02-17-2004, 04:14 AM
[quote=BBC]இன்னைக்கு ஒரு குட்டி கதையோட ஆரம்பிக்கலாம் சரியா.
ஒரு ஊர்ல மூணு சகோதரங்க இருந்தாங்க, அவங்களுக்கு பூர்வீக சொத்தா கொஞ்சம் நஞ்சை புஞ்சை இருந்துச்சு, ஓ நஞ்சை புஞ்சைன்னா என்னன்னு கேக்கிறீங்களா. சரி கொஞ்சம் காணி நிலம் இருந்துச்சுன்னு வைச்சுக்குங்க. இதுல ஊருக்கு தெற்கிலையும் மேற்கிலையும் இருக்கிற நிலம் பெரியண்ணனோடது. வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும் சின்ன அண்ணனோடது. கிழக்கிலை மிச்சம் இருக்கிறது கடைக்குட்டி சின்னத்தம்பியோடது. இந்த காணி நிலங்களை நம்ம பெரியண்ணன் தான் பாத்துக்கிட்டார்.
இப்பிடி இருக்கும்போது பெரியண்ணன் தம்பிகளோட சொத்தை கொஞ்சம் கொஞ்சமா சுரண்ட ஆரம்பிச்சார். தம்பிக்களுக்கெல்லாம் ரொம்ப கவலை என்னடா நம்ம அண்ணன் இப்பிடி பண்றார் அப்பிடின்னு. கொஞ்சநாள் பொறுத்து பாத்தாங்க அப்புறம் தம்பிங்க இரண்டுபேரும் பொறுக்க முடியாம அண்ணன் கூட சண்டை போட ஆரம்பிச்சாங்க.
இதுமாதி சண்டை நடந்துக்கிட்டிருக்கும் போது எப்பிடியோ சின்ன அண்ணனுக்கும் கடைக்குட்டி தம்பிக்கும் மனஸ்தாபம் வந்திருச்சு. அதில இருந்து கடைக்குட்டி அவரோட பெரியண்ணன் கூட சண்டைய நிறுத்திட்டு அவங்க சண்டைய வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.
ஊர் மக்களெல்லாம் இந்த சண்டைய பாத்துட்டு என்னடா ரொம்ப நாளா சண்டை போட்டுகிட்டிருக்காங்களே சரி நாமதான் இத தீர்த்து வைக்கணுமுன்னு போய் பஞ்சாயத்து பண்ணி சொத்த பிரிச்சு குடுக்க முயற்சி பண்ணினாங்க. எதை குடுக்கிறது வாங்கிறதுன்னு பெரிய அண்ணனுக்கும் சின்ன அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை நடக்குது. சின்ன அண்ணன் சொல்றாரு ஊருக்கு வடக்கையும் கிழக்கையும் இருக்கிறது எங்க நிலம் என் கிட்ட குடுத்திருங்க. நானும் கடைசி தம்பியும் சேர்ந்து இருந்துக்கிறோம் அப்பிடிங்கிறான்.
இந்த நேரம் பாத்து கடைசி தம்பி குண்டை தூக்கி போட்டான். எனக்கு என் நிலத்தை தனியா குடுத்திடுங்க அப்பிடின்னு. சின்ன அண்ணனுக்கு ரொம்ப அதிர்ச்சி. என்னடா நம்ம கூட இருந்திட்டு இப்பிடி பண்றானேன்னு. நாமதான் அவனுக்கு சேர்ந்து சண்டை போட்டோம். இவன் சண்டையும் போடலை இழப்புகளையும் சந்திக்கிகலை. சும்மா இருந்து நம்ம சண்டையில குளிர் காஞ்சிட்டு இப்ப பலனை மட்டும் அனுபவிக்க வந்துட்டான் அப்பிடின்னு.
இதெல்லாம் உண்மைதான் ஆனா என்ன செய்யுறது. அவந்தான் சேந்திருக்க மாட்டேங்கிறானே. அவனோட அவன்கிட்ட குடுத்துதான் ஆகணும். இதுக்காக நீ கஸ்டப்படலை, ஏன் கூடசேர்ந்து சண்டை பிடிக்கலை அதனால குடுக்கமாட்டன்னு சொல்ல முடியாது. அப்புறம் பெரியண்ணனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?
