04-29-2006, 09:28 PM
KULAKADDAN Wrote:பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது.
இவனுகள் உண்மையிலேயே நடுநிலமை காக்கத்தான் வந்தவன்களே எண்டு சந்தேகமாக இருக்கு.... :roll: :roll: :roll:
தமிழீழத்தில மட்டும் இல்லாமல் சிங்கள இடத்திலயும் சிங்களவன் இராணுவமுகாம்களை பாடசாலக்கு அண்மையில் இல்லாமல் பாடசாலை வளாகத்திலேயே போட்டு இருக்கிறாங்கள்... இராணுவ முகாம்கள் எல்லாம் மக்கள் குடியிருப்பில் இருக்கிறது... அதை கேக்க துப்பில்லை .... சமாதான காலத்திலை மக்களோடு அதுவும் அவர்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில தங்கி இருக்கிறது தவறாம்...
அப்படி இருந்தால்... இராணூவம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி எண்ற ரீதியில் எல்லோ இருக்கு இவர்களின் வியாக்கியானம்.... :roll: :roll: :roll:
இவர்கள் கண்காணிப்பாளர்களா...??? இல்லா இலங்கை நடவடிக்கைகளை நியாயப்படுத்த வந்தவர்களா...??? நாங்கள் இவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்காத வரை இவர்கள் இப்படியான உப்பு சப்பில்லாத குற்றங்களை கொண்டு வந்து கொண்டுதான் இருப்பார்கள்....!
::

