Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தினமும் கொலைகள்
#2
நேசன், இஸ்ரேல் மக்களை பலஸ்தீன போராளிகள் தாக்கி பழிதீர்ப்பதற்கு காரணம், இஸ்ரேல் இராணுவத்திற்கும் பலஸ்தீன போராளிகளிற்கு மிடையிலான இராணுபல இடைவெளி. பலஸ்தீன போராளிகளால் இஸ்ரேல் இராணுவத்தையே தாக்கி பழிதீர்க்கும் பலமும் திட்டமிடலும் வழிகாட்டலும் இருந்தால் இஸ்ரோல் மக்கள் மீது பழிதீர்க்க வெளிக்கிட மாட்டார்கள்.

புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தால் கட்டுண்டு இருப்பதால் தான் மக்கள் படை தாக்குதல் நடத்துகிறது.

மக்கள் படையின் தாக்குதல்களிற்கு பதிலடி என்றரீதியில் இராணுவம் மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் சுனாமி வந்த பின்னர் முதல் தாக்குதல் நடத்தியது யார்? ஜெனிவ-1 பின்னர் அமைதியை முதலில் குலைத்தது யார்?
இதை கவனத்தில் எடுக்காமல் கண்காணிப்புக் குழுத்தலைவர் கண்ணிவெடிகள் வைப்பது புலிகளாகத்தான் இருக்க வேண்டும் அவர்களால் தான் முடியும் அவர்களிற்கு தான் சிறீலங்கா இராணுவத்தை தாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று ஆராச்சியை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.

மக்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த தமக்கு அதிகாரம் இல்லை என்று கண்காணிப்புக் குழு கையை விரித்துவிட்டது திருகோணமலையில் கடந்த வாரம்.

சிறீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது வன்முறையை அதிகரித்துவருவதால் ஜெனிவா-1 முன்னர் போன்று சொல்கைம் (அல்லது உல்ப கென்றிக்சன்) வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவது சாத்தியமா?

நாளைய சந்திப்பு வித்தியாசமாக இருக்கப் போகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-19-2006, 09:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)