டர்னெட் மூலம் இது ச்ரி அது தவறு என்று சொல்கின்றோம். எத்தனை லட்சம் பேர் அதை பற்றி தெரியாமலே இருக்கின்றார்கள்.

