Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்!
#24
இளையதம்பி,
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகப் பிரதேசங்கள் என்பதால் அல்ல. போராட்டம் ஆரம்பித்தது முதல் அது வழர்ந்து தேசியவிடுதலைப் போராட்டமாக பரிணாமம் பெறக் காரணம் மக்கள் ஆதரவு. பூரண மக்கள் ஆதரவிற்கு காரணம் அவர்களின் ஒன்றுபட்ட அனுபவங்கள். அதாவது திட்டமிட்ட குடியேற்றங்கள், மொழியுரிமைப் பறிப்புகள், இனரீதியான அடக்குமுறைகள், சம உரிமையற்ற ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள். இவற்றை ஜனநாயகரீதியாக தட்டிக்கேட்ட பொழுது வன்முறையாக கிடைத்த பதில்கள் கட்டவிள்த்துவிடப்பட்ட இனபடுகொலைகள்.

உலகத்திலுள்ள இனங்களெல்லாம் இனம் அடிப்படையே காரணமாக வைத்து தமது தாயகபிரதேசங்களிற்கு விடுதலை பெற வெளிக்கிட்டால் நிலமை என்ன?

எமது போராட்டம் ஆரம்பித்தது சிங்கள இனவாதத்தினால் அதற்கு தீர்வு தான் வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பொரும்பான்மை சிங்கள இனவாதம் தமிழருக்கு சம உரிமை கொடுத்து மரியாதையோடு இணைந்து வாழும் பக்குவத்தை அடையவில்லை. அதாவது சிங்கள இனவாதத்திலிருந்து அடக்கு முறைகளிலிருந்து விடுவித்து சுயமான ஆட்சியில் மரியாதையாக வாழத்தான் போராட்டம் நடக்கிறது. இனரீதியாக எமது தாயகம் ஆனபடியால் பிரிந்து செல்ல வேண்டும் என்ற மிதவாத நோக்கோடு அல்ல.

எந்தப்பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் (இராணுவரீதியிலே அல்லது பேச்சுவார்த்தையிலே) எமது ஆட்சியில் வரவேண்டும் என்பது எமது தாயகக் கோட்பாட்டிலிருந்து நியாயப்படுத்தப்படுகிறது.
இனரீதியாக மொழி அடிப்படயில் கலாச்சாரரீதியில் எமக்கு தனித்துவம் இருக்கு நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல நாம் உரிமைகோரும் பகுதிகளின் பூர்வீகர்கள் என்ற வாதங்கள் வருகிறது.

நீர் பிறநாட்டவருக்கு ஈழத்தமிழரின் போராட்டத்தை விளங்கப்படுத்தி நியாயப்படுத்தும் போது மொட்டையாக எங்கடை தாயகத்தை நாங்கள் அடிச்சு பிடிக்க போராட்டம் நடத்துறம் எண்டால் உம்மை ஒரு பிற்போக்குவாதியாக மிதவாதியாக மாத்திரமல்ல ஒரு பயங்கரவாதியாக கூடப்பார்ப்பார்கள்.

எனவே தமிழ்நாட்டு இந்தியாவிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று சொல்ல உலகத்தமிழன் என்ற சார்பின் உரிமையிருக்கு என்று பினாத்தாதையும். என்இனம் விடுதலை பெறவேண்டும் என்று மொட்டையாக உளறாதையும். யார் என்னத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கொஞ்சம் சிந்தியும்.
Reply


Messages In This Thread
[No subject] - by Vasan - 04-15-2006, 02:34 PM
[No subject] - by Subiththiran - 04-15-2006, 02:53 PM
[No subject] - by Vasan - 04-17-2006, 03:20 PM
[No subject] - by uoorkkruvi - 04-17-2006, 04:46 PM
[No subject] - by ukraj - 04-17-2006, 04:47 PM
[No subject] - by gowrybalan - 04-17-2006, 05:32 PM
[No subject] - by Vasampu - 04-17-2006, 05:53 PM
[No subject] - by வினித் - 04-17-2006, 06:41 PM
[No subject] - by Ilayathambi - 04-17-2006, 08:38 PM
[No subject] - by kurukaalapoovan - 04-17-2006, 09:31 PM
[No subject] - by Ilayathambi - 04-18-2006, 09:06 AM
[No subject] - by uoorkkruvi - 04-20-2006, 04:16 PM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 06:03 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 06:42 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:46 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 06:49 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:58 PM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 07:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 08:44 PM
[No subject] - by வினித் - 04-20-2006, 08:52 PM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 09:55 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 04:23 AM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 09:12 AM
[No subject] - by Ilayathambi - 04-21-2006, 12:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)