![]() |
|
அண்ணோய் வணக்கம் - ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: அண்ணோய் வணக்கம் - ! (/showthread.php?tid=120) Pages:
1
2
|
அண்ணோய் வணக்கம் - ! - வர்ணன் - 04-21-2006 அண்ணோய் வணக்கம் - ! உங்களதான் - மோகன் அண்ணோய் -! ஏனுங்க இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -! எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்? லக்கி லுக் என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க - இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க - லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ! அது ஒரு பொருட்டல்ல திரு .மோகன் அண்ணோய் - சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு - கோவத்தில பதில் சொல்ல போய்- எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோன கருத்துக்கள் -நோகடிச்சிடுமோ - நன்றி கெட்டதனமாய் - அவர்கள் நினைக்க கூடுமோ என்று பயப்பிடுறோம் - அண்ணோய்! இதை ஒரு வழிக்கு கொண்டு வருவீங்களா? முடியுமா? எது என்னமோ- இப்பிடி - அசட்டையா இருந்ததாலதான் - ஒரு சூடு சுரணையும் இல்லாம - செத்து போற எங்க இனத்துக்கு - துயர் பகிர்வும் - கண்ணீர் அஞ்சலியும் - செலுத்திகிட்டு இருக்கோம் இன்னமும்! 8) Re: அண்ணோய் வணக்கம் - ! - தூயவன் - 04-22-2006 குறித்த நபர்கள் அடிக்கடி ஈழத்திற்கு இந்தியாவில் ஆதரவு இல்லை என்பதையும், பின் இந்தியத் தமிழர் மீது ஈழத்தவருக்கு வெறுப்பா என்று அடிக்கடி கட்டுரை எழுதுவதும் இரு பகுதி தமிழ்மக்களிடம் ஒரு வித பிரிவினையை, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தை தான் கொண்டிருப்பதாக எனக்கு புரிகின்றது. - Thala - 04-22-2006 அதுக்கும் மேலாக தமிழகத்தில் ஈழத்வருக்கு அல்லது புலிகளுக்கு ஆதரவு கிடையாது எண்றும் இங்கு இருப்பவர்களை கிழறி விடுவதே அவர்களின் முக்கிய செயலாக இருக்கிறது... ஈழத்தை ஆதரிக்கும் கோடிக்கணக்கான உள்ளங்கள் அங்கு இருக்கின்றது என்பது தெரியாமல் இவர்கள் அறியாமையில் உளர்வது மட்டும் உண்மை... அதே சமயம் தமிழகத்தில் இருந்து எங்களுக்காய் குரல் கொடுக்கும் தலைவர்களை கேவலப்படுத்தி அவர்களை தாக்கி எழுதுவதே இன்னும் எங்களின் மனங்களில் ரணங்களை ஏற்படுத்தும் செயல்... அந்த தலைவருக்கு தமிழகத்தில் ஆதரவு கிடையாது என்பது ஈழத்தவரின் தமிழகம் மீதான நம்பிக்கையை கேள்வியாக்குவதே காரணமாகும்... அதுவே அவர்களின் நோக்கம்... இங்கு லக்கிலுக் போண்ற ஒருவரை எனக்கு இந்தியாவிலே தெரியும்.. அவர் ஒரு பத்திரிகையாளர்... தினத்தந்தியில் வேலை செய்தார்... அவரின் இருப்பிடம் சென்னை கே.