![]() |
|
உதவி....தேவை....... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: உதவி....தேவை....... (/showthread.php?tid=26) |
உதவி....தேவை....... - thaiman.ch - 04-28-2006 அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம் நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடியும் என்று சொன்னார். நான் அதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதிக்க மாட்டது என்று சொன்னன். புலிகள் சமாதானம் மூலம் தீர்வு கிடைப்பதை பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் அதன் பின் அவர்களுடைய நிலமை கேள்விக்குறி ஆகிவிடும் என்பதனால். புலிகள் வேறு எந்த அமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கயை நோக்கியே உள்ளது. புலிகள் ஆயுத போராட்டத்தை விட்டு சமாதானப்பேச்சுக்களில் ஆர்வம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். நான் அதற்கு இந்திய இராணும் பண்ணியதற்கு சர்வதேசம் ஒன்று பண்ணவில்லையே என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் அப்பொழுது விடுதலைப்போராட்டம் சர்வதேச அளவில் ஈர்க்கப்படவில்லை என்றார். அவர் 1984ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்து வருபவர். அன்று தொடக்கம் இன்று வரை நடந்த அனைத்தையும் (முக்கியமாக புலிகளின் கொலைகள் பற்றி) சொன்னார். எனக்கு இந்த கேள்விகளிற்கு பதில் சொல்லமுடியவில்லை. இருந்த போதும் ஏதோ சமாளித்தேன். அமெரிக்கா ஈராக்கில் எத்தனை கேவலமான விடயங்களை செய்தது என்று. நான் இதன் பின் திருகோணமலை கட்டளைத்தளபதி சொர்ணம் (மலையாள நடிகர் மோகன்லால் மாதிரி இருந்தார்) அவர்களை சந்தித்து இதே கேள்விகளிற்கு அவரிடம் விடை கேட்டேன். அவர் சொன்னார், கியுபா நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அங்கே காஸ்ரோ 5தடவை தேர்தலில் போட்டி போட்டிருக்கிறார் 5 தடவையும் அவரே வென்றிருக்கிறார். அங்கு வேறு கட்சிகள் இல்லையா? இருக்கின்றது. ஆனால் மக்கள் செல்வாக்கு ஒரே ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அதே போல் மக்கள் எம்மை ஆதரிக்கும் வரை எமது தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்று சொன்னார். இருந்த போதும் நான் சுவிசிற்கு வந்த பின்னர் கொஞ்சம் வேற ஊடகங்களையும் பார்ததன். உதரணமாக ரிபிசி. அது இன்டர்நெட்ல இலவசம் என்டதால கேட்கமுடிந்தது. சில நேரம் சிரிப்பாவும் இருக்கும் அதை கேட்க. ஜனநாயகம் என்டு சொல்லீனம் ஆனா அதில எப்ப பாத்தாலும் அங்க கொண்டார்கள் இங்க கொண்டார்கள் என்டு தான் வருது. புலிகளை தவிர மற்ற எல்லாரையும் அவையள் ஆதரிக்கிற மாதிரி இருக்கு. என்னுடைய கேள்வி என்னவென்றால். என்னிடம் மேலே சுவிஸ் பிரமுகரால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கும் அவரை போன்று சிந்திப்பவர்களிற்கும் நான் எப்படி பதில் கூறுவது? முக்கிய குறிப்பு: நான் இப்படி எல்லாம் கேட்டுட்டன் என்டு என்னை உழவாளி என்டு நினைச்சிடாதீங்கப்பா - kurukaalapoovan - 04-28-2006 வணக்கம், நல்லதொரு முயற்சி. நாம் எல்லோரும் சேரந்து மேற்கத்தேயவர்களின் உப்படியான பொதுவான கேள்விகளிற்கு நிதானமாக பதில்களை வழங்கக் கூடிய FAQ ஒன்றை தயாரிக்க முயற்சிப்போம். மற்றைய உறவுகளும் பங்களிப்பார்கள் என்று நம்புறன். மேற்கத்தேயவர்களிற்கு மறுமொழி சொல்லும் போது