<b>இப்ப சின்ன அண்ணன் என்ன பண்ணலாம்?</b>
1) அவங்கூட தனியா பேசி பழசு எல்லாம் மறந்திருவம். பெரியண்ணன் கிட்ட சொத்த வாங்கி நாம இரண்டு பேரும் தனியா இருப்பம். நா உன்னை நல்லா பாத்துபேன்னு சொல்லணும்.
<b>ஆனா அதுக்கு கடைசி தம்பி ஒத்துக்கணும்</b>
இல்லைன்னா
2) சொத்து பிரிக்கும் போது 3 பங்கா பிரிச்சு எடுத்துக்கணும்
அப்பிடியும் இல்லைன்னா
3) <b>பெரியண்ணன்கிட்டை இருந்து தன்னோட (வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும்) சொத்தை மட்டும் பிரிச்சு வாங்கிக்கணும். மத்ததை என்ன சரி பண்ணுங்கடான்னு விட்டுடனும். மத்தவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாலும் சரி இல்லை கடைகுட்டி திரும்ப சண்டை பிடிச்சு பெரியண்ணன் கிட்ட இருந்து வாங்கினாலும் சரி. என்ன சரி பண்ணிக்கிட்டு ஓழியட்டும். அது அவங்க பிரைச்சனை.</b>
பாராட்டுக்கள் B.B.C குட்டிக்கதைக்கு
ஆனால் கதையை இப்படி திருத்தி எழுதுங்கள்.
தந்தை இறக்கும் தறுவாயில் கடைக்குட்டி பால்குடி பெரியண்ணாவின் மடியிலும் சின்னண்ணணின் தோளிலும் தொங்கிக்கொண்டிருந்தான் சரியாக தவளக்கூட தெரியாது
இந்த வேளையில் நிலத்தில் எப்படி அவனுக்கு பங்கு ஒதுக்கலாம அப்பா யோசித்தார் பெரியவனும் சின்னவனும் வளர்ந்துவிட்டார்கள் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நியாயம் கடைக்குட்டி எனது பிள்ளை என்றாலும் நிலத்தை வைத்து எதுவும் செய்யமாட்டான் எனவே நிலத்தை பெரியவனிடமும் சின்னவனிடமும் ஒப்படைத்து விட்டு கடைக்குட்டியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்
சிறிது காலம் எல்லாம் நன்றாக தான் நடந்தது பெரியண்ணன் பார்த்தார் நான் தான் முதலில் வந்தது அப்பா சொத்து எனக்கே சொந்தம் என்று ஆக்கிரமிக்க தொடங்கினார் இது சின்னவருக்கு விளங்கியதும் முதலில் அண்ணனுடன் பேசிப்பார்த்தார் சரிவரவில்லை முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்று அண்ணன் நிற்கிறார் தண்டினால் சரிவராது தடிதான் சரிவரும் என தடியெடுத்தார்
இருவருக்கும் தொடங்கியது சண்டை சிறியவர் வளவுக்குள் பெரியவர் வேலியடைப்பதும் அதை இவர் கொழுத்துவதுமாக ஒரே சண்டை
இப்போது கடைக்குட்டி பால்குடி இல்லை ஓரளவு விபரம் புரியும் வயது அவருக்கும் சின்னண்ணனின் அங்கலாய்ப்பும் பெரியண்ணணின் ஏமாற்று வேலையும் புரிந்தது முதலில் சின்னவருடன் சேரலாம் என நினைத்தார் பெரியண்ணணை ஏசவும் தொடங்கினார்
இப்போது பெரியண்ணனுக்கு கள்ள மூளை வேலை செய்தது இப்போதைக்கு சின்னவனை சமாளிப்பது கஸ்டம் அத்துடன் கடைக்குட்டியும் சேர்ந்தால் ஊர் நியாயமும் அவர்கள் பக்கமும் அவர்கள் பக்கமே இருக்கும் அதனால் முதலில் இருவரையும் பிரிக்கவேண்டும் என திட்டம் போட்டார் இதில் என்ன பிரச்சனை என்றால் கடைக்குட்டிக்கு பெரியவரிலும் பார்க்க சிறியவரில் நல்ல வாரப்பாடு எனவே பெரியவர் தக்க ஆயுதத்தை கையிலெடுத்தார் உனக்கும் இந்த காணியில் உரிமை இருக்குதானே நீயும் கேள் என்று உசுப்பி விட்டார் கடைக்குட்டிக்கு நிறைய மிட்டாய்கள் வாங்கி கொடுத்து அவனில் தான் பாசம் மாதிரி காட்டிகொண்டார் முதலில் கடைக்குட்டி இந்த சண்டையில் பங்கு பற்ற விரும்பவில்லை அவரவர் தமக்கு சொந்தமானதுக்கு அடிபடுகிறார்கள் இதில் எனக்கு எதுவும் சொந்தமில்லையே நான் எப்படி கேட்கலாம் என்பது அவர் பிரச்சனை பின்னர் பெரியவரின் தேய போதனையால் சின்னவரின் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அவருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் சின்னவரின் திட்டங்கள் பற்றி பெரியவருக்கு தகவல் கொடுத்தார்,தானும் தன் பங்குக்கு அழிவு வேலைகள் செய்தார்.
