02-18-2004, 02:24 AM
adipadda_tamilan Wrote:தம்பி நல்லாத்தான் அடிபட்டிருக்கிறார்..BBC Wrote:இன்னைக்கு ஒரு குட்டி கதையோட ஆரம்பிக்கலாம் சரியா.
ஒரு ஊர்ல மூணு சகோதரங்க இருந்தாங்க, அவங்களுக்கு பூர்வீக சொத்தா கொஞ்சம் நஞ்சை புஞ்சை இருந்துச்சு, ஓ நஞ்சை புஞ்சைன்னா என்னன்னு கேக்கிறீங்களா. சரி கொஞ்சம் காணி நிலம் இருந்துச்சுன்னு வைச்சுக்குங்க. இதுல ஊருக்கு தெற்கிலையும் மேற்கிலையும் இருக்கிற நிலம் பெரியண்ணனோடது. வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும் சின்ன அண்ணனோடது. கிழக்கிலை மிச்சம் இருக்கிறது கடைக்குட்டி சின்னத்தம்பியோடது. இந்த காணி நிலங்களை நம்ம பெரியண்ணன் தான் பாத்துக்கிட்டார்.
இப்பிடி இருக்கும்போது பெரியண்ணன் தம்பிகளோட சொத்தை கொஞ்சம் கொஞ்சமா சுரண்ட ஆரம்பிச்சார். தம்பிக்களுக்கெல்லாம் ரொம்ப கவலை என்னடா நம்ம அண்ணன் இப்பிடி பண்றார் அப்பிடின்னு. கொஞ்சநாள் பொறுத்து பாத்தாங்க அப்புறம் தம்பிங்க இரண்டுபேரும் பொறுக்க முடியாம அண்ணன் கூட சண்டை போட ஆரம்பிச்சாங்க.
இதுமாதி சண்டை நடந்துக்கிட்டிருக்கும் போது எப்பிடியோ சின்ன அண்ணனுக்கும் கடைக்குட்டி தம்பிக்கும் மனஸ்தாபம் வந்திருச்சு. அதில இருந்து கடைக்குட்டி அவரோட பெரியண்ணன் கூட சண்டைய நிறுத்திட்டு அவங்க சண்டைய வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.
ஊர் மக்களெல்லாம் இந்த சண்டைய பாத்துட்டு என்னடா ரொம்ப நாளா சண்டை போட்டுகிட்டிருக்காங்களே சரி நாமதான் இத தீர்த்து வைக்கணுமுன்னு போய் பஞ்சாயத்து பண்ணி சொத்த பிரிச்சு குடுக்க முயற்சி பண்ணினாங்க. எதை குடுக்கிறது வாங்கிறதுன்னு பெரிய அண்ணனுக்கும் சின்ன அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை நடக்குது. சின்ன அண்ணன் சொல்றாரு ஊருக்கு வடக்கையும் கிழக்கையும் இருக்கிறது எங்க நிலம் என் கிட்ட குடுத்திருங்க. நானும் கடைசி தம்பியும் சேர்ந்து இருந்துக்கிறோம் அப்பிடிங்கிறான்.
இந்த நேரம் பாத்து கடைசி தம்பி குண்டை தூக்கி போட்டான். எனக்கு என் நிலத்தை தனியா குடுத்திடுங்க அப்பிடின்னு. சின்ன அண்ணனுக்கு ரொம்ப அதிர்ச்சி. என்னடா நம்ம கூட இருந்திட்டு இப்பிடி பண்றானேன்னு. நாமதான் அவனுக்கு சேர்ந்து சண்டை போட்டோம். இவன் சண்டையும் போடலை இழப்புகளையும் சந்திக்கிகலை. சும்மா இருந்து நம்ம சண்டையில குளிர் காஞ்சிட்டு இப்ப பலனை மட்டும் அனுபவிக்க வந்துட்டான் அப்பிடின்னு.
இதெல்லாம் உண்மைதான் ஆனா என்ன செய்யுறது. அவந்தான் சேந்திருக்க மாட்டேங்கிறானே. அவனோட அவன்கிட்ட குடுத்துதான் ஆகணும். இதுக்காக நீ கஸ்டப்படலை, ஏன் கூடசேர்ந்து சண்டை பிடிக்கலை அதனால குடுக்கமாட்டன்னு சொல்ல முடியாது. அப்புறம் பெரியண்ணனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?
<b>இப்ப சின்ன அண்ணன் என்ன பண்ணலாம்?</b>
1) அவங்கூட தனியா பேசி பழசு எல்லாம் மறந்திருவம். பெரியண்ணன் கிட்ட சொத்த வாங்கி நாம இரண்டு பேரும் தனியா இருப்பம். நா உன்னை நல்லா பாத்துபேன்னு சொல்லணும்.
