04-21-2006, 01:33 PM
kurukaalapoovan Wrote:அஜீவன் சுவிஸ்சில் வீடு வேண்ட முடியாதா? ஏன் வீடுகள் சொத்துகள் வேண்ட பிரித்தானியாவிற்கு போக வேணும்?
<span style='font-size:21pt;line-height:100%'>இது காசு இருக்கிறவருடைய தனிப்பட்ட விடயம் என்றுதான் என் நினைப்பு குறுக்ஸ்.
இருந்தாலும்
இங்கும் தமிழர்களில் அதிகம் பேர் சொந்த வீடு வாங்கியிருக்கிறார்கள்.
வீடு வாங்கினால் மட்டும் இங்கு போதாதே?
இதை முறையாக பராமரிக்க போகும் செலவு அதிகம்.
அதை விட வீடு வாங்கின இடத்தை விட்டு
தூர இடத்துக்கு ஒரு வேலை மாறினால்
போய் வர போகும் செலவை விட
வாடகை வீட்டில இருப்பது சுதந்திரம்.
இந்த வீடு வேணாம் எண்டால்
இன்னொரு வீடு.............
<b>சொந்த வீடு வாங்கி உடனே வாடகைக்கும் விட முடியாது.
அப்படி ஒரு சட்டம் இங்க.</b>
இங்கு ஏதாவது சுத்து மாத்து செய்தால் வீட்டை வேற அரசு எடுத்திடும்.
காசு கொடுத்து வீடு வாங்கி கடைசியல பராமரிக்க முடியாம
அதை வயோதிபர் மடத்துக்கு எழுதிவிட்டு
வயோதிபர் மடத்தில இருக்குதுகள் ஒரு சுவிஸ் கணவன்-மனைவி.
இவர்களது மகள் என்னோடு வேலை செய்கிறாள்.
அவளிடம் நீ ஏன் அதை கேட்டு வாங்கக் கூடாது என்று கேட்டேன்.
ஐயோ..........
அதை பராமரிக்க என் சம்பளம் போதாதப்பா?
எனக்கும் நாளைக்கு எங்க அப்பா அம்மா நிலைதான் நடக்கும்
என்று சொல்லி வாடகை வீட்டில் இருக்கிறாள்.
ஆனாலும் அவள் பிலப்பைன் மணிலாவில் ஒரு வீடு வாங்கி விட்டிருக்கிறாள்.
அங்கே ஒரு குடும்பம் வேலைக்கு இருக்கிறார்கள்.
இவள் விடுமுறை காலங்களில் அங்குதான் போவாள்.
வயோதிப காலத்தில் அங்கு தங்க இருப்பதாக கூறுகிறாள்.
லண்டன்ல இந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம்?
இப்படி .................... எவ்வளவோ எழுதலாம். :wink: </span>