சின்னவருக்கு ஒரே தலையிடி கடைக்குட்டிதனே அடிக்கவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை கடசியில் பொறுக்கமுடியாமல் வீட்டை விட்டுப் போகும் படி கடைக்குட்டிக்கு சொன்னார் அத்துடன் இந்த வீட்டில் இருப்பதெல்லம் எனது சொத்து எதையும் நீ எடுக்க கூடாது எல்லாம் நான் கஸ்டப்பட்டு சம்பாதித்தவை என்று சொல்லிவிட்டர் அப்படியாயினும் தம்பி தன் பங்கு காணியில் இருப்பதற்கு தடை சொல்லவில்லை
இந்த சின்னவரின் காணியில் தென் கிழக்கு மூலையில் சின்னதாக பாத்தி கட்டி கடைக்குட்டி மிளகாய் வளர்த்து வந்தார் அதே போன்று மேற்கு கரையோரம் சின்னவர் தம்பி விவசாயம் செய்யவும் அனுமதித்திருந்தார் அதே போன்று பெரியவரின் காணிக்குள் கடைக்குட்டியின் மிளகாய்த் தோட்டங்களும் வயல்களும் இருந்தன அவை அளவிலும் பெரியவை இதெல்லாம் இருவரும் விபரம் தெரிந்த காலத்திலிருந்தே நடந்து வருபவை
வீட்டை விட்டு வெளியேரிய கடைக்குட்டி தான் இதுவரை காலமும் சின்னவருக்கெதிராக மறைமுகமாக செய்த வேலைகளை மறைமுகமாக செய்ய ஆரம்பித்தார் தான் இதுவரை செய்த மிளகாய்த்தோட்டம் தவிர காய்கறித்தோட்டம் அது இது என்று போட்டு தென்கிழக்கு மூலையை ஆக்கிரமித்துகொண்டார் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் கடைக்குட்டி தோட்டம் செய்ய சகல உத்வியும் வழங்கியதோடு தனது காணி எல்லையை சின்னவரிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார் கடைக்குட்டியும் சின்னவரிடம் இருந்த கோபத்தை சின்னவர் வளர்க்கும் நாய் கோழி முதலியவற்றை அழித்து தீர்த்துக்கொண்டார் இதைப்பார்த்த சின்னவர் சும்மா இருப்பாரா? கடைக்குட்டியை பிடித்து நாலு அடி போட்டார் அவ்வளவு தான் கடைக்குட்ட்ய் குய்யோ முறையோ என்று கத்த ஆரம்பித்து விட்டார் பெரியண்ணணிடமும் ஊர் பெரிய மனிதர்களிடமும் முறையிட்டார் தான் செய்த அழிவு வேலைகளை மறைத்து நல்ல மனித வேடம் போட்டர் இவ்வளவு காலம் பெரியவனுக்கு வால் பிடித்துவிட்டு இன்று பெரியவன் சின்னவன் இருவரிடமும் அடிபடுவது தான் தான் என்று கதையளந்தார் பெரியவன் சின்னவன் சண்டையில் தனக்கு சொந்தமிலாத ஆனால் இதுவரை காலமும் செய்து வரும் தென் கிழக்கு மூலை மிளகாய் தோட்டம் தனக்கு கிடைக்காதா என்ற நப்பாசை அவருக்கு
