![]() |
|
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது (/showthread.php?tid=17) |
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது - KULAKADDAN - 04-29-2006 சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்களை மேலும் சிக்கலாக்கி விடும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், கிளேமோர் தாக்குதல்களினால் சிவிலியன்களும், இராணுவத்தினரும் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையளிக்கிறது எனவும், அரசு படைகள் மீதான தங்களது இராணுவ தாக்குதலை விடுதலை புலிகள் அமைப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் அரசு படைகள் நீதிக்கு புறம்பான வகையில் சிவிலியன்களை கொன்றுவருகிறன்றன என தாங்கள் அஞ்சுவதாகவும், கள நிலவரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கணிப்புகள் வெளியாகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசும் விடுதலை புலிகளும் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டுமானால அங்கு உடனடியாக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இந்த கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெகலிய றம்புக்வெல்ல, திருகோணமலையில் இடம்பெற்ற வான் தாக்குதல்கள் தமது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க நடத்தப்பட்ட பதில் தாக்குதல் என்றும் ஆகவே அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருத முடியாது என்றும் கூறியுள்ளார். நன்றி: பிபிசி தமிழ் 29/4/06 Re: சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது - Thala - 04-29-2006 KULAKADDAN Wrote:பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது. இவனுகள் உண்மையிலேயே நடுநிலமை காக்கத்தான் வந்தவன்களே எண்டு சந்தேகமாக இருக்கு.... :roll: :roll: :roll: தமிழீழத்தில மட்டும் இல்லாமல் சிங்கள இடத்திலயும் சிங்களவன் இராணுவமுகாம்களை பாடசாலக்கு அண்மையில் இல்லாமல் பாடசாலை வளாகத்திலேயே போட்டு இருக்கிறாங்கள்... இராணுவ முகாம்கள் எல்லாம் மக்கள் குடியிருப்பில் இருக்கிறது... அதை கேக்க துப்பில்லை .... சமாதான காலத்திலை மக்களோடு அதுவும் அவர்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில தங்கி இருக்கிறது தவறாம்... அப்படி இருந்தால்... இராணூவம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி எண்ற ரீதியில் எல்லோ இருக்கு இவர்களின் வியாக்கியானம்.... :roll: :roll: :roll: இவர்கள் கண்காணிப்பாளர்களா...??? இல்லா இலங்கை நடவடிக்கைகளை நியாயப்படுத்த வந்தவர்களா...??? நாங்கள் இவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்காத வரை இவர்கள் இப்படியான உப்பு சப்பில்லாத குற்றங்களை கொண்டு வந்து கொண்டுதான் இருப்பார்கள்....! - KULAKADDAN - 04-29-2006 தல நிங்கள் சொல்லிறது சிந்திக்க வேண்டிய விடயம் <b>புலிகளை மட்டும் சொல்லிறவை ஏன் இராணுவம் முழத்துக்கு முழம் யாழ்ப்பாணம் உட்பட மற்ற பகுதிகளில நிறுவி இருக்கிற முகாமுகளை பற்றி மூச்சும் விடுறதில்லை ????</b> - Danklas - 04-29-2006 கண்காணிப்புகுழு செயற்பாடுகள் தன்னிச்சையாக இல்லை, இவர்கள் விடயத்தில் இந்தியா அல்லது அவர்கள் நாய்துறை சாறி புலநாய்வுத்துறை செயற்படுகிறது, அவர்கள் சொல்வதை அப்படியே உச்சரிக்கும் பொம்மையாக சொல்வதற்க்காகத்தான் கண்காணிப்புகுழு ![]() புலிகளின் முக்கிய தலைவர்கள் கண்காணிப்பு குழு விடயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும், எந்த வித பாதுகாப்போ அன்றில் சிறு சிறு சந்திப்புக்களை ரத்துசெய்தல்வேண்டும், இவர்களுடன் கதைப்பதில் பிரயோசனமில்லை, நோர்வே நாட்டுடன் கதைத்து முடிவெடுப்பது ஓரளவிற்கு நன்மை. தற்பொழுது இலங்கை பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தைவிட அண்டைய பெரிய கைகளின் செயற்பாடுகள் தான் அதிகமாக உள்ளது, இதனை கவனத்தில் கொண்டு புலிகள் செயற்படுகிறார்கள் போல் தெரிகின்றது. ![]() உண்மையில் இவர்களை நம்பி கிழக்கு மாகாணதளபதிகள் கிளிநொச்சி செல்வது ஆபத்தானது, ஏதாவது அசம்பாவிதம் நடந்துமுடிந்ததும், இது கொழும்பு மேலிடத்திலிருந்து உத்தரவு தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று