Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது
#1
மலேசியாவில்
100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது
பக்தர்கள் கதறல்


கோலாலம்பூர், ஏப்.22-

மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர்.

சாமி கும்பிட்ட போது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

இடித்துத் தள்ளினர்

போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை இடித்துத் தள்ளினர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராக்கப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்ட போது, அதை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து விட்டனர். இதனால் நாங்கள் பிரார்த்தனையை பாதியிலேயே கைவிட வேண்டியதாகி விட்டது. அதிகாரிகள் கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.

இவ்வாறு அந்தப் புகாரில் சுப்பிரமணியன் ராக்கப்பன் கூறி இருந்தார்.

வணிக வளாகம்

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசாங்க நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. இங்கு பக்தர்கள் 100 ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்தக் கோவிலை இடித்து விட்டு இதில் மிகப் பெரிய வணிக வளாக கட்டிடத்தை கட்டுவதற்கு நகரசபை அலுவலகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கோவிலை இடிக்கப் போவதாக நகரசபை கவுன்சிலருக்கு நகரசபை கடிதம் எழுதியது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாமல் கோவில் இடிக்கப்பட்டது.

ஏற்கனவே 2 முÛ
2001-ம் ஆண்டும் 2004-ம் ஆண்டும் கோவிலை இடிக்க நகரசபை முயற்சி செய்தது. அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் தடுத்தனர். இப்போது இடித்துத் தள்ளி விட்டனர்.

இவ்வாறு ராக்கப்பன் கூறினார்.

நன்றி

தினத்தந்தி
Reply


Messages In This Thread
மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது - by aathipan - 04-22-2006, 12:40 PM
[No subject] - by putthan - 04-22-2006, 02:33 PM
[No subject] - by karu - 04-22-2006, 06:46 PM
[No subject] - by Netfriend - 04-22-2006, 07:11 PM
[No subject] - by Subiththiran - 04-22-2006, 07:17 PM
[No subject] - by Magaathma - 04-23-2006, 10:21 AM
[No subject] - by mathuka - 04-23-2006, 10:58 AM
[No subject] - by karu - 04-23-2006, 11:16 AM
[No subject] - by Subiththiran - 04-23-2006, 11:43 AM
[No subject] - by putthan - 04-23-2006, 12:16 PM
[No subject] - by Subiththiran - 04-23-2006, 12:43 PM
[No subject] - by putthan - 04-23-2006, 01:24 PM
[No subject] - by Magaathma - 04-23-2006, 01:47 PM
[No subject] - by putthan - 04-23-2006, 01:59 PM
[No subject] - by Magaathma - 04-23-2006, 03:01 PM
[No subject] - by mathuka - 04-23-2006, 07:25 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 05:39 AM
[No subject] - by mathuka - 04-24-2006, 09:43 AM
[No subject] - by karu - 04-24-2006, 12:44 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:14 PM
[No subject] - by putthan - 04-25-2006, 01:18 AM
[No subject] - by தூயவன் - 04-25-2006, 05:08 AM
[No subject] - by KING ELLALAN - 04-25-2006, 06:47 AM
[No subject] - by Magaathma - 04-25-2006, 07:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)