04-24-2006, 10:06 AM
ஒருவர் சீண்டும் நோக்குடன் கருத்தை வைத்து அதன் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்க விரும்புகிறார் எனில், நாம் அவரின் உபாயத்திற்கு எடுபடும் வகையில் ஏன் சீண்ட்டப்பட வேண்டும். நாம் வைக்கும் கருதுக்களை ஆளமாகச் சிந்தித்து நிதானமாக வைப்போமாகில் ஏன் சீண்டப் பட வேண்டும்?ஏன் மற்றைய உறவுகள் மனம் புண்படும் படி கருத்தாட வேண்டும். நாம் வைக்கும் கருத்துக்களை ஏன் பிறர் கட்டுப்படுத்த வேண்டும்? நாம் கருத்து எழுதாமல் விடுவதால் வைக்கப் படும் கருத்திற்கு எதிர் வாதம் இல்லாமல் போகிறது.ஆகவே நிதானமாகப் பதில் அழித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.மரியாதை இன்றி கீழ்த்தரமான சொற்பிரயோகங்கள் பாவிக்கப் பட்டால் அதனை நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அகற்ற வேண்டும்.அதை விடுத்து நாமும் மரியாதைக் குறைவாக அரசியற் தலைவர்களைத் தாக்குவது அவர்கள் மேல் பல்வேறு காரணங்களுக்காக அன்பும் ,மரியாதையும் வைத்திருக்கும் மற்றவர்கள் மனதையும் புண்படுத்துவதாக ஆகி விடும். நாம் வைக்கும் விமர்சனங்கள் உண்மயானவையாக, நேர்மயானவையாக மரியாதை ஆனவையாக இருக்கும் இடத்து எதிர்க் கருதாளர்களும் சிந்திக்கும் நிலை ஏற்படும்.
இங்கே இடப்படும் கருத்துக்கள் புலனாய்வாளர்களால் வாசிக்கப்படுகிறது,பத்திரிகையாளர்களால் வாசிக்கப் படுகிறது,ஆகவே கவனமாகக் கருத்தாடுவோம்.தடையோ, தணிக்கயோ இதற்குத்தீர்வு அல்ல.
ஒருவர் மீண்டும் ,மீண்டும் சீண்டும் நோக்குடன் மரியாதைக் குறைவாக கருதுக்களை முன் வைப்பாராயின் அவரை எச்சிரிக்கை செய்து, பின்னர் கள நிர்வாகம் தடை செய்யலாம். ஆனால் அவர் இன்னொரு பேரில் மீண்டும் வந்து எழுதலாம்.ஒருவரின் சீண்டும் தன்மயை ,உள் நோக்கத்தை அடயாளம் காட்டும் வண்ணம் ஆதாரத்துடன் எதிர்க் கருத்தை களத்தில் எழுதி அவரை மற்றவர்க்கு அடயாளப் படுத்தலாம்.