சாதரண வீதிகண்காணிப்பு பொலிஸார் மாதிரி கையை விரிப்பார்கள், ஆகா கூடிப்போனால் இது ஒரு அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்று ஒரு அறிக்கையை விட கண்காணிப்புகுழு பேச்சாளரம்மா இருக்கா, அவாக்கு வட கிழக்கில என்ன நடக்குது என்றது தெரியா, இராணுவ பேச்சாளர், பொலிஸ் அதிகாரிகள் சொல்லுறதை அப்படியே ஊடகங்களுக்கு சொல்லுவா, பின்பு தாய் நாட்டுக்கு போய்ட்டு, அப்புறமா விடுமுறை கழிக்க வாறமாதிரி இலங்கைக்கு வருவா.. :x :evil: இவர்களை நிச்சயமாம தமிழ் மக்கள் கண்டிக்க வேண்டும், நடுநிலமை என்ற புனித சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் செயற்படுவர்களை ஒதுக்க வேண்டும். :evil: :evil: - kurukaalapoovan - 04-30-2006 கண்காணிப்பு குழு நோர்வே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அது இன்னொரு நாட்டு புலநாய்வுத்துறையினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது சிங்கள இனவாதிகளின் கீழ்த்தனமான "வெள்ளைப் புலிகள்" போன்ற விமர்சங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. புலிகள் நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினரோடு ஆரம்பத்திலிருந்தே கடுமையாக நடந்து கொள்ளவில்லை. ஒட்டுமொத்த தமிழர் தரப்பு (ஊடகங்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள்) நேர்வேயையும் கண்காணிப்புக் குழுவையும் எமது அவலத்தை தீர்ப்பதற்கு வந்தவர்கள் என்ற நன்றியோடும் மரியாதையோடும் நடத்தினார்கள். அதே நேரம் சிறீலங்கா அரசாங்கமும் சிங்களத்தரப்பும் (ஊடகங்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள்) ஆரம்பத்திலிருந்தே நாட்டை பிரிக்க வந்தவர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயற்படவந்தவர்கள் என்ற கடும் நிலைப்பாட்டிலிருந்து தான் பார்த்தார்கள். அவ்வப்போது "வெள்ளைப்புலிகள்" "பச்சை மீன் தின்பவர்கள்" என்றும் தமது வெறுப்பின் உச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கொழும்பில் ஒரு அரசியல் அதிகார மைய்யம் அடுத்த மைய்யம் கிழுநொச்சியில் இருக்கிறது ஆனால் நோர்வே, கண்காணிப்புக் குழு, மற்றும் எனைய சர்வதேச சமூக பிரதிநிதிகள் நடைமுறையில் கொழும்பை மைய்யமாக வைத்து இயங்குகிறார்கள் என்பது தான் யதார்த்தம். இதனால் கொழும்பை திருப்த்திப்படுத்தாது நமது வேலையை தொடர முடியாது என்பதை உணர்வது இலகு. அதாவது கொழும்பின் திருப்த்தியற்ற நிலை நியாயமற்றது என்றாலும் கொழும்பை திருப்த்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருக்கு. கண்காணிப்புக் குழுவின் தற்போதைய பக்கச்சார்பான நிலமை மேற்கூறிய 2 காரணங்களாலும் 4 வருடகாலத்தில் மெதுவாக உருப்பெற்றிருக்கிறது. அதாவது ஒரு புறத்தில் தமிழர் தரப்பு மரியாதையுடனும் நன்றியுடனும் விட்டுக் கொடுப்புடன் பொறுமைகாக்க மறுபுறத்தில் சிறீலங்கா அரசாங்கம் நியாயமற்ற குற்றச்சாட்டுகளையும் கீழ்த்தரமான விமர்சனங்களையும் வைக்க கண்காணிப்புக்குழு இந்த இரு அரசியல் அதிகார மைய்யங்களுக்கிடையில் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள செய்த fine adjustment இன் விளைவு. எனவே தமிழர் தரப்பு தமது status-quo வை reassert பண்ண வேண்டிய தேவையும் நேரமும் வந்துவிட்டது. இது மிகவும் பக்குவமாகவும் நிதானமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 4 வருட பொறுமைகளிற்கும் விட்டுக்கொடுப்புகளிற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். நேர்வேயோடும் கண்காணிப்புக் குழுவோடும் தமிழர்தரப்பு உறவுகள் சீர்கெடவேண்டும் என்பது தான் சிங்களத்தரப்பின் தற்போதைய எதிர்பார்ப்பு. தமிழர்தரப்பு தமது அதிகாரப் படிநிலைகளை தெளிவுபடுத்தும் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஊடகங்கள் கண்காணிப்புக் குழுவோடு தமது உறவுகளை வலுப்படுத்தி ஆரோக்கியமான முறையில் கேள்விகளை விமர்சனங்களை தொடுக்க வேண்டும். அதன் மூலம் கண்காணிப்புக்குழுவை அவர்கள் தமிழருக்கும் accountable என்றதை உணரவைக்க வேண்டும். அவுஸ்ரேலிய வனொலியின் இது ஒரு நல்ல முயற்சி. http://www.tamilnaatham.com/audio/2006/apr...en20060429.smil இது போன்ற முயற்சிகள் மற்றைய ஊடகங்களாலும் தேவை. |