Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது
#1
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது


திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்களை மேலும் சிக்கலாக்கி விடும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், கிளேமோர் தாக்குதல்களினால் சிவிலியன்களும், இராணுவத்தினரும் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையளிக்கிறது எனவும், அரசு படைகள் மீதான தங்களது இராணுவ தாக்குதலை விடுதலை புலிகள் அமைப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் அரசு படைகள் நீதிக்கு புறம்பான வகையில் சிவிலியன்களை கொன்றுவருகிறன்றன என தாங்கள் அஞ்சுவதாகவும், கள நிலவரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கணிப்புகள் வெளியாகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசும் விடுதலை புலிகளும் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டுமானால அங்கு உடனடியாக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இந்த கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெகலிய றம்புக்வெல்ல, திருகோணமலையில் இடம்பெற்ற வான் தாக்குதல்கள் தமது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க நடத்தப்பட்ட பதில் தாக்குதல் என்றும் ஆகவே அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.


நன்றி: பிபிசி தமிழ் 29/4/06
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது - by KULAKADDAN - 04-29-2006, 09:05 PM
[No subject] - by KULAKADDAN - 04-29-2006, 10:02 PM
[No subject] - by Danklas - 04-29-2006, 10:38 PM
[No subject] - by kurukaalapoovan - 04-30-2006, 09:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)