![]() |
|
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி மரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சின்னத்திரை நடிகை வைஷ்ணவி மரணம் (/showthread.php?tid=153) Pages:
1
2
|
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி மரணம் - alika - 04-18-2006 சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி. முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி! [/img] - AJeevan - 04-18-2006 <b>டி.வி.நடிகை வைஷ்ணவி தற்கொலை வீட்டில் தூக்கில் தொங்கினார்</b> <img src='http://www.dailythanthi.com/images/news/20060418/vaish2.jpg' border='0' alt='user posted image'> சென்னை, ஏப்.18- டி.வி.நடிகை வைஷ்ணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். `மனைவி' தொடர் நடிகை சன் டி.வி.யில் வெளியான மனைவி தொடரில் நீலவேணி கதாபாத்திரத்தில் சுட்டிப்பெண்ணாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷ்ணவி(வயது 22). தற்போது மலர்கள், முகூர்த்தம் ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். விசில் என்ற படத்தில் கதாநாயகி செரீன் தோழியாக நடித்துள்ளார். கொண்டாட்டம் காமெடி நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வந்தார். இந்த ஆண்டு பி.ஏ. மூன்றாம் ஆண்டு பட்ட படிப்பை முடித்துள்ள வைஷ்ணவி சென்னை அண்ணா நகர் ஏ.எல். பிளாக்கில் வசித்தார். இவருடைய தந்தை பெயர் தணிகைவேலன். சென்னை மைலாப்பூரில் உள்ள அலுமினிய கம்பெனி ஒன்றில் துணை மானேஜராக பணி புரிந்து வருகிறார். தாயார் பெயர் ரஞ்சனி. இவருக்கு சுஹாசினி(19) என்ற ஒரே தங்கை உள்ளார். தாத்தா பிறந்த நாள் நடிகை வைஷ்ணவியின் தாய் வழி தாத்தா கிருஷ்ண மூர்த்திக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்வதற்காக வைஷ்ணவியின் தாயாரும், தங்கையும் சென்று விட்டனர். தந்தை அலுவலகம் போய் விட்டார். வீட்டில் வைஷ்ணவி மட்டும் இருந்தார். கார் டிரைவர் முத்து கார் செட்டில் இருந்தார். பிற்பகல் 2 1/2 மணி அளவில் வைஷ்ணவி அவரது தாத்தாவுக்கு டெலிபோன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது எனக்கு பசிக்கிறது. பிறந்த நாள் விருந்து சாப்பாட்டை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று கூறினார். இதையொட்டி சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தங்கை சுஹாசினி வேகமாக வீட்டுக்கு வந்தார். அப்போது மாலை 3 மணி இருக்கும். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு வெளிப் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கார் செட்டில் இருந்த டிரைவரிடம் அக்கா வைஷ்ணவி எங்கே என்று சுஹாசினி கேட்டார். வீட்டில் தான் இருந்தார் என்று டிரைவர் தெரிவித்தார். தூக்கில் தொங்கினார் ஆனால் வீடு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உடனே பின் பக்கம் வந்து பார்த்தார். பின் பக்க கதவும் பூட்டப்பட்டிருந்தது. என்னவோ நடந்து விட்டது என்று பதட்டமடைந்த சுஹாசினி வீட்டின் முன்பக்க அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கே கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. நடிகை வைஷ்ணவி மின் விசிறியின் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து ஓ வென்று அலறி துடித்த சுஹாசினி தனது தந்தை மற்றும் தாயாருக்கு இது பற்றி தகவல் கொடுத்தார். இதைக் கேட்டு வைஷ்ணவியின் தாயாரும், தந்தையும் கதறி அழுதபடி ஓடி வந்தனர். பூட்டி கிடந்த கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர். தூக்கில் தொங்கிய வைஷ்ணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வைஷ்ணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பிறகு வைஷ்ணவியின் சோகமான முடிவு பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். வைஷ்ணவியின் பிணம் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரணம் தெரியவில்லை? வைஷ்ணவி திடீரென்று இந்த தற்கொலை முடிவுக்கு வந்தது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. தற்கொலைக்கான காரணம் பற்றி வைஷ்ணவி கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவரது பெற்றோர்களும் வைஷ்ணவியின் சோக முடிவுக்கு காரணம் தெரியாமல் தவிப்பதாக கூறினார்கள். அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது பற்றி விசாரித்து வருவதாக போலீசார் கூறினார்கள். பிறந்த நாள் பரிசு நடிகை வைஷ்ணவி சமீபத்தில் தான் பிறந்த நாள் கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக அவரது தோழிகள் தங்கள் கையெழுத்தை போட்டு சுடிதார் மற்றும் துப்பட்டாவை வழங்கினார்கள். அந்த துப்பட்டாவில் தொங்கி வைஷ்ணவி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். வைஷ்ணவியை டி.