Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் புலிகளிற்குத் தடையாம்
#90
[size=18]கனடாவில் நடந்ததென்ன?
http://www.thinakkural.com/news/2006/4/16/...les_page577.htm

-பீஷ்மர் (தினக்குரல் 16/04/2006)
* சிந்திக்க வேண்டிய விடயங்கள் சில பற்றிய குறிப்புகள்

பெப்ரவரி 6 ஆம் திகதி பதவியேற்ற கனடாவின் புதிய கன்சர்வேட்டிவ் (பழைமை பேண் வாத) அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் நாள் திகதியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நிறுவனம் பயங்கரவாதம் காரணமாக கனடாவில் தடைசெய்யப்படுகின்றது என்ற அறிவிப்பை மக்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக் வெல்டே அறிவித்தார்.

இப்புதிய அரசாங்கம் நவ பழைமை பேண்வாதத்தை தனது அடிப்படைக் கருத்து நிலையாகக் கொண்டது. புதிய பிரதமரான ஸ்ரீபன் ஹாப்பர் இக் கட்சியை 2003 வாக்கிலேயே உருவாக்கினார். கனடாவில் நிலவிய அரசியல் தாராண்மை வாதத்தை எதிர்த்து ஓர் ஒட்டுமொத்தமான பார்வை இறுக்கத்தை மேற்கொள்ள விரும்பிய காப்பர், அதிகாரத்துக்கு வந்தால் விடுதலைப் புலிகளை தடை செய்வார் என்ற பேச்சு தேர்தல் காலத்திலேயே இருந்ததுதான். இப்பொழுது காரியம் நிறைவேறியுள்ளது.

இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய கட்ட நிலையினை எய்தியிருக்கும் இவ்வேளையில், குறிப்பாக, சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு வேண்டிய பதிற்குறிகளை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒர் உணர்வு இங்கு காணப்படும் நிலையில் கனடாவின் இந்த அறிவித்தல் தமிழர் நிலைப்பாட்டுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த கட்டத்திலேயே தான் இந்தப் பிரகடனம் பற்றி மிக மிக நிதானமாகவும் பார்க்க வேண்டிய அவசியமொன்றுள்ளது. நோய்க்கான காரணத்தை அறியாமல் வலியைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. இன்னுமொரு முக்கிய விடயம் இதனை தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் ஓர் அம்சமாக அதுவும் உரிமைப் போராட்டத்தின் இன்றைய கட்ட ஓர் அம்சமாகக் கொள்ள வேண்டும். இதனை விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மாத்திரம் பார்ப்பது தவறான கண்ணோட்டமாகும். இப் பிரச்சினையை இரண்டு நிலைப்படப் பார்ப்பது அவசியம்.

முதலாவது, இப்பிரச்சினை இந்த வடிவத்தை பெற்றதற்கான உடனடி காரணம் அல்லது காரணங்கள் இரண்டு அதற்கு பின்புலமாகவுள்ள ஆழ்நிலை கருத்துநிலை அம்சங்கள்.

கனேடிய அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இந்தப் பிரகடனத்தை அறிவித்தபோது அதற்கான பின்புலத்தையும் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜோ பெக்கர் என்ற பெண்மணி கியூமன் றைய்ற்ஸ் வோட்ச் (மனித உரிமை கண்காணிப்பு) என்ற நிறுவனத்தின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் முதன்மைப்படுத்தியுள்ள அம்சங்களை இவரும் நினைவு கூருகின்றார். அவற்றுள்ளே பிரதானமானது விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே வலுக் கட்டாயமாக பணம் சேகரிக்கிறார்கள் என்பதாகும்.