கே நகரில் இருக்கும் போலிஸ் குவாட்டஸில் குடி இருந்தார். சொந்த ஊர் திருச்சி... நான் ஒரு சமயம் அவரை சந்தித்து லஞ்சம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது...! அதுக்கு காரணம் பயங்கரவாதி சந்தேக நபராய் கைது செய்யப்பட்டு நான் (....) ரூபா பிணையில் வந்திருந்தேன்.... என்னை சம்பந்தமில்லாதவனாக காட்ட அந்த பத்திரிகையாளனின் அறிக்கை புலநாய்வுத்துறைக்கு கொடுப்பதுகாக ஒரு ENDLF உறுப்பினரால் அறிமுகப்படுத்த பட்டேன்... ம்ம்ம்ம் உண்மையில் அவர் ஒரு புலனாய்வு அதிகாரி.... ஈழதமிழரை கண்காணிக்கும் குழுவின் தலைவராக இருந்தவர்... அவர் எப்போதும் எல்லாருடனும் புலிகளை பற்றியும் ஈழத்தைபற்றியும் மிக உயர்வாக பேசிக் கொள்வார்... ஆனால் அதன் அர்த்தம் வேறானது எண்று நான் விரைவில் தெரிந்து கொண்டேன்...! - தூயவன் - 04-22-2006 Thala Wrote:இங்கு லக்கிலுக் போண்ற ஒருவரை எனக்கு இந்தியாவிலே தெரியும்.. அவர் ஒரு பத்திரிகையாளர்... தினத்தந்தியில் வேலை செய்தார்... அவரின் இருப்பிடம் சென்னை கே.கே நகரில் இருக்கும் போலிஸ் குவாட்டஸில் குடி இருந்தார். சொந்த ஊர் திருச்சி... நான் ஒரு சமயம் அவரை சந்தித்து லஞ்சம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது...! அதுக்கு காரணம் பயங்கரவாதி சந்தேக நபராய் கைது செய்யப்பட்டு நான் (....) ரூபா பிணையில் வந்திருந்தேன்.... என்னை சம்பந்தமில்லாதவனாக காட்ட அந்த பத்திரிகையாளனின் அறிக்கை புலநாய்வுத்துறைக்கு கொடுப்பதுகாக ஒரு ENDLF உறுப்பினரால் அறிமுகப்படுத்த பட்டேன்... ம்ம்ம்ம் உண்மையில் அவர் ஒரு புலனாய்வு அதிகாரி.... ஈழதமிழரை கண்காணிக்கும் குழுவின் தலைவராக இருந்தவர்... அவர் எப்போதும் எல்லாருடனும் புலிகளை பற்றியும் ஈழத்தைபற்றியும் மிக உயர்வாக பேசிக் கொள்வார்... ஆனால் அதன் அர்த்தம் வேறானது எண்று நான் விரைவில் தெரிந்து கொண்டேன்...! :wink: :wink: - putthan - 04-22-2006 இவ்வளவு தகவலையும் ஏன் இவ்வளவு காலமும் பிரசுரிக்கவில்லை.இன்றிலிருந்து லக்கி லுக்கு,ராஜாத்திராஜா,போன்றோறின் ஆக்கங்களுக்கு பதில் எழுதுவதை தவிர்த்து கொள்கிறேன்.காரணம் தமிழக உறவுகளை நான் நேசிப்பதனால்.சனநாயகம்,கருத்து சுகந்திரம் என்ற போர்வையில் இப்படிபட்ட புலனாய்வு அதிகாரி தேசிய போராட்ட எதிரிகளுக்கு பதில் எழுதுவதை விரும்பவில்லை இதை ஏனைய கள உறவுகளும் கடைபிடிப்பார்கள் என எதிர் பார்க்கிறேன். - கந்தப்பு - 04-24-2006 இவர்கள் உண்மையில் தேசியப்போரட்டத்திற்கு எதிராகக் காட்டிக் கொடுப்பவர்கள் அல்லது தமிழகப் பாப்பணர்கள் - வர்ணன் - 04-24-2006 <b>மேற்கோள்: இன்றிலிருந்து லக்கி லுக்கு,ராஜாத்திராஜா,போன்றோறின் ஆக்கங்களுக்கு பதில் எழுதுவதை தவிர்த்து கொள்கிறேன்.காரணம் தமிழக உறவுகளை நான் நேசிப்பதனால </b> இதுவே நான் சொல்ல நினைக்கிறதும் - புத்தன்! இந்த லக்கி - ராஜா பிராணிகள் யார் எமக்கு? அத்துடன் - இவர்களுக்கு பதில் சொல்லி - அதுல ஒரு மாறுதல் ஏதும் வருமா? அவதானமாய் கவனித்து பார்த்தால் - இந்த ஈவிரக்கமற்ற - இரண்டு பேரும் - சும்மா எல்லாரையும் சீண்டி விட்டு ......... அதுல - எங்கள பேச வைச்சு - கொப்பி பண்ணி இப்பிடிதான் - தமிழக உறவுகளுக்கு எதிராய் - ஈழத்தமிழர் இருக்காங்க - என்னு காட்ட வெளிக்கிடுறாங்களோ என்னமோ! எதிர் கருத்தாய் - இவர்கள் சொன்னதை எப்பிடி நாங்க - சுட்டி காட்டலாம்? அதுதான் அப்பப்போ - தணிக்கை ஆயிடுதே!