<b>ஆனா அதுக்கு கடைசி தம்பி ஒத்துக்கணும்</b>
இல்லைன்னா
2) சொத்து பிரிக்கும் போது 3 பங்கா பிரிச்சு எடுத்துக்கணும்
அப்பிடியும் இல்லைன்னா
3) <b>பெரியண்ணன்கிட்டை இருந்து தன்னோட (வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும்) சொத்தை மட்டும் பிரிச்சு வாங்கிக்கணும். மத்ததை என்ன சரி பண்ணுங்கடான்னு விட்டுடனும். மத்தவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாலும் சரி இல்லை கடைகுட்டி திரும்ப சண்டை பிடிச்சு பெரியண்ணன் கிட்ட இருந்து வாங்கினாலும் சரி. என்ன சரி பண்ணிக்கிட்டு ஓழியட்டும். அது அவங்க பிரைச்சனை.</b>
அட சாமி,
ஒரு நாள் இடைவெளியில பிபிசி ஒரு காவியமே படைத்துவிட்டது. அப்பு நீர் சொன்ன கதையின் ஆரம்பம் சரி ஆனால் இடையில கொஞ்சம் பிழை விட்டுட்டீர்.
அதாவது தம்பிமார் ரெண்டு பேரும் அண்ணனுடன் சண்டைபிடிக்க ஆரம்பித்தார்கள் எண்டு.சரி ஏதோ ஆரப்பித்தான் ஆனால் அதே கடைசித்தம்பி மிகவும் குறுகிய இடைவெளியில் பெரிய அண்ணனுடன் சேர்ந்து சினன அண்ணையை அடிக்க ஆரம்பித்து விட்டான் தெரியுமோ?? ஏனெனில் பெரிய அண்ணையுடன் சேர்ந்து தானும் ஏலுமானதை சின்ன அண்ணையிடம் இருந்து புடுங்க. ஏன் இதை மறைத்து விட்டீர் அல்லது மறந்து விட்டீர். பெரிய அண்ணை சின்ன அண்ணையை அடிக்க கடைசித்தம்பி பார்த்தான் இதை விட்டால் தனக்கு வேறு சந்தர்ப்பம் வருவது கஷ்டம் என்டு பெரிய அண்ணை அடித்துக்கொன்டிருக்கும்போது தானும் செர்ந்து அடித்து சின்ன அண்ணையின் மடியிலெயே கை வைக்கும் அளவுக்கு வந்து விட்டான். அத்துடன் நில்லாமல் சின்ன அண்ணை எண்டு கூட பாராமல் சின்ன அண்ணையின் மனைவியைக்கூட மானபன்ங்கப் படுத்தி விட்டான். அத்துடன் மட்டும் விட்டானா சின்ன அண்ணையின் பெண் பிள்ளைகளைக் கூட விட்டு வைக்கவிலலை. இதை உமது சின்னத்தம்பி செய்தது நியாயமா பிபிசி. இதில் முக்கியமான விசயம் என்ன எண்டா சின்ன அண்ணை கடைசித்தம்பியை ஒரு செல்லமாத்தான் பாலூட்டி வளர்த்தார். சின்ன அண்ணைக்கு இதைப்பார்த்து அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. இப்போவும் சின்ன அண்ணை அவனை அணைத்துப்போகவெ விரும்புகிறார் ஆனால் அவந்தான் தன்ன பிரிச்சு விடசொல்லிக்கொன்டு ஊர் ஊரா புலம்பித்திரியிறான்.இப்படி ஒரு கெவலமான நன்றி கெட்ட மிருகமாகவே நடந்த தம்பியை அந்த சின்ன அண்ணன் இப்போவும் சகோதரனாகவெ பார்க்கிறார். இப்ப கடைசித்த்தம்பி வைத்திருக்கும் மொத்த சொத்து சின்ன அண்ணயிட்ட இருந்து களவாடியதும்தான் என்பதையும் இங்கு சொல்ல விரும்புறேன். இது தெரியாமல் பிபிசி இப்படி எழுதலாமா???
பிபிசி நீர் எழுதிய மாதிரி கடைசித்தம்பி பெரிய அண்ணனுக்கும் சின்ன அண்ணனுக்கும் இடையில் சண்டை நடக்கும்போது சும்ம இருக்கவில்லை. சினா அண்ணன் என்கு போய் ஒழிந்தாலும் பெரிய அண்ணனை கையுடன் கூட்டிச்சென்று காட்டிக்கொடுத்து அவனின் வழ்வை பாளக்கினான். அத்துடன் விட்டானா பெரிய அண்ணனுக்கு சாராயம், இரைச்சிக் கறி, காசு கொடுத்து அவனை முற்றாகவே அழிக்கத் தூன்டினான் - இது எந்த சகோதரனாலும் முடியுமா - ஆனால் முடிந்தகு - உமது கடைசித்தம்பியால்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