ஜோ பெக்கரினுடைய அந்த அறிக்கையின் அழுத்தம் முக்கியமானது. மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசும் நிறுவனங்கள் பெரும்பாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசத்து நிலைமைகள் பற்றியே பேச இந்த அறிக்கை புலம்பெயர் நிலையை கனடா பற்றிய சில உதாரணங்களுடன் பேசியுள்ளது. ஜோ பெக்கருடைய அறிக்கையை இலங்கை அரசாங்கம் எத்துணை சூட்சுமமாகப் பயன்படுத்தியது என்பது எமக்குத் தெரியும். எனவே, இது பற்றி முதலாவதாக எழும் சந்தேகம் ஜோ பெக்கருக்கு இத்தகையதொரு அறிக்கையை எழுதுவதற்கான பின்புலம் யாது என்பதாகும். இதுபற்றி பலரை கேட்டபோது ஜோ பெக்கர் அப் பிரதேசத்தில் முன்னர் மனிதவுரிமை சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார் என்றும் அந்தக் கூட்டத்தை சிலர் சென்று குழப்பியிருந்தனர் என்றும் கதையொன்று வருகின்றது. இக் கதையை விரிவாக ஆராய வேண்டும். கூட்டம் உண்மையில் குழப்பப்பெற்றதா? எவ்வாறு குழப்பப்பெற்றது? பெக்கரின் நிலைப்பாட்டுக்கு எதிரான விவாதங்களை வாத விவாதத்துக்கு உட்படுத்தாமலே குழப்பினார்களா? என்பன போன்ற வினாக்கள் முக்கியமாகின்றன. இவற்றைவிட ஜோ பெக்கருக்கும் மற்றைய இலங்கை சக்திகளுக்குமான உறவுகள் யாவை என்பதும் முக்கியம்.

விபரம் தெரிந்தவர்கள் இவற்றை வெளியே கூற வேண்டியது அவசியமாகிறது. அடுத்து இரண்டாவது விடயத்துக்கு வருவோம். அதில் மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. முதலாவது, ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இந்த பிரச்சினை ஏன் முக்கியமானது? நவ பழைமை பேண் வாதிகள் என்ற வகையில் இப் பிரச்சினை ஸ்ரீபன் ஹாப்பர் அரசாங்கத்துக்கு இது எவ்வாறு முக்கியமாகின்றது? என்பது ஒரு அச்சாணியான வினாவாகும். புஷ் அரசாங்கத்துடன் தொடர்புகள் உண்டா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, கனடாவுக்குள்ளே இந்த `பயங்கரவாதத்தை' எந்த எந்த அம்சங்களில் காணுகிறார்கள் என்பதையும் நோக்கல் வேண்டும். இவ்வாறு சொன்னவுடனேயே விடுதலைப் புலிகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக தங்களை அங்கு காட்டிக் கொள்பவர்களின் நடைமுறைகள், தமிழ் மக்களுடனான உறவு, அரசாங்கத்துடனான உறவு ஆகியன எந்நிலைப்பட்டவை என்பது பற்றிய விருப்பு வெறுப்பற்ற கணிப்பீடு ஒன்று அவசியமாகிறது. அவர்கள் தங்களை அரசியற் பிரசாரகர்களாக கருதுகிறார்களா அல்லது தங்களை நிர்வாக முகாமையாளர்களாக கருதுகிறார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில், கனேடிய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கனேடிய உளவு நிறுவனங்களும் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என்பது ஏப்ரல் 8 அறிக்கையில் நன்கு தெரிய வருகிறது. ஜோ பெக்கர் சுமத்திய குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வ கனேடிய உளவு நிறுவனமும் கூறியுள்ளதா என்பதை அறிதலும் முக்கியமான அம்சம்.

அடுத்தது இரண்டாவது கட்ட நிலைப்பட்ட இரண்டாவது வினாவாகும். இது ஒரு முக்கியமான விடயம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரசாரத்தையும் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் அங்கு உள்ளனரா அவர்கள் யாவர் என்பதாகும்.

