04-30-2006, 09:29 AM
கண்காணிப்பு குழு நோர்வே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அது இன்னொரு நாட்டு புலநாய்வுத்துறையினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது சிங்கள இனவாதிகளின் கீழ்த்தனமான "வெள்ளைப் புலிகள்" போன்ற விமர்சங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
புலிகள் நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினரோடு ஆரம்பத்திலிருந்தே கடுமையாக நடந்து கொள்ளவில்லை. ஒட்டுமொத்த தமிழர் தரப்பு (ஊடகங்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள்) நேர்வேயையும் கண்காணிப்புக் குழுவையும் எமது அவலத்தை தீர்ப்பதற்கு வந்தவர்கள் என்ற நன்றியோடும் மரியாதையோடும் நடத்தினார்கள். அதே நேரம் சிறீலங்கா அரசாங்கமும் சிங்களத்தரப்பும் (ஊடகங்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள்) ஆரம்பத்திலிருந்தே நாட்டை பிரிக்க வந்தவர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயற்படவந்தவர்கள் என்ற கடும் நிலைப்பாட்டிலிருந்து தான் பார்த்தார்கள். அவ்வப்போது "வெள்ளைப்புலிகள்" "பச்சை மீன் தின்பவர்கள்" என்றும் தமது வெறுப்பின் உச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
கொழும்பில் ஒரு அரசியல் அதிகார மைய்யம் அடுத்த மைய்யம் கிழுநொச்சியில் இருக்கிறது ஆனால் நோர்வே, கண்காணிப்புக் குழு, மற்றும் எனைய சர்வதேச சமூக பிரதிநிதிகள் நடைமுறையில் கொழும்பை மைய்யமாக வைத்து இயங்குகிறார்கள் என்பது தான் யதார்த்தம். இதனால் கொழும்பை திருப்த்திப்படுத்தாது நமது வேலையை தொடர முடியாது என்பதை உணர்வது இலகு. அதாவது கொழும்பின் திருப்த்தியற்ற நிலை நியாயமற்றது என்றாலும் கொழும்பை திருப்த்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருக்கு.
கண்காணிப்புக் குழுவின் தற்போதைய பக்கச்சார்பான நிலமை மேற்கூறிய 2 காரணங்களாலும் 4 வருடகாலத்தில் மெதுவாக உருப்பெற்றிருக்கிறது. அதாவது ஒரு புறத்தில் தமிழர் தரப்பு மரியாதையுடனும் நன்றியுடனும் விட்டுக் கொடுப்புடன் பொறுமைகாக்க மறுபுறத்தில் சிறீலங்கா அரசாங்கம் நியாயமற்ற குற்றச்சாட்டுகளையும் கீழ்த்தரமான விமர்சனங்களையும் வைக்க கண்காணிப்புக்குழு இந்த இரு அரசியல் அதிகார மைய்யங்களுக்கிடையில் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள செய்த fine adjustment இன் விளைவு. எனவே தமிழர் தரப்பு தமது status-quo வை reassert பண்ண வேண்டிய தேவையும் நேரமும் வந்துவிட்டது. இது மிகவும் பக்குவமாகவும் நிதானமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 4 வருட பொறுமைகளிற்கும் விட்டுக்கொடுப்புகளிற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். நேர்வேயோடும் கண்காணிப்புக் குழுவோடும் தமிழர்தரப்பு உறவுகள் சீர்கெடவேண்டும் என்பது தான் சிங்களத்தரப்பின் தற்போதைய எதிர்பார்ப்பு.
தமிழர்தரப்பு தமது அதிகாரப் படிநிலைகளை தெளிவுபடுத்தும் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஊடகங்கள் கண்காணிப்புக் குழுவோடு தமது உறவுகளை வலுப்படுத்தி ஆரோக்கியமான முறையில் கேள்விகளை விமர்சனங்களை தொடுக்க வேண்டும். அதன் மூலம் கண்காணிப்புக்குழுவை அவர்கள் தமிழருக்கும் accountable என்றதை உணரவைக்க வேண்டும். அவுஸ்ரேலிய வனொலியின் இது ஒரு நல்ல முயற்சி.
http://www.tamilnaatham.com/audio/2006/apr...en20060429.smil
இது போன்ற முயற்சிகள் மற்றைய ஊடகங்களாலும் தேவை.