Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி....தேவை.......
#1
அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம்

நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடியும் என்று சொன்னார். நான் அதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதிக்க மாட்டது என்று சொன்னன்.
புலிகள் சமாதானம் மூலம் தீர்வு கிடைப்பதை பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் அதன் பின் அவர்களுடைய நிலமை கேள்விக்குறி ஆகிவிடும் என்பதனால். புலிகள் வேறு எந்த அமைப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கயை நோக்கியே உள்ளது. புலிகள் ஆயுத போராட்டத்தை விட்டு சமாதானப்பேச்சுக்களில் ஆர்வம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

நான் அதற்கு இந்திய இராணும் பண்ணியதற்கு சர்வதேசம் ஒன்று பண்ணவில்லையே என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் அப்பொழுது விடுதலைப்போராட்டம் சர்வதேச அளவில் ஈர்க்கப்படவில்லை என்றார்.

அவர் 1984ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்து வருபவர். அன்று தொடக்கம் இன்று வரை நடந்த அனைத்தையும் (முக்கியமாக புலிகளின் கொலைகள் பற்றி) சொன்னார். எனக்கு இந்த கேள்விகளிற்கு பதில் சொல்லமுடியவில்லை. இருந்த போதும் ஏதோ சமாளித்தேன். அமெரிக்கா ஈராக்கில் எத்தனை கேவலமான விடயங்களை செய்தது என்று.

நான் இதன் பின் திருகோணமலை கட்டளைத்தளபதி சொர்ணம் (மலையாள நடிகர் மோகன்லால் மாதிரி இருந்தார்) அவர்களை சந்தித்து இதே கேள்விகளிற்கு அவரிடம் விடை கேட்டேன். அவர் சொன்னார், கியுபா நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அங்கே காஸ்ரோ 5தடவை தேர்தலில் போட்டி போட்டிருக்கிறார் 5 தடவையும் அவரே வென்றிருக்கிறார். அங்கு வேறு கட்சிகள் இல்லையா? இருக்கின்றது. ஆனால் மக்கள் செல்வாக்கு ஒரே ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அதே போல் மக்கள் எம்மை ஆதரிக்கும் வரை எமது தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்று சொன்னார்.

இருந்த போதும் நான் சுவிசிற்கு வந்த பின்னர் கொஞ்சம் வேற ஊடகங்களையும் பார்ததன். உதரணமாக ரிபிசி. அது இன்டர்நெட்ல இலவசம் என்டதால கேட்கமுடிந்தது. சில நேரம் சிரிப்பாவும் இருக்கும் அதை கேட்க. ஜனநாயகம் என்டு சொல்லீனம் ஆனா அதில எப்ப பாத்தாலும் அங்க கொண்டார்கள் இங்க கொண்டார்கள் என்டு தான் வருது. புலிகளை தவிர மற்ற எல்லாரையும் அவையள் ஆதரிக்கிற மாதிரி இருக்கு.

என்னுடைய கேள்வி என்னவென்றால். என்னிடம் மேலே சுவிஸ் பிரமுகரால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கும் அவரை போன்று சிந்திப்பவர்களிற்கும் நான் எப்படி பதில் கூறுவது?

முக்கிய குறிப்பு: நான் இப்படி எல்லாம் கேட்டுட்டன் என்டு என்னை உழவாளி என்டு நினைச்சிடாதீங்கப்பா 
Reply


Messages In This Thread
உதவி....தேவை....... - by thaiman.ch - 04-28-2006, 12:53 PM
[No subject] - by kurukaalapoovan - 04-28-2006, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)