Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உரிமைக்கு ஒரு குரல் !
#1
உரிமைக்கு ஒரு குரல்

ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும்
ஈழத்துத் தமிழா! நில்!!
வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின்
காலச் சுவடுகளைச் சொல்!

மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள்
தமிழரின் நிலையெங்கும்
கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார்
தடைகளும் போடுறார் பார்!

எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும்
நித்தமும் சூழுது பார்! - இந்த
நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே!
விரைந்து நீர் எழுந்து வாரீர்!

மற்றவர் .
தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை
தர்க்கித்துத் தாக்குகையில்
உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால்
உடனேயே செத்துவிடு! - இல்லை
செப்புகிற நல்லுணர் நாவிருந்தால்
அதை செகத்திற்கு உணர்த்திவிடு!




கனடாவில் இருந்து
வல்வை சகாறா.

[size=6]தலைப்பை தமிழில் மாற்றியிருக்கிறேன் - யாழ்பிரியா
Reply


Messages In This Thread
உரிமைக்கு ஒரு குரல் ! - by valvaizagara - 04-27-2006, 07:55 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:33 AM
[No subject] - by வர்ணன் - 04-28-2006, 03:47 AM
[No subject] - by gowrybalan - 04-28-2006, 06:58 AM
[No subject] - by valvaizagara - 04-29-2006, 12:52 AM
[No subject] - by RaMa - 04-29-2006, 02:38 AM
[No subject] - by valvaizagara - 04-29-2006, 12:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)