் 8) - mathanarasa - 04-24-2006 அப்பிடிப் போடு என் ராசா!! உனக்கு அறிவு ஜாஸ்தி தான் - Danklas - 04-24-2006 இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன், ஒரு கருத்துக்களத்தில் ஒருவர் கருத்தை முன்வைப்பது அவரின் சுதந்திரம், அதனை கோடிட்டு காட்டுவது மற்றவரின் சுதந்திரம், கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாதவிடத்து ஏற்படும் தாக்கமே இவ் கருத்து தலைப்பின் நோக்கம், ராஜாத்திராஜா, லக்கிலுக் போன்றவர்களால் இங்கு பலர் பலவற்றை அறிந்து இருக்கின்றார்கள், எப்படியெனில் லக்கிலுக் தன் காது வழியால் கேள்விப்பட்டவற்றை இங்கு அவர் கேள்வியாகவோ அன்றி அறியாமையினாலோ முன் வைக்கும் பொழுது அந்த கருத்துக்கள் சிலவேளை இங்கு இருக்கும் பலருக்கும் தெளிவில்லாமல் இருந்து இருக்கலாம், அந்த நேரத்தில் பல உறுப்பினர்கள் அவ் கேள்வியின் விளக்கத்தை இங்கே தெரிவிக்கின்றபொழுது மேலும் பல விடயங்களை அதனூடக புரிந்துகொள்ளமுடியும். இருந்தாலும் லக்கிலுக், ராஜாத்திராஜா போன்றோரின் கருத்துக்கள் ஓரிரு நேரத்தில் எல்லை மீறும்பொழுது அவ்வேளைகளில் மட்டுறுத்தினர்கள் தலையிடலாம், அதனை விடுத்து இவ் உறுப்பினரை வெளியேற்றுவதோ அன்றி வெளியேற்றுமாறு கூக்குலிடுவதோ ஒரு கருத்தாளனின் இயலாமையின் தன்மையை எடுத்துக்காட்டுகிறதாகவே நான் கருதுவேன்.
- narathar - 04-24-2006 ஒருவர் சீண்டும் நோக்குடன் கருத்தை வைத்து அதன் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்க விரும்புகிறார் எனில், நாம் அவரின் உபாயத்திற்கு எடுபடும் வகையில் ஏன் சீண்ட்டப்பட வேண்டும். நாம் வைக்கும் கருதுக்களை ஆளமாகச் சிந்தித்து நிதானமாக வைப்போமாகில் ஏன் சீண்டப் பட வேண்டும்?ஏன் மற்றைய உறவுகள் மனம் புண்படும் படி கருத்தாட வேண்டும். நாம் வைக்கும் கருத்துக்களை ஏன் பிறர் கட்டுப்படுத்த வேண்டும்? நாம் கருத்து எழுதாமல் விடுவதால் வைக்கப் படும் கருத்திற்கு எதிர் வாதம் இல்லாமல் போகிறது.ஆகவே நிதானமாகப் பதில் அழித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.மரியாதை இன்றி கீழ்த்தரமான சொற்பிரயோகங்கள் பாவிக்கப் பட்டால் அதனை நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அகற்ற வேண்டும்.அதை விடுத்து நாமும் மரியாதைக் குறைவாக அரசியற் தலைவர்களைத் தாக்குவது அவர்கள் மேல் பல்வேறு காரணங்களுக்காக அன்பும் ,மரியாதையும் வைத்திருக்கும் மற்றவர்கள் மனதையும் புண்படுத்துவதாக ஆகி விடும். நாம் வைக்கும் விமர்சனங்கள் உண்மயானவையாக, நேர்மயானவையாக மரியாதை ஆனவையாக இருக்கும் இடத்து எதிர்க் கருதாளர்களும் சிந்திக்கும் நிலை ஏற்படும். இங்கே இடப்படும் கருத்துக்கள் புலனாய்வாளர்களால் வாசிக்கப்படுகிறது,பத்திரிகையாளர்களால் வாசிக்கப் படுகிறது,ஆகவே கவனமாகக் கருத்தாடுவோம்.தடையோ, தணிக்கயோ இதற்குத்தீர்வு அல்ல. ஒருவர் மீண்டும் ,மீண்டும் சீண்டும் நோக்குடன் மரியாதைக் குறைவாக கருதுக்களை முன் வைப்பாராயின் அவரை எச்சிரிக்கை செய்து, பின்னர் கள நிர்வாகம் தடை செய்யலாம். ஆனால் அவர் இன்னொரு பேரில் மீண்டும் வந்து எழுதலாம்.