ஒரு குறை கணிப்பின்படி ஏறத்தாழ மூன்றரை - நான்கு இலட்சம் இலங்கையர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் தான் சிங்கள மக்கள் ஆவர். மூன்று/ மூன்றரை இலட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் கனேடிய பிரஜைகளாகவுள்ளவர்கள் குறைந்தது இரண்டு/ இரண்டரை இலட்சமாகவாவது இருத்தல் வேண்டும். இந்த இரண்டரை இலட்சம் வாக்கின் அரசியல் பலம் யாது. இந்த இரண்டரை லட்சம் பேர் அங்குள்ள அரசியற் கட்சிகளிலே இடம்பெறுகின்றனரா இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இந்த கட்டத்தில் அரை இலட்சம் சிங்கள மக்களையும் இரண்டரை இலட்சம் தமிழ் மக்களையும் அரசியற் பிரக்ஞை நிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒரு தேவையுமுள்ளது. அப்படி பார்க்கும் போது இந்த 2 1/2 இலட்சம் தமிழர் பற்றிய சில அசௌகரியமான உண்மைகள் வெளிவருகின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்து கலை, இலக்கிய, அரசியல் சூழல்களுக்குள்ளேயே அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தை கனடாவில் எவ்வாறு நாற்றுநட செய்ய வேண்டும் என்பதில் அமிழ்ந்து கிடக்கின்றனரே தவிர, கனேடிய தமிழர்களாக அந்த இரண்டு அடையாளங்களையும் இணைத்துப் பேணுவதில் எவ்வித அக்கறையும் காட்டாதிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இவை யாவற்றுக்கும் மேலாக இன்னுமொரு பயங்கரமான உண்மையுள்ளது. கனடாவில் வசிக்கின்ற குறிப்பாக, ரொறன்ரோவில் வசிக்கின்ற இளம் தலைமுறையிலான தமிழர்கள் (இளைஞர்கள்) மிகவும் மோசமான முறையில் சட்டவிரோத காடைத்தனங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. இப்படி செய்வோர் தொகை மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால், இவை நிச்சயமாக நடைபெறுகின்றன. அண்மையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே சில மாணவர்கள் தமது சகாக்கள் இருவரை மோட்டார் வண்டியால் மோதிக் கொன்றதாக சர்வதேச ஊடகங்களிலே பேசப்பெற்றன. சிங்கள ஊடகங்களிலேயும் அது பெரிதுபடுத்தப்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் பார்த்த கதை தான். பெற்றோர்கள் நாவலர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல பிள்ளைகள் `சைக்கிள் பெல்ட்'க்களுடன் உலாவுவது சகஜமாகிவிட்டது. இந்த விடயத்தில் வியட்நாமிய அகதிகளும் இலங்கை தமிழ் அகதிகளும் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர் என்று உள்ளூர் கனேடிய பிரமுகர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயங்கள் 3 ஆவது நிலைப்பட்ட ஒரு வினாவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. இது மிக மிக முக்கியமானது. கனேடிய உயர் சமூக மட்டத்திலும் ஊடக நிலைகளிலும் இலங்கை தமிழர் நிலைப்பாடுகளை எடுத்துப் பேசுவதற்கான கருத்தாதரவு நாடும் கூடங்கள் (ஃணிஞஞதூ) உள்ளனவா? இப்படியான கருத்தாதரவு நாடும் குழுமங்கள் இருக்க வேண்டியவை அவசியமாயிற்றே. இந்த நிலையிலே தான் இரண்டு உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கை தமிழர்களின் நிலைமைகள், போராட்டங்கள், நிலைப்பாடுகள் பற்றி உயர் சமூக மட்டங்களிலே பேசக் கூடியவையான குழுமங்கள் அவசியம் இப்படியான குழுமங்களில் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற தொழின்மை நிலையினர் இடம்பெறுவது வழக்கம். மற்றைய நாடுகளிலேயே இப்படியான தமிழ்க் குழுமங்கள் குறைவு. கனடாவில் இல்லையென்றே கூறலாம். இதற்கான காரணம் பற்றி அறிய முனைந்த போது மேலே சொன்ன உத்தியோகபூர்வ முகாமையாளர்களின் எஜமான் போக்குகள் காரணமாக ஆர்வமுள்ள தொழின்மையர் கூட தங்களை இனங்காட்டிக் கொள்வதில்லையென பேசப்படுகின்றது. சிங்கள கருத்தாதரவு நாடும் கூடங்களை பொறுத்த வரையில் நிலைமை முற்றுமுழுதாக வேறுபாடானது. ஒட்டாவாவில் இருக்கின்ற ஒரு `லொபி' கனேடிய அறிஞர்கள் தொழின்மையர் போன்றோருடன் அடிக்கடி கருத்தாடல் நடத்துவதாகவும் அந்த கருத்தாடல்களில் தமிழர் நிலைப்பாடுகளின் நியாயமின்மைகள் பற்றி பேசுவதாகவும் கூறப்படுகின்றது. இப்படியான ஒரு குழுமம் கனேடிய தமிழர்களை பொறுத்தவரையில் இயங்குவதில்லை என்றே கூறுகிறார்கள். இயங்குவதில்லை என்றால் அந்தளவில் விட்டுவிடலாம். அந்தளவில் இயங்குவதை செல்வாக்குள்ள சிலர் விரும்பவில்லையென்று கூறுகிறார்கள். இவற்றின் உண்மை பொய் பற்றி ஆராய்வது எமது கடமையாக இருக்க வேண்டிய அதேவேளையில் அங்கு பொறுப்பு நிலையிலுள்ளவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் ஓர் அடிப்படையான அரசியல் உண்மையை அழுத்தி கூறுவது அவசியமாகிறது.