அவர்களிற்கு ஏலவே பெயரை கேட்டாலே நரிவெருட்டிற கியூபா பிடல் கஸ்றோ போன்றவற்றை உதாரணங்களாக பாவிப்பதை தவிர்ப்பது நல்லம். ஏற்கனவே சந்தேகத்தோடு இரண்டும் கெட்டான நிலைப்பாட்டில் எம்மை அணுகுபவர்களிடம் இப்படியான (அவர்கள் வெறுக்கும்) உதாரணங்களோடு எமது நிலைப்பாட்டை விளக்கமுயல்வது அவர்களது நம்பிக்கையை வென்று தரக்கூடியது அல்ல. 2 ஆம் உலகப்போரின் போது ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று போதனை செய்தார்களா ஜரோப்பாவில்? அமெரிக்கப் புரட்ச்சியின் போது மாற்றுக்கருத்துக்காறார்கள் என்று குளப்பவாதிகளை ஊக்குவித்தார்களா? சரி பழையதை விடுவம், தற்காலத்திற்கு வருவம். மத்தியகிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் தேர்தலால் ஆட்சித்தலைவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவர்களோடு உறவுகளை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா சர்வதேசம்? பாக்கிஸ்தானில் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை புரட்சியில் கவிழ்த்துவிட்டு சர்வாதிகார ஆட்சி நடந்த பொழுது சர்வதேசம் உறவுகளை துண்டித்தா? குறைத்துக் கொண்டதா? ஏன் இந்த இரட்டை வேடம் (hypocrisy)? மக்களின் நலன்களில் உண்மையாக ஆர்வம் உள்ளவர்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தில் உள்வாங்கப்பட்டுத்தான் உள்ளார்கள். அவரவர்கள் தம்மால் முடிந்த அளவில் பங்களிப்பு செய்ய முடியும். எல்லோரிடமும் ஒரே அளவு அர்பணிப்பை எதிர்பார்க்கவில்லை. அனால் ஜனநாயகம் மாற்றுக் கருத்துச் சுதந்திரம் என்று புலிகள் எதற்கு இடம் கொடுக்கத்தயாரில்லை என்றால் எதிரியின் பிரித்தாளும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க உதவும் கூலிகளிற்கு. ஆங்கிலத்தில் இந்தக் கைக்கூலிகளிற்கு இன்னொரு பெயர் quisling. Quisling என்பது ஏன் துரோகத்தை வருணிக்க பாவிக்கப்படுகிறது என்ற பின்னணியை பார்த்தால், Vidkun Quisling என்ற நோர்வே அரசியல்வாதி பாசிச யோர்மனியின் ஆக்கிரமிப்பிற்கு துணைபோனவர். அவரது சொந்த நாட்டை ஆக்கிரமித்த பாசிசவாதிகளை ஆதரித்து துணைபோன செயற்பாடுகள் ஏனைய துரோகிகளை வருணிக்கும் வரைவிலக்கணமாக மாறிவிட்டது. Vidkun Quisling உம் ஒரு காலத்தில் அரசியல்வாதி தான் (ஆக்கிரமிப்பு) அரசாங்கத்தில் பதவிகள் வகித்த உயர்நிலை உத்தியோகத்தவர் தான். http://en.wikipedia.org/wiki/Vidkun_Quisling வரலாற்றில் எந்த ஒரு வெற்றி பெற்ற விடுதலைப் போராட்டத்திலும் விடுதலை அடைய வேண்டி இனத்தை பல்வேறு அமைப்பினர் குழுக்கள் ஜனநாயகத்தின் பெயரால் மாறுபட்ட குளப்பமான முரணான கருத்துக்களால் குளப்பிக் கொண்டு இருந்ததில்லை. வரலாற்றில் என்றுமே விடுதலையை வென்றெடுக்கும் அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் விடுதலை அடைந்த இனம் தமது புது வாழ்வை ஆரம்பிப்பார்கள். அந்த மக்கள் அவர்களிடம் நம்பிக்கை வைத்திருப்பதால் தான் அவர்களால் அந்த மக்களின் விடுதலையை வென்றெடுக்கக்கூடிய சக்தியை ஒருமுகப்படுத்தி சரியான வழிகளில் பிரயோகித்து வெற்றி பெறக்கூடியதாக இருக்கிறது. விடுதலை அடைந்து மீள்கட்டுமானங்கள் கட்டமைப்புகள் நல்ல நிலையை அடைந்து ஆக்கிரமிப்புச் சதிகள் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விடுதலையை வென்றெடுத்த அமைப்பு தனது பிடிகளை தளர்த்த முடியாது. |