Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி....தேவை.......
#2
வணக்கம், நல்லதொரு முயற்சி. நாம் எல்லோரும் சேரந்து மேற்கத்தேயவர்களின் உப்படியான பொதுவான கேள்விகளிற்கு நிதானமாக பதில்களை வழங்கக் கூடிய FAQ ஒன்றை தயாரிக்க முயற்சிப்போம். மற்றைய உறவுகளும் பங்களிப்பார்கள் என்று நம்புறன்.

மேற்கத்தேயவர்களிற்கு மறுமொழி சொல்லும் போது அவர்களிற்கு ஏலவே பெயரை கேட்டாலே நரிவெருட்டிற கியூபா பிடல் கஸ்றோ போன்றவற்றை உதாரணங்களாக பாவிப்பதை தவிர்ப்பது நல்லம். ஏற்கனவே சந்தேகத்தோடு இரண்டும் கெட்டான நிலைப்பாட்டில் எம்மை அணுகுபவர்களிடம் இப்படியான (அவர்கள் வெறுக்கும்) உதாரணங்களோடு எமது நிலைப்பாட்டை விளக்கமுயல்வது அவர்களது நம்பிக்கையை வென்று தரக்கூடியது அல்ல.

2 ஆம் உலகப்போரின் போது ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று போதனை செய்தார்களா ஜரோப்பாவில்?
அமெரிக்கப் புரட்ச்சியின் போது மாற்றுக்கருத்துக்காறார்கள் என்று குளப்பவாதிகளை ஊக்குவித்தார்களா?
சரி பழையதை விடுவம், தற்காலத்திற்கு வருவம்.
மத்தியகிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் தேர்தலால் ஆட்சித்தலைவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவர்களோடு உறவுகளை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா சர்வதேசம்? பாக்கிஸ்தானில் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை புரட்சியில் கவிழ்த்துவிட்டு சர்வாதிகார ஆட்சி நடந்த பொழுது சர்வதேசம் உறவுகளை துண்டித்தா? குறைத்துக் கொண்டதா?
ஏன் இந்த இரட்டை வேடம் (hypocrisy)?

மக்களின் நலன்களில் உண்மையாக ஆர்வம் உள்ளவர்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தில் உள்வாங்கப்பட்டுத்தான் உள்ளார்கள். அவரவர்கள் தம்மால் முடிந்த அளவில் பங்களிப்பு செய்ய முடியும். எல்லோரிடமும் ஒரே அளவு அர்பணிப்பை எதிர்பார்க்கவில்லை. அனால் ஜனநாயகம் மாற்றுக் கருத்துச் சுதந்திரம் என்று புலிகள் எதற்கு இடம் கொடுக்கத்தயாரில்லை என்றால் எதிரியின் பிரித்தாளும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க உதவும் கூலிகளிற்கு. ஆங்கிலத்தில் இந்தக் கைக்கூலிகளிற்கு இன்னொரு பெயர் quisling. Quisling என்பது ஏன் துரோகத்தை வருணிக்க பாவிக்கப்படுகிறது என்ற பின்னணியை பார்த்தால், Vidkun Quisling என்ற நோர்வே அரசியல்வாதி பாசிச யோர்மனியின் ஆக்கிரமிப்பிற்கு துணைபோனவர். அவரது சொந்த நாட்டை ஆக்கிரமித்த பாசிசவாதிகளை ஆதரித்து துணைபோன செயற்பாடுகள் ஏனைய துரோகிகளை வருணிக்கும் வரைவிலக்கணமாக மாறிவிட்டது. Vidkun Quisling உம் ஒரு காலத்தில் அரசியல்வாதி தான் (ஆக்கிரமிப்பு) அரசாங்கத்தில் பதவிகள் வகித்த உயர்நிலை உத்தியோகத்தவர் தான். http://en.wikipedia.org/wiki/Vidkun_Quisling

வரலாற்றில் எந்த ஒரு வெற்றி பெற்ற விடுதலைப் போராட்டத்திலும் விடுதலை அடைய வேண்டி இனத்தை பல்வேறு அமைப்பினர் குழுக்கள் ஜனநாயகத்தின் பெயரால் மாறுபட்ட குளப்பமான முரணான கருத்துக்களால் குளப்பிக் கொண்டு இருந்ததில்லை. வரலாற்றில் என்றுமே விடுதலையை வென்றெடுக்கும் அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் விடுதலை அடைந்த இனம் தமது புது வாழ்வை ஆரம்பிப்பார்கள். அந்த மக்கள் அவர்களிடம் நம்பிக்கை வைத்திருப்பதால் தான் அவர்களால் அந்த மக்களின் விடுதலையை வென்றெடுக்கக்கூடிய சக்தியை ஒருமுகப்படுத்தி சரியான வழிகளில் பிரயோகித்து வெற்றி பெறக்கூடியதாக இருக்கிறது. விடுதலை அடைந்து மீள்கட்டுமானங்கள் கட்டமைப்புகள் நல்ல நிலையை அடைந்து ஆக்கிரமிப்புச் சதிகள் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விடுதலையை வென்றெடுத்த அமைப்பு தனது பிடிகளை தளர்த்த முடியாது.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-28-2006, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)