Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC
#1
<b>செய்தியறிக்கையில்</b>


<b>கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது
தமிழோசை</b>

இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர்.

தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார்.

ஆனால், தாக்குதலுக்கான முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கவில்லை அவை பொலன்னறுவைக் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தன என்று இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

BBC தமிழ்.
::
Reply


Messages In This Thread
அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC - by Thala - 04-30-2006, 08:18 AM
[No subject] - by alika - 04-30-2006, 10:16 AM
[No subject] - by kurukaalapoovan - 04-30-2006, 10:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)