ஒருவரின் சீண்டும் தன்மயை ,உள் நோக்கத்தை அடயாளம் காட்டும் வண்ணம் ஆதாரத்துடன் எதிர்க் கருத்தை களத்தில் எழுதி அவரை மற்றவர்க்கு அடயாளப் படுத்தலாம். - kurukaalapoovan - 04-24-2006 யாரால் உன்னை ஆத்திரமடைய வைக்க முடியுமோ அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துகிறார்கள். - Luckyluke - 04-24-2006 நன்றி டன்க்ளாஸ்.... நானும் இந்தக் களத்துக்கு வந்து நிறைய அறிய முடிந்தது... என் பார்வை இப்போது வெகுவாக மாறி இருக்கிறது.... வெளுத்ததெல்லாம் பால் என்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்.... நிறையப் பேர் இங்கே கிணற்றுத் தவளையாக வறட்டு வாதம் தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.... - rajathiraja - 04-24-2006 நன்றி டன் !! எங்களை புரிந்து கொண்டதற்க்கு நன்றி !! நண்பர்களே !! உண்மை சுட தான் செய்யும் !! எங்கள் மீது பாய வேண்டாம் !! உங்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் உண்மையான எண்ணங்கள்,உங்கள் போரட்டதையும்,உங்கள் தலைவரையும் பற்றி எண்ண நினைகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்திய பாரங்களில் கொஞ்ச நேரத்தை செலவு செய்து தெரிந்து கொள்ளவும்!! அல்லது தமிழ் நாட்டுக்கு வர வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக தெரிந்து கொள்ள முயர்சி செய்யவும். ஆயிரக்கணக்கான வலைபூக்கம், தமிழ் பாரங்க்ள் உள்ளன. - rajathiraja - 04-24-2006 கந்தப்பு Wrote:இவர்கள் உண்மையில் தேசியப்போரட்டத்திற்கு எதிராகக் காட்டிக் கொடுப்பவர்கள் அல்லது தமிழகப் பாப்பணர்கள்ஆமாம் !! இப்படியே உங்களை நீங்களே சமாதான படுத்தி கொள்ள வேண்டியது தான் - rajathiraja - 04-24-2006 நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை !! தமிழ் நாட்டில் எண்ணற்ற ஈழ மக்கள் அடைகலம் தேடியும், கல்வி கற்பதற்க்காவும் வசிகின்றனர். அவர்கள் எல்லாரும் எண்ண இது போல காவல் துறையிடம் அவஸ்தை படுகிறார்களா? சில ஈழ தமிழ்கர்கள் வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று இந்திய கடவு சீட்டு போன்றவறை போலியாக தயாரித்து மாட்டி கொள்கிறார்கள். மும்பை விமான நிலையத்தில் வாரத்துக்கு ஒரு தடவையாவது கொழும்விற்க்கு பயண சீட்டு எடுத்து , இமிகிறேஷன் முடித்து பின் அதே நேரத்தில் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறி செல்வது பற்றி நாளிதழ்களில் செய்தி வரும் !! இது போல நாங்களும் பலவும் சொல்ல முடியும் Thala Wrote:அதுக்கும் மேலாக தமிழகத்தில் ஈழத்வருக்கு அல்லது புலிகளுக்கு ஆதரவு கிடையாது எண்றும் இங்கு இருப்பவர்களை கிழறி விடுவதே அவர்களின் முக்கிய செயலாக இருக்கிறது... ஈழத்தை ஆதரிக்கும் கோடிக்கணக்கான உள்ளங்கள் அங்கு இருக்கின்றது என்பது தெரியாமல் இவர்கள் அறியாமையில் உளர்வது மட்டும் உண்மை... - தூயவன் - 04-24-2006 rajathiraja Wrote:நன்றி டன் !! எங்களை புரிந்து கொண்டதற்க்கு நன்றி !! நண்பரே மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுமுன் தாங்க்ள ஈழப் போராட்டத்தை எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றீர்கள் என்பதைச் சொன்னபின்பு அதை பற்றி நீங்கள் கதைப்பது பற்றி முடிவெடுங்கள் அதை விட உண்மைச் சொன்னால் சுடும் என்பதையும் உங்களின் எழுத்து பாணிகளிலும் அறிய முடிகின்றது தான் :wink: - rajathiraja - 04-24-2006 எனக்கு ஈழ பிரச்சனை உங்கள் அளவுக்கு அறிந்தவன் அல்ல !! நான் தேவை இல்லாமல் ஈழ் பிரச்சனை பற்றி பேசுவதை நிறுத்தி பல நாட்கள் ஆகி விட்டது . சொல்ல போனால் எங்கள் நாட்டையும் அதன் தலைவர்களையும் ஏளனம் செய்யும் போது தான் நான் ஏழுதுவதே வழக்கம். அதே போல எங்கள் ஊர் செய்திகள் எனக்கு உங்களை விட அதிகமாக தெரியும் தானே ! அதை நான் சொன்னால் ஏன் உடனே கோவம் வருகிறது. சொல்ல போனால் நான் ஈழம் மேல் அனுதாபம் கொண்டவனாக தான் இருந்தேன். பின்னர் பல நண்பர்கள் ஈழத்தை விட்டு எங்களுக்கு தேவை இல்லாத ஆலோசனையும், என் நாட்டு மக்களையும் கடினமாக விமர்சனம் செய்யும் போக்கினால் நானும் எதிர் விமர்ச்னம் செய்ய நேரிடுகிறது. நான் உங்கள் தலைவர்களையும் , மக்களையும் விமர்சனம் செய்ய உரிமை கிடையாது. அது போல என் நாட்டையும், மக்களையும் பல தளங்களில் எவ்வள்வு சொன்னாலும் எனக்கு உரிமை உண்டு என்ற போக்கில் கேவலமாக விமர்ச்னம் செய்கின்றனர். ஒரு தள்த்தில் உலக தமிழர்களுக்கு பாலமாக செயல் படிகிறோம் என்று சொல்லி கொண்டு தமிழ் நாட்டு பிரிவினையும் , ஜாதி தாக்குதலும், இந்திய அரசின் மீது புழுதி வாரி கொட்டுவதும் தான் நடக்கிறது. இந்த போக்கு தான் எல்லாவற்க்கும் காரணம். தமிழ்ன் என்று சொல்லி போராட்த்துக்கு ஆதர்வு தாரீர் என்று சொன்னால் யாரும் ஏளனம் செய்ய மாட்டார்கள். தேவை இல்லாமல் எங்கள் உள் நாட்டு விழ்யங்களில் மூக்கு நிழைத்து இலவச ஆலோசனை செய்யும் போது தான் வம்பு வருகிறது - Danklas - 04-24-2006 ராஜாத்திராஜா, லக்கிலுக், உங்கள் இருவரையும் குளிர வைப்பதற்காக மேலே நான் அந்த கருத்துக்களை முன்வைக்கவில்லை, உங்கள் இடத்தில்வேறொருவர் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன், ஆனால் உங்களின் தமிழீழ கொள்கைக்கைக்கு எதிராகத்தான் எனது கருத்துக்கள் வரும், உங்கள் இருவருக்கும் இங்கு ஈழ யாழ்கள நண்பர்கள் விளங்கப்படுத்தும் கருத்துக்கள் விளங்குகிறதோ அல்லது விளங்காத மாதிரி நடிக்கின்றீர்களோ எனக்குதெரியாது, ஆனால் உங்கள் இருவரின் (சா 3வரின் மூலமாக இங்கு பலர் பலதை அறிந்துகொள்கிறார்கள், அறிந்துகொள்கிறார்கள் என்பதைவிட மற்றைய உறுப்பினர்களின் பதில் எதிர்கருத்தினால் அறிந்துகொள்கிறார்கள் என்பதே எனது கருத்து.. என்றைக்கு உங்களைப்போன்ற கருத்தாளர்களுக்கு எதிரியாகவே எனது கருத்துக்கள் அமையும். அதற்காக உங்களை வெளியேற்றசொல்லி சிபார்சு செய்யமாட்டேன், உங்கள் கருத்துக்களுக்கு எதிராக கருத்துக்கள் வரும், அதைவிட அண்ணாத்தை வர்ணன், நீர் ஈழத்துக்கு ஆதரவா கதைப்பதால் உம்மை ஒரு நாட்டுப்பற்றாளன் எண்டும், நான் ஆதரவா கதைக்கவில்லை என்றவுடன் துரோகி என்று நீர் நினைப்பீர் ஆனால் அது உமது மடை.... :evil: - Thala - 04-24-2006 rajathiraja Wrote:<b>நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை !!