02-17-2004, 10:44 AM
லண்டனில் வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளல் இரு தமிழழ மகன்கள் பற்றிய செய்தி முக்கிய செய்தியாக இன்று வந்துள்ளது. ஆனால் நல்ல செய்தியாக அல்ல. ஒரு கர்ப்பணி பெண்ணை காரால் அடித்து (விபத்து) விட்டு தப்பியோடியது. 30 வயதுப் பெண் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். மனிதபிமானம் இல்லாது தப்பியோடியவர் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர் என்றும், தற்போது தலைமாறைவாகி விட்டார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன. இவருடன் இன்னுமொரு தமிழ் நபர் மேற்கூறிய நபரை காப்பாற்ற சட்டத்தை திசைதிருப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், இவர்கள் இருவரும் வேறு நாட்டுக்கு தப்பியோடியிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலீசார் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்னர். மனிதாபிமானமற்ற அகதிகள் என்று நம்மவரை முத்திரை குத்திய இந்த பத்திரிகைகளை வாசித்த போது மிகவும் அவமானமாக இருந்தது. நம்மவர்கள் தஞ்சம் தந்த இந்த நாட்டுக்கு பெருமைதேடித் தராவிட்டாலும் உபத்திரம் கொடுக்காது இருந்தால் உண்மையான அகதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் அல்லவா?

