02-18-2004, 08:34 AM
kuruvikal Wrote:BBC Wrote:shanmuhi Wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது.
இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?
இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?
மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.
அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.
இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க
BBC யின் நிலைப்பாடு இதுதானோ....BBC தெளிந்தவன் தெளிந்தவன் தான்....குழம்பினவனுக்கு உங்கள் கருத்து சிலவேளை பொருந்தலாம்.....!
குருவி, நான் உங்களூக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்தணும். நான் இங்கு எழுதுவதற்கு முன்பு அனைத்து கருத்துக்கும் எதிரா எழுதணும் அல்லது அனைத்து கருத்துக்கும் ஆதரவா எழுதணும் என்று முடிவு செய்யவில்லை. அதேபோல் கருத்து எழுதியிருப்பவரின் பேரை வைத்து அதனை ஆதரிக்கலாமா எதிர்க்கலாமா என்றும் முடிவு செய்யவில்லை. யாராவது எழுதியிருக்கின்ற கருத்து எழுதியிருக்கும் போது அதை படித்து எனகு மனதில் பட்டதை எழுதுகின்றேன். அது சரியான கருத்தாகவோ பிழையான கருத்தாகவோ இருக்கலாம். அதற்கு வரும் விமர்சனங்களை கண்டு அஞ்சுவதில்லை. அதையே தான் சண்முகி அவர்களையும் இந்த கருத்து விடயத்தில் செய்யச் சொன்னேன். விமர்சன்ங்கள் வருவது இயல்பு. பதில் விமர்சன்ங்களே வரக்கூடாது என்று நான் நினைப்பது இல்லை. அதுபோல் நினைப்பதும் தவறு.
நாம் சொன்ன கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் செல்ல சிந்தித்து ஏற்றுக்கொள்வார்கள். நாம் சொன்ன கருத்து தப்பாக இருந்தால் விமர்சனங்களை படித்து என்ன தப்பு என்று புரிந்து கொண்டு ஏற்று கொள்ளவேண்டும்.
தெளிந்தவன் தெளிந்தவன் தான்....குழம்பினவனுக்கு உங்கள் கருத்து சிலவேளை பொருந்தலாம் என்று நீங்கள் சொன்னீர்கள். நாம் எப்போதுமே எல்லாம் தெளிந்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று நினைக்க கூடாது.
கருத்து களத்துக்கு வரும் போது இது இப்படித்தான் இருக்கும் அல்லது நான் சொல்லப்போகும் கருத்து நூறு வீதம் சரியானது என்று முடிவு செய்ய கூடாது. அப்படி செய்தால் நல்ல கருத்துகளை பெற முடியாது. இது கருத்துக்களமாவே இருக்காது. நாம் இங்கு பிரசங்கம் பண்ண வரவில்லை. அது பெரியவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் பண்ணுவது, நாம் அப்படியல்ல. பெரிய அறிவாளிகள்/மகான்கள் சொன்ன அறிவுரைகள் பிரசங்கங்களையே மக்கள் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் யேசுவின் கருத்துக்களையே உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மீண்டும் சொல்கின்றேன் நாம் சொன்ன கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் செல்ல சிந்தித்து ஏற்றுக்கொள்வார்கள்.
இன்னொரு விடயம் இது பட்டி மன்றம் அல்ல, அதனால் நாம் சொன்ன கருத்துக்கு ஆதரவான கருத்துக்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நாமே வெல்லவேண்டும் என்று நினைக்ககூடாது.
நான் ஒரு கருத்தை விவாதித்து சரியான மற்றவர்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன், ஏற்றுக்கொண்டும் இருக்கின்றேன். நீங்களும் அப்படி செய்வீர்கள் என நம்புகின்றேன்,
kuruvikal Wrote:அதுசரி கருவி கொண்டு கருத்தெழுதுவதற்கும் ஆணுரிமை பெண்ணுரிமை மனித உரிமைக்கும் என்ன தொடர்ப்பு...அது மனிதக் கூர்ப்பின் வழிவந்தது...உங்கள் கருத்துப்படி பார்த்தால் ஏதோ பெண்ணுரிமை பேச வெளிக்கிட்டாப் பிறகுதான் மனிதப் பெண்கள் பேச எழுத கூர்ப்படைஞ்சது போலச் சொல்லுறியள்.....! இப்படியுமா பெண்களை மட்டம் தட்டுறது...பாவம் அவங்கள்...பேச வெளிக்கிட்டாங்களோ.....தமிழ் நாட்டுக் கூவம் தோத்திடும்.....கவனம்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆண் பெண் உரிமைகளை பொறுத்தவரை ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பது எனது கருத்து. பெண்கள் பேச ஆரம்பித்தால் தமிழ் நாட்டு கூவம் தோத்திடும் என்பதை நான் எதிர்கின்றேன். அவ்வாறு சொல்வது பெண்களை இழிவு படுத்துவது,
உங்கள் கருத்துக்கு பெண் நண்பிகள் பதில் சொல்லுவார்கள் என் நம்புகின்றேன்
ஆணுக்கு உள்ள சிந்தனை, அறிவு, எல்லாமே பெண்களுக்கும் உண்டு. அவர்களும் நம்மை போல ஒரு சக மனிதப்பிறவி, அதாவது சகி.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->