விடுதலைப் புலிகளோடு இயக்க நிலையிலோ தனிப்பட்ட நிலையிலோ கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் உள்ளவர்களை தவிர, மற்றைய இலங்கை தமிழர்கள் எல்லோருமே இன்றைய நிலையில் இலங்கை தமிழர் போராட்டத்தினை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்ற கொள்கையினை உடையவர்களே. விடுதலைப் புலிகளோடு சில விடயங்களிலே கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் இலங்கையின் இன்றைய நிலையில் அந்த தலைமையின் அவசியத்தை மறுக்கும் சாதாரண, புலம்பெயர் நிலை தொழின்மையால் (Pரொfஎச்சிஒனல்ச்) இல்லையென்றே கூறலாம். இந்த நிலை மேலே கூறிய `லொபி' உருவாக்கத்துக்கு மிக முக்கியமானதாகும்.

இந்த வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் முக்கியமாகும். அதேவேளையில், அடுத்த வினா அச்சாணியானதாகும். கனடாவின் நவ, பழைமை பேண்வாத சிறுபான்மை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கனேடிய பிரஜைகளான தமிழர்கள் எவ்வித பதிற்குறிகளை காட்டப் போகின்றனர் என்பது மிகமிக முக்கியமான வினாவாகும். பிரஜாவுரிமை இல்லாதவர்களின் நிலைமை வேறு. பிரஜாவுரிமை உள்ள தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இதற்கான அரசியல் ஒருங்கு சேர்ப்பு எவ்வாறு செய்யப்படப் போகின்றது யார் செய்யப் போகிறார்கள் இதுவும் பிரதானமான விடயங்களாகும். இறுதியாக, சர்வதேச நல்லெண்ண தேவை காரணமாக புதிய நடைமுறைகளை கையாள வேண்டிய இந்த வேளையில் இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பது ஒரு வகையில் நல்லதென்றே கூற வேண்டும். நெல் மணிகளை விட பதர்கள் இடம்பெறும் நிலையை ஊக்குவித்தல் கூடாது. இலங்கை தமிழர் பற்றிய கருத்தாதரவு நாடும் குழுமங்கள் சிறந்த முறையில் தொழிற்பட வேண்டிய காலமிது. நம்மை நோக்கி இன்று நோக்கியுள்ள அரசியற் சவால்களின் சிக்கல் நிறைந்த பன்முகப் பார்வையை கனடா அரசாங்கத்திலும் பார்க்க கனேடிய தமிழர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