சின்னவருக்கு இவ்வளவு காணியும் போகக்கூடது என்ற நோக்கத்துடன் பெரியவரும் அவனும் அபா பிள்ளை தானே அவனுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் தானே என்று ஊர் பெரிய மனிதர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார் உண்மையில் சின்னவருக்கு கிடைக்க இருப்பதோ 1/3 பங்குதான் அதிலும் கடைக்குட்டி பங்கு கேட்டால் தனக்கு என்ன மிச்சம் என்பது சின்னவரின் ஆதங்கம் வேண்டுமானால் பெரியண்ணன் வைத்திருக்கும் பெரிய காணியில் பங்கு கேட்கட்டுமேன் அவன் செய்து வரும் பெரிய தோட்டங்கள் அங்குதானே இருக்கின்றன இது சின்னவர் வாதம்
பெரியவர் பார்த்தார் சின்னவனிடமிருந்தே காணிகளை ஆக்கிரமித்த எனக்கு இந்த கடைக்குட்டி எம்மாத்திரம் அதனால் கடைக்குட்டி கேட்பதெல்லாவற்றுக்கும் தலையாட்டியவாறே சின்னவரின் காணியில் பங்கு பிடுங்கி கடைக்குட்டிக்கு கொடுப்பதில் குறியாக இருக்கிறார் கடைக்குட்டி வாங்குவதை வாங்கட்டும் அப்புறம் அவனிடமிருந்து நாம் எல்லாவற்றையும் தான் பறித்துக்கொள்ளலாம் என்பது பெரியவர் திட்டம்
இது தெரியாத கடைக்குட்டி தனக்கு சொந்தமில்லாவிட்டாலும் தான் தோட்டம் செய்த காரணத்துக்காக தனக்கு தென்கிழக்கு மூலையை பிரித்து தரவேண்டும் என நிற்கிறார்
சரி எங்கே வாசகர்களே உன்கள் கருத்தை சொல்லுங்கள்.
சின்னவர் தம்பி செய்த அனியாயங்களை மன்னித்து பழகியபடி அரவணைக்க தயார் ஆனால் இவர் போக மாட்டேன் என்கிறார் இது நியாயமா?
அப்படித்தான் அவனும் பிள்ளைதானே அவனுக்கும் அப்பா சொத்தில் பங்கு உள்ளதுதானே என்று நியாயம் தான் ஆனால் அதனை பெரியவர் வைத்திருக்கும் பெரிய காணியில் கேட்கவேண்டியதுதானே ஏன் ஏற்கனவே துண்டாடப்பட்டிருக்கும் சின்னவர் காணியில் கேட்பான்?
நியாயப்படி பெரியவர் சின்னவர் பங்கு பிரிக்கும் இடத்தில் இவருக்கு இடமும் இல்லை அவசியமும் இல்லை இது யார் யார் அப்பா பிள்ளை என்ற பிரிப்பு இல்லை இது சின்னவனுக்கு எந்தெந்த காணிகள் சேரவேண்டுமென பெரியவர்கள் பிரிக்கும் பங்கு கடைக்குட்டி கைகட்டி வேடிக்கை பார்க்கலாம் அல்லது இதைவிட்டால் தனக்கு காணி கிடைக்காது என்று தெரிந்தால் பெரியவரின் காணியில் தனது பெரிய தோட்டம் இருக்கும் இடமாக பார்த்து அது தனக்கு வேண்டுமென்று பெரியவரிடம் கேட்கட்டும் சண்டை பிடிக்கட்டும் பெரியவருடன் சண்டைபிடிக்க பயமாக இருந்தால் அவர் தருவதை வாங்கிக்கொண்டு இருக்கட்டும் அது சின்னவர் கவலை இல்லை அவன் பங்கு கேடட்டும் அவனுக்கு உரிமை இருக்கு இல்லை எல்லாம் இவரது கவலை இல்லை தனது காணியில் பங்கு கேட்டால் தரமுடியாது இது சின்னவர் வாதம்

\" \"