Yarl Forum
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: புலிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: புலிகள் (/showthread.php?tid=73)



கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: புலிகள் - yarlmohan - 04-25-2006

கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு

(கிளிநொச்சி)
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் நாம் போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக நிலவும் செய்தி தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்


- Sujeenthan - 04-25-2006

இது கூடுதலாக உள்வீட்டுச் சதியாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் சரத் பொன்சேகா இராணுவ உயர் மட்டத்தில் பலராலும் வெறுக்கப்பட்டவர். புலிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றால் இராணுவத்தின் பாதுகாப்புத் திறமையைப் போற்றவேண்டும்.


- kuruvikal - 04-26-2006

இத்தாக்குதலுக்கு தமிழ் அமைப்பு ஒன்று தொலைநகல் மூலம் உரிமை கோரி உள்ளது. <b>உயர் பாதுகாப்பு வலய மக்கள் விடுதலைப் படை</b>..என்ற அமைப்பே இத்தாக்குதலுக்கு உரிமை கோரி உள்ளது..!

"suspected Tiger front group, <b>the High Security Zone Residents' Liberation Force (HSZRLF)</b>, took responsibility.

"HSZRLF feels that the LTTE is merely wasting time by maintaining a ceasefire," it said in a fax"

Source- Reuters-Yahoo News..!

மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தகவல்களுடன் குருவிகள்..!


- Thala - 04-26-2006

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=183329#183329
நாரதரும் உரிமை கோரி இருக்கார்....! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- தூயவன் - 04-26-2006

Sujeenthan Wrote:இது கூடுதலாக உள்வீட்டுச் சதியாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் சரத் பொன்சேகா இராணுவ உயர் மட்டத்தில் பலராலும் வெறுக்கப்பட்டவர். புலிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றால் இராணுவத்தின் பாதுகாப்புத் திறமையைப் போற்றவேண்டும்.

நிச்சயமாக. ஏனென்றால் சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பின்பு பல மூத்த இராணுவத் தளபதிகளை கண்டபடி பதவி இறக்கம் செய்தவர். இதனால் பலர் பதவியை விட்டு ஒதுங்கிப் போனார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் வெறுப்புற்ற சிங்கள இராணுவத் தளபதிகள் அப்பகுதியில் ஏதும் குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்திருக்க கூடும். புூசி மெழுகிக் கதைப்பது சிங்கள தேசத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இதனால் தான் கண்காணிப்பு குழுவும் சொல்லியிருக்கின்றது. "கதிர்காமர் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று".


- AJeevan - 04-26-2006

தூயவன் சொல்வது போல சில சந்தேகங்கள் வரவே செய்கிறது.
நேற்றைய ஒரு பேட்டியில்

[quote] :?: கொழும்பு தாக்குதல் புலிகளுடையது என சொல்ல முடியுமா என
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் Helen Olafsdottir அவர்களிடம் கேட்ட போது.............

:!: " அதை எப்படிச் சொல்வது புலிகள்தான் காரணமென்று?
காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் கொலைக்கும் புலிகள்தான் காரணம் என சிறீலங்கா அரசு சொன்னது.
நாம் அவர்கள் சேகரித்த தகவல்களை வழங்கும்படி கோரினோம்.
ஆனால் இதுவரை கதிர்காமரின் கொலை தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறீலங்கா அரசு எமக்குத் தரவில்லை!
எனவே அவர்கள் சொல்கிறார்கள் என்று நாங்களும் சொல்ல முடியாது" என்றார்.


- kurukaalapoovan - 04-26-2006

நேற்று சம்பவம் நடந்து ஒரு கொஞ்ச நேரத்துக்குள்ளேயே (1 மணத்தியாலம் கூட சென்றிருக்காது) தற்கொலைத்தாக்குதல் என்று தலையங்கங்கள் வரத் தொடங்கி விட்டது. தற்கொலைத் தாக்குதல் என்ற முடிவிற்கு ஆதாரமாக படங்களோ அல்லது எந்த நேரே கண்ட சாட்சியத்தையும் மேற்கோள் காட்டவில்லை.

