Yarl Forum
அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC (/showthread.php?tid=10)



அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC - Thala - 04-30-2006

<b>செய்தியறிக்கையில்</b>


<b>கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது
தமிழோசை</b>

இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர்.

தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார்.

ஆனால், தாக்குதலுக்கான முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கவில்லை அவை பொலன்னறுவைக் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தன என்று இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

BBC தமிழ்.


- alika - 04-30-2006

உவங்க இதுவும் சொல்லுவாங்க இன்னமும் சொல்லுவாங்க. இந்த BBC கொழும்பு செய்தியாளர்களான. எதிராஜனும், துமித்தா லுத்ரா வும் சிங்கள இனவாதிகள் சொல்வதை அங்கீகரிப்பதுபோல் செய்திகளை குறிப்பிடுவாங்க. ஆனால், புலிகள் எதையாவது நிராகரித்து கூறினால், "but nobody here belives them" அல்லாட்டிக்கு "the hallmark of LTTE" என்று பக்கத்திலே போடுவாங்க. சாதாரண, என்ன, எல்லா வாசகர்களையும் பிழையாக விளங்கிக் கொள்ள வைத்துவிடுவார்கள்.
நாங்க எல்லாரும் இந்த BBC க்கு இப்படியான செய்திகளுக்கெதிராக மின்னஞ்சல்கள் அனுப்பி எமது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.
இங்கே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993909.stm


- kurukaalapoovan - 04-30-2006

அதற்கு காரணம் அவர்கள் தெற்கை மைய்யமாக வைத்து இயங்குகிறார்கள். உளவியல்ரீதியாக அவர்கள் இருந்து இயங்கும் சமூகத்தவிரின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் தான் தமது கருத்துக்களையும் வைப்பது இயற்கை. இவர்கள் தமிழர் தரப்பு பதிகளிலும் சமமான அளவில் நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களது நிலைப்பாட்டையும் சரியான முறையில் நாடிபிடிக்க கூடியவர்களாக மாற உதவும்.