வி தொடரில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். `வைஷ்ணவி ஒரு சிறந்த நடிகை. துடுக்கான பெண். அவர் இந்த சோக முடிவை ஏன் எடுத்தார் என்று எனக்கும் புரியவில்லை. சமீபத்தில் தான் நான் இப்போது எடுத்து வரும் மனைவி தொடரை நன்றாக இருப்பதாக பாராட்டி அதில் எனக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வைஷ்ணவி என்னிடம் கேட்டார். நானும் அவருக்கு ஒரு வேடம் கொடுக்க முடிவெடுத்திருந்தேன். அதற்குள் அவரது வாழ்க்கையையே முடித்து கொண்டு விட்டார்' என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் தெரிவித்தார். <img src='http://www.dailythanthi.com/images/home/logo_home.gif' border='0' alt='user posted image'> - தாரணி - 04-18-2006 <img src='http://img481.imageshack.us/img481/4135/vaish2ry.jpg' border='0' alt='user posted image'> இவர்கள் இருவரும் மனைவி, மலர்கள் போன்ற தொடர் நாடகத்தில் நடித்துள்ளார்கள். மேலும் அறிய தினத்தந்தி இணையத்தளத்தில் உள்ளது. http://www.dailythanthi.com/Cathome.asp?NewsCategoryID=3 - தூயா - 04-19-2006 ஏன் இப்படி?!!! சீரியலில் போராடும் பெண்கள், சொந்த வாழ்க்கையில்?? - கந்தப்பு - 04-19-2006 ஏன் இறந்தார் என்பதற்கு தினத்தந்தியில் வந்த செய்தி http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=4/19/2006 http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=4/19/2006 - வர்ணன் - 04-19-2006 தூயா Wrote:ஏன் இப்படி?!!! சீரியலில் போராடும் பெண்கள், சொந்த வாழ்க்கையில்?? சீரியலில் எங்க போராடுறாங்க? கொடுத்த காசுக்கு நடிச்சிட்டு போறாங்க! நடிப்புக்கு பின்னாலயும் - நிஜவாழ்க்கை-என்ற- ஒன்னு இருக்கு என்று வைஸ்ணவி மரணம் சொல்லுதோ? சீரியலை பார்த்து - சமைக்கிறத விட்டுபுட்டு - அழுகிற எங்க அம்மா மாருக்குத்தான் வெளிச்சம்! :wink: ஒரு கலைஞராக எல்லாரயும் மகிழ்வித்த - வைஸ்ணவிக்கு - அஞ்சலிகள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- கந்தப்பு - 04-19-2006 எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவரின் மனைவி சிரியல் மோகம் கொண்டு சமைப்பதில்லை. நண்பர் வேலை முடிந்து வரும்போது தான் இவர் சமைக்க ஆரம்பிப்பார். நண்பர் ஒருமுறை, வீட்டில் உள்ள புதிய சிரியல் கசெட்டுகளினை ஓளித்துவைத்து விட்டு வேலைக்குச் சென்றார். மனைவி நாடகம் பாக்கிற ஆசையில் கசட்டுகளினைத் தேடித் தேடிக் காணாமல், இனி சமைக்கப் சோற்றுச்சட்டியினை(rice cooker) எடுக்க அதற்குள்ளே கசட்டுக்கள் இருந்தது. - தூயவன் - 04-19-2006 ரெம்ப முக்கியம் :evil: :evil: :evil: - KING ELLALAN - 04-19-2006 தனிப்பட்ட செய்திகள் பல இருந்தாலும் இந்த இளம் வயதில் திறமையான ஒரு நடிகை அற்புதமான குரல் வளம் கொண்டவர். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோமாக <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
- Sivakolunthu - 04-19-2006 தன்ர சொந்தச் சகோதரங்கள் அங்க செத்துக்கொண்டிருக்குதுகள் அதுகளப் பாக்கிறத விட்டிட்டு ஒரு நடிகை செத்துப்போனது ஏதோ தங்க வீட்டில நடந்த செத்தவீடுமாதிரி இருந்து ஒப்பாரி வைக்கிறாங்க. - கறுப்பி - 04-19-2006 ஒரு கலைஞராக எல்லாரயும் மகிழ்வித்த - வைஸ்ணவிக்கு - அஞ்சலிகள்! - Mathuran - 04-19-2006 Sivakolunthu Wrote:தன்ர சொந்தச் சகோதரங்கள் அங்க செத்துக்கொண்டிருக்குதுகள் அதுகளப் பாக்கிறத விட்டிட்டு ஒரு நடிகை செத்துப்போனது ஏதோ தங்க வீட்டில நடந்த செத்தவீடுமாதிரி இருந்து ஒப்பாரி வைக்கிறாங்க. - aathipan - 04-19-2006 வைஸ்ணவியின் ஆத்மா சாந்தியடையட்டும். - KING ELLALAN - 04-20-2006 தன்ர சொந்தச் சகோதரங்கள் அங்க செத்துக்கொண்டிருக்குதுகள் அதுகளப் பாக்கிறத விட்டிட்டு ஒரு நடிகை செத்துப்போனது ஏதோ தங்க வீட்டில நடந்த செத்தவீடுமாதிரி இருந்து ஒப்பாரி வைக்கிறாங்க. ஜயா சிவக்கொழுந்தாரே மற்றவனையும் உம் வீட்டாரை போல மிதியாமல் மதிக்கவும் நன்றிகள் - கந்தப்பு - 04-20-2006 சிவக்கொழுந்து சொல்வதில் என்னபிழை?. வாதரவத்தையில் இறந்த 5 பேருக்கு அஞ்சலி செலுத்தாமல் நடிகைக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி?. நடிகைக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என்று யார் சொன்னது. செலுத்துங்கள் அத்துடன் எமது தாயகத்தில் இறந்தவர்களினையும் நினையுங்கள். வாதரவத்தையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே பார்க்கவும். http://www.yarl.com/forum/viewtopic.php?t=10518 நீங்கள் என்னைப்பற்றி நினைக்கலாம். இவர் அஞ்சலி செலுத்தாமல் கதைக்க வந்திட்டார் என்று. நானும் தூயவனும் யாழில் செய்தி வந்தவுடன் அஞ்சலி செலுத்திவிட்டோம். பார்க்க http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#182132 - SUNDHAL - 04-20-2006 அவனுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தையும் இருக்காம் :evil: :evil: :evil: மாமியார் வீட்டுக்கு ஆள கூட்டி கொண்டு போயாச்சு.. :twisted: - KING ELLALAN - 04-20-2006 அவரோட கந்தப்பண்ணையுமே சேர்ந்திட்டியள் சரியாப்போய்ச