</b> தமிழகம் எனக்கு 2 வருட பரீட்ச்சியமான நாடு...! நான் இங்கு பொய் சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது....!! எனது அனுபவம் மற்றையோரிடம் பகிர்கின்றேன்... தமிழகத்தில் ENDLF எனும் அமைப்பின் செயற்பாடும் அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கான உதவியும் அரசு வழங்குவது உண்மைதான்... அதை பார்த்து எல்லா ஈழத்தவரையும் அரசு வாழவைக்கிறது என்று நீங்கள் இங்கு சொல்வதும் எங்களுக்கு நன்கு தெரியும்... தமிழகத்தில் தங்க பொலீஸ் பதிவுக்காகவும்... சட்டரீதியாக வீடு வாடகைக்கு எடுக்க படும் பாடும் உங்களுக்கு தெரிய நியாயம் இல்லைத்தான்... பணம் கையாள வங்கிகணக்கு ஆரம்பிக்க படும்பாடுகள், வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு பணம் அனுப்பினால்... வங்கி முகாமையாளரால் எடுத்து வட்டிக்கு விடப்படும் கொடுமை அனுபவித்தவன் நான்... கேட்டால் புலி எண்று போலீசில் பிடிச்சு கொடுப்பேன் என்று மிரட்டல்களும் அங்கு சாதாரணம்... நீங்கள் சொல்லும் வசதியாக வாழும் ஈழத்தவர் எல்லாருமே... ஒருவகையில் இந்திய புலநாய்வுத்துறையுடன் தொடர்புடையவகளும் அவர்களின் நண்பர்கள், உறவினர் மட்டுமே.... பின்னாளில் நானும் நன்றாகத்தான் இருந்தேன்... :wink: - Luckyluke - 04-25-2006 Danklas Wrote:ராஜாத்திராஜா, லக்கிலுக், உங்கள் இருவரையும் குளிர வைப்பதற்காக மேலே நான் அந்த கருத்துக்களை முன்வைக்கவில்லை, அப்படிச் செய்தாலும் குளிர்ந்து விட மாட்டோம்.... என் கருத்தை நீங்கள் எக்காலமும் மாற்ற முடியாது... அதுபோல உங்கள் கருத்தையும் என்னால் மாற்ற முடியாது.... இது வெறும் விவாதக் களம் மட்டுமே.... சில நேரங்களில் விவாதம் பயனுள்ளதாகவும், பல நேரங்களில் வெட்டியாகவும் உள்ளது.... நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கணித்து வைத்திருப்பதை நினைத்தால் நகைப்புக்கிடமாக இருக்கிறது.... "தல" போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்களா என்பதே எனக்கு சந்தேகம் தான்... எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஈழத்தமிழர் தான்... விடுதலைப்புலிகள் ஆதரவாளர் தான்.... அதுபோல எண்ணற்ற ஈழத்தமிழர்கள் 10 ஆண்டுக்கு முன்னால் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள்... தமிழ்நாட்டுக்கு சிறு வயதில் வந்து கல்வி கற்று இன்று அயல்நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்... அவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் கருத்து சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்... இந்தியா எங்கிருக்கிறது என்ற் மேப்பில் கூட காண்பிக்க முடியாதவர்கள் எல்லாம் இந்திய அரசியலைப் பற்றி பேசுவது செம காமெடி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |