02-17-2004, 09:10 PM
shanmuhi Wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது.
இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?
இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?
மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.
அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.
இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க

