Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: புலிகள்
#7
நேற்று சம்பவம் நடந்து ஒரு கொஞ்ச நேரத்துக்குள்ளேயே (1 மணத்தியாலம் கூட சென்றிருக்காது) தற்கொலைத்தாக்குதல் என்று தலையங்கங்கள் வரத் தொடங்கி விட்டது. தற்கொலைத் தாக்குதல் என்ற முடிவிற்கு ஆதாரமாக படங்களோ அல்லது எந்த நேரே கண்ட சாட்சியத்தையும் மேற்கோள் காட்டவில்லை.

இரணுவத்தரப்பு பேச்சாளர் கூறியதாக சில மேற்குலகு கூடகங்கள் ஆதாரம் காட்டி செய்தி வெளயிட்டிருந்தார்கள். ஆனால் அவர் சாட்சியங்கள் தடையங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அதை தெரிவிப்பதாக விளக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. சிறீலங்கா இராணுவப் பேச்சாளரை கூட ஆதாரமாக மேற்கோள் காட்டிச் சொல்லும் செய்தில் எந்த நம்பகத்தன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாக எமது ஊடகத்துறை இன்றும் இல்லையா?

இவ்வாறு செய்திகள் வரத்தொடங்கி பல மணத்தியாலங்களிற்கு பிறகு தான் தற்கொலைதாரியின் கால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது தலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்டார்கள் படங்களுடன்.

வழமையாக மதிப்புக்குரிய மேற்குலக கூடகங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பொழுது allegedly, alleged, suspected போன்ற பதங்களை பயன் படுத்தி விடையம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டிக் கொள்வார்கள். தமிழ் இணைய ஊடகங்களில் வந்த ஆரம்பச் செய்திகள் பெரும்பாலானவை இந்த மதிப்புக்குரிய AFP, BBC, Resuters போன்ற நிறுவனங்களின் செய்திகளை (குத்துமதிப்பாக) மொழிபெயர்த்துப் போட்டார்கள். ஆனால் இந்த தமிழ் இணைய ஊடகங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு விறு விறுப்பாக சுடச் சுட செய்தி தருவதாக செய்த குத்துமதிப்பு மொழிபெயர்ப்புகளில் நம்பிக்கைக்குரிய மேற்குலக ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத விடையங்களை செய்தியாக வெளியிடும் போது கவனமாக பாவிக்கும் allegedly, alleged, suspected போன்ற பதங்கள் கலந்த வசனநடைகளை கவனிக்காது எழுதித்தள்ளினார்கள். நம்பிக்கைக்குரிய செய்திநிறுவனங்கள் உறுதிப்படுத்தபடவில்லை என்று எழுதும் ஒன்றை இவர்கள் ஊகத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதான வசனநடையிள் எழுதித்தள்ளியருக்கிறார்கள்.

செய்திகளின் தலையங்கங்களே தமிழ்த் தளங்களில் தற்கொலைத்தாக்குதல் என்று தீட்டப்பட்டிருக்கு. ஒரு சம்பவத்தைப்பற்றிய உறுதிப்படுத்தப்படாத விடையத்தை அந்த சம்பவம் பற்றி எழுதும் செய்தியின் தலையங்கத்தில் உள்ளடக்கலாமா என்ற அடிப்படைச் சிந்தனை இல்லையா இவர்களிற்கு?

இந்த விடையத்தில் தமிழ் ஒளிச் செய்திகள் மிகவும் நிதானமாக இருந்தது. அவர்களை இதற்கு பாராட்ட வேண்டும்.
Reply


Messages In This Thread
[No subject] - by Sujeenthan - 04-25-2006, 05:14 PM
[No subject] - by kuruvikal - 04-26-2006, 11:18 AM
[No subject] - by Thala - 04-26-2006, 11:22 AM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 01:37 PM
[No subject] - by AJeevan - 04-26-2006, 02:02 PM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 03:29 PM
[No subject] - by tamilini - 04-26-2006, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)