Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி மரணம்
#2
<b>டி.வி.நடிகை வைஷ்ணவி தற்கொலை
வீட்டில் தூக்கில் தொங்கினார்</b>
<img src='http://www.dailythanthi.com/images/news/20060418/vaish2.jpg' border='0' alt='user posted image'>

சென்னை, ஏப்.18-

டி.வி.நடிகை வைஷ்ணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

`மனைவி' தொடர் நடிகை

சன் டி.வி.யில் வெளியான மனைவி தொடரில் நீலவேணி கதாபாத்திரத்தில் சுட்டிப்பெண்ணாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷ்ணவி(வயது 22). தற்போது மலர்கள், முகூர்த்தம் ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

விசில் என்ற படத்தில் கதாநாயகி செரீன் தோழியாக நடித்துள்ளார். கொண்டாட்டம் காமெடி நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வந்தார். இந்த ஆண்டு பி.ஏ. மூன்றாம் ஆண்டு பட்ட படிப்பை முடித்துள்ள வைஷ்ணவி சென்னை அண்ணா நகர் ஏ.எல். பிளாக்கில் வசித்தார்.

இவருடைய தந்தை பெயர் தணிகைவேலன். சென்னை மைலாப்பூரில் உள்ள அலுமினிய கம்பெனி ஒன்றில் துணை மானேஜராக பணி புரிந்து வருகிறார். தாயார் பெயர் ரஞ்சனி. இவருக்கு சுஹாசினி(19) என்ற ஒரே தங்கை உள்ளார்.

தாத்தா பிறந்த நாள்

நடிகை வைஷ்ணவியின் தாய் வழி தாத்தா கிருஷ்ண மூர்த்திக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்வதற்காக வைஷ்ணவியின் தாயாரும், தங்கையும் சென்று விட்டனர். தந்தை அலுவலகம் போய் விட்டார்.

வீட்டில் வைஷ்ணவி மட்டும் இருந்தார். கார் டிரைவர் முத்து கார் செட்டில் இருந்தார். பிற்பகல் 2 1/2 மணி அளவில் வைஷ்ணவி அவரது தாத்தாவுக்கு டெலிபோன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது எனக்கு பசிக்கிறது. பிறந்த நாள் விருந்து சாப்பாட்டை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று கூறினார்.

இதையொட்டி சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தங்கை சுஹாசினி வேகமாக வீட்டுக்கு வந்தார். அப்போது மாலை 3 மணி இருக்கும். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு வெளிப் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கார் செட்டில் இருந்த டிரைவரிடம் அக்கா வைஷ்ணவி எங்கே என்று சுஹாசினி கேட்டார். வீட்டில் தான் இருந்தார் என்று டிரைவர் தெரிவித்தார்.

தூக்கில் தொங்கினார்

ஆனால் வீடு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உடனே பின் பக்கம் வந்து பார்த்தார். பின் பக்க கதவும் பூட்டப்பட்டிருந்தது. என்னவோ நடந்து விட்டது என்று பதட்டமடைந்த சுஹாசினி வீட்டின் முன்பக்க அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கே கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

நடிகை வைஷ்ணவி மின் விசிறியின் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து ஓ வென்று அலறி துடித்த சுஹாசினி தனது தந்தை மற்றும் தாயாருக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்.

இதைக் கேட்டு வைஷ்ணவியின் தாயாரும், தந்தையும் கதறி அழுதபடி ஓடி வந்தனர். பூட்டி கிடந்த கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர். தூக்கில் தொங்கிய வைஷ்ணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வைஷ்ணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதன் பிறகு வைஷ்ணவியின் சோகமான முடிவு பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். வைஷ்ணவியின் பிணம் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரணம் தெரியவில்லை?

வைஷ்ணவி திடீரென்று இந்த தற்கொலை முடிவுக்கு வந்தது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. தற்கொலைக்கான காரணம் பற்றி வைஷ்ணவி கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவரது பெற்றோர்களும் வைஷ்ணவியின் சோக முடிவுக்கு காரணம் தெரியாமல் தவிப்பதாக கூறினார்கள்.

அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது பற்றி விசாரித்து வருவதாக போலீசார் கூறினார்கள்.

பிறந்த நாள் பரிசு

நடிகை வைஷ்ணவி சமீபத்தில் தான் பிறந்த நாள் கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக அவரது தோழிகள் தங்கள் கையெழுத்தை போட்டு சுடிதார் மற்றும் துப்பட்டாவை வழங்கினார்கள். அந்த துப்பட்டாவில் தொங்கி வைஷ்ணவி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

வைஷ்ணவியை டி.வி தொடரில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

`வைஷ்ணவி ஒரு சிறந்த நடிகை. துடுக்கான பெண். அவர் இந்த சோக முடிவை ஏன் எடுத்தார் என்று எனக்கும் புரியவில்லை. சமீபத்தில் தான் நான் இப்போது எடுத்து வரும் மனைவி தொடரை நன்றாக இருப்பதாக பாராட்டி அதில் எனக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வைஷ்ணவி என்னிடம் கேட்டார். நானும் அவருக்கு ஒரு வேடம் கொடுக்க முடிவெடுத்திருந்தேன். அதற்குள் அவரது வாழ்க்கையையே முடித்து கொண்டு விட்டார்' என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் தெரிவித்தார்.

<img src='http://www.dailythanthi.com/images/home/logo_home.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:26 PM
[No subject] - by தாரணி - 04-18-2006, 11:59 PM
[No subject] - by தூயா - 04-19-2006, 12:20 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 12:25 AM
[No subject] - by வர்ணன் - 04-19-2006, 01:36 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 01:57 AM
[No subject] - by தூயவன் - 04-19-2006, 03:53 AM
[No subject] - by KING ELLALAN - 04-19-2006, 07:02 AM
[No subject] - by Sivakolunthu - 04-19-2006, 08:50 AM
[No subject] - by கறுப்பி - 04-19-2006, 09:16 AM
[No subject] - by Mathuran - 04-19-2006, 10:07 AM
[No subject] - by aathipan - 04-19-2006, 12:07 PM
[No subject] - by KING ELLALAN - 04-20-2006, 02:23 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 03:01 AM
[No subject] - by SUNDHAL - 04-20-2006, 03:32 AM
[No subject] - by KING ELLALAN - 04-20-2006, 04:12 AM
[No subject] - by mathuka - 04-20-2006, 05:00 AM
[No subject] - by Sivakolunthu - 04-20-2006, 07:11 AM
[No subject] - by Sivakolunthu - 04-20-2006, 07:13 AM
[No subject] - by Mathuran - 04-20-2006, 08:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)