இரணுவத்தரப்பு பேச்சாளர் கூறியதாக சில மேற்குலகு கூடகங்கள் ஆதாரம் காட்டி செய்தி வெளயிட்டிருந்தார்கள். ஆனால் அவர் சாட்சியங்கள் தடையங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அதை தெரிவிப்பதாக விளக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. சிறீலங்கா இராணுவப் பேச்சாளரை கூட ஆதாரமாக மேற்கோள் காட்டிச் சொல்லும் செய்தில் எந்த நம்பகத்தன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாக எமது ஊடகத்துறை இன்றும் இல்லையா?

இவ்வாறு செய்திகள் வரத்தொடங்கி பல மணத்தியாலங்களிற்கு பிறகு தான் தற்கொலைதாரியின் கால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது தலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்டார்கள் படங்களுடன்.

வழமையாக மதிப்புக்குரிய மேற்குலக கூடகங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பொழுது allegedly, alleged, suspected போன்ற பதங்களை பயன் படுத்தி விடையம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டிக் கொள்வார்கள். தமிழ் இணைய ஊடகங்களில் வந்த ஆரம்பச் செய்திகள் பெரும்பாலானவை இந்த மதிப்புக்குரிய AFP, BBC, Resuters போன்ற நிறுவனங்களின் செய்திகளை (குத்துமதிப்பாக) மொழிபெயர்த்துப் போட்டார்கள். ஆனால் இந்த தமிழ் இணைய ஊடகங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு விறு விறுப்பாக சுடச் சுட செய்தி தருவதாக செய்த குத்துமதிப்பு மொழிபெயர்ப்புகளில் நம்பிக்கைக்குரிய மேற்குலக ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத விடையங்களை செய்தியாக வெளியிடும் போது கவனமாக பாவிக்கும் allegedly, alleged, suspected போன்ற பதங்கள் கலந்த வசனநடைகளை கவனிக்காது எழுதித்தள்ளினார்கள். நம்பிக்கைக்குரிய செய்திநிறுவனங்கள் உறுதிப்படுத்தபடவில்லை என்று எழுதும் ஒன்றை இவர்கள் ஊகத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதான வசனநடையிள் எழுதித்தள்ளியருக்கிறார்கள்.

செய்திகளின் தலையங்கங்களே தமிழ்த் தளங்களில் தற்கொலைத்தாக்குதல் என்று தீட்டப்பட்டிருக்கு. ஒரு சம்பவத்தைப்பற்றிய உறுதிப்படுத்தப்படாத விடையத்தை அந்த சம்பவம் பற்றி எழுதும் செய்தியின் தலையங்கத்தில் உள்ளடக்கலாமா என்ற அடிப்படைச் சிந்தனை இல்லையா இவர்களிற்கு?

இந்த விடையத்தில் தமிழ் ஒளிச் செய்திகள் மிகவும் நிதானமாக இருந்தது. அவர்களை இதற்கு பாராட்ட வேண்டும்.


- tamilini - 04-26-2006

அவையிட உள்வீட்டுச்சதிக்கு பலி அப்பாவித்தமிழரா..?? :evil: :evil:

Quote:நிச்சயமாக. ஏனென்றால் சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பின்பு பல மூத்த இராணுவத் தளபதிகளை கண்டபடி பதவி இறக்கம் செய்தவர். இதனால் பலர் பதவியை விட்டு ஒதுங்கிப் போனார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் வெறுப்புற்ற சிங்கள இராணுவத் தளபதிகள் அப்பகுதியில் ஏதும் குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்திருக்க கூடும். புூசி மெழுகிக் கதைப்பது சிங்கள தேசத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இதனால் தான் கண்காணிப்பு குழுவும் சொல்லியிருக்கின்றது. "கதிர்காமர் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று