பொன் சுத்தமாக வருவதற்கு புடமிடப்படுவது அவசியம். புடமிடுதல் என்பது நெருப்புக்குள் இருந்து வெளிவருவதாகும். நெருப்புக்கு பயந்து பொன்னை கரும் பொன்னாக வைத்திருப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 04-08-2006, 06:40 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-08-2006, 07:26 PM
[No subject] - by Thala - 04-08-2006, 08:09 PM
[No subject] - by Thala - 04-08-2006, 08:22 PM
[No subject] - by kurukaalapoovan - 04-08-2006, 08:31 PM
[No subject] - by Vasampu - 04-08-2006, 08:48 PM
[No subject] - by sathiri - 04-08-2006, 09:21 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-08-2006, 11:06 PM
[No subject] - by vengaayam - 04-08-2006, 11:12 PM
[No subject] - by வினித் - 04-08-2006, 11:20 PM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 02:55 AM
[No subject] - by மின்னல் - 04-09-2006, 03:46 AM
[No subject] - by சுடர் - 04-09-2006, 03:48 AM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 03:54 AM
[No subject] - by மின்னல் - 04-09-2006, 04:08 AM
[No subject] - by vengaayam - 04-09-2006, 04:47 AM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 04:51 AM
[No subject] - by vengaayam - 04-09-2006, 05:03 AM
[No subject] - by Aaruran - 04-09-2006, 05:06 AM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 05:09 AM
[No subject] - by vengaayam - 04-09-2006, 05:16 AM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 05:24 AM
[No subject] - by Thala - 04-09-2006, 06:43 AM
[No subject] - by Thala - 04-09-2006, 06:53 AM
[No subject] - by Vasampu - 04-09-2006, 06:56 AM
[No subject] - by Thala - 04-09-2006, 07:14 AM
[No subject] - by sathiri - 04-09-2006, 07:43 AM
[No subject] - by Vasampu - 04-09-2006, 07:50 AM
[No subject] - by Thala - 04-09-2006, 08:00 AM
[No subject] - by Vaanampaadi - 04-09-2006, 08:39 AM
[No subject] - by அருவி - 04-09-2006, 09:12 AM
[No subject] - by Vasampu - 04-09-2006, 11:07 AM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 12:58 PM
[No subject] - by Vasampu - 04-09-2006, 01:13 PM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 01:17 PM
[No subject] - by nirmalan - 04-09-2006, 01:18 PM
[No subject] - by தூயவன் - 04-09-2006, 01:21 PM
[No subject] - by nirmalan - 04-09-2006, 01:24 PM
[No subject] - by Vasampu - 04-09-2006, 01:27 PM
[No subject] - by kirubans - 04-09-2006, 03:05 PM
[No subject] - by nirmalan - 04-09-2006, 03:21 PM
[No subject] - by Aaruran - 04-09-2006, 04:38 PM
[No subject] - by I.V.Sasi - 04-09-2006, 10:52 PM
[No subject] - by நேசன் - 04-09-2006, 11:04 PM
[No subject] - by Vaanampaadi - 04-10-2006, 03:36 AM
[No subject] - by அருவி - 04-10-2006, 03:47 AM
[No subject] - by தூயவன் - 04-10-2006, 03:58 AM
[No subject] - by SUNDHAL - 04-10-2006, 05:20 AM
[No subject] - by nirmalan - 04-10-2006, 07:01 AM
[No subject] - by மகேசன் - 04-10-2006, 08:05 AM
[No subject] - by நேசன் - 04-10-2006, 08:13 AM
[No subject] - by நேசன் - 04-10-2006, 08:36 AM
[No subject] - by SUNDHAL - 04-10-2006, 08:44 AM
[No subject] - by narathar - 04-10-2006, 10:25 AM
[No subject] - by Thala - 04-10-2006, 10:52 AM
[No subject] - by Vaanampaadi - 04-10-2006, 11:10 AM
[No subject] - by Thala - 04-10-2006, 11:18 AM
[No subject] - by Thala - 04-10-2006, 11:31 AM
[No subject] - by kurukaalapoovan - 04-10-2006, 12:16 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 12:25 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 01:59 PM
[No subject] - by Vaanampaadi - 04-10-2006, 04:46 PM
[No subject] - by Mathuran - 04-10-2006, 06:12 PM
[No subject] - by kavithaa - 04-10-2006, 06:45 PM
[No subject] - by kavithaa - 04-10-2006, 06:53 PM
[No subject] - by Birundan - 04-10-2006, 07:03 PM
[No subject] - by நேசன் - 04-10-2006, 10:07 PM
[No subject] - by Sujeenthan - 04-10-2006, 10:32 PM
[No subject] - by நேசன் - 04-10-2006, 11:02 PM
[No subject] - by கந்தப்பு - 04-11-2006, 01:51 AM
[No subject] - by கந்தப்பு - 04-11-2006, 01:55 AM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 03:22 AM
[No subject] - by அருவி - 04-11-2006, 03:53 AM
[No subject] - by nirmalan - 04-11-2006, 06:48 AM
[No subject] - by Vaanampaadi - 04-11-2006, 08:08 AM
[No subject] - by karu - 04-11-2006, 09:11 AM
[No subject] - by நேசன் - 04-11-2006, 09:53 AM
[No subject] - by karu - 04-11-2006, 10:07 AM
[No subject] - by narathar - 04-11-2006, 10:14 AM
[No subject] - by நேசன் - 04-11-2006, 10:20 AM
[No subject] - by puthiravan - 04-12-2006, 02:15 AM
[No subject] - by கந்தப்பு - 04-12-2006, 03:12 AM
[No subject] - by கந்தப்பு - 04-13-2006, 06:48 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 10:07 AM
[No subject] - by narathar - 04-16-2006, 08:55 AM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 09:34 AM
[No subject] - by narathar - 04-16-2006, 10:27 AM
[No subject] - by KULAKADDAN - 04-17-2006, 02:36 PM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 04:59 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 05:02 AM
[No subject] - by நேசன் - 04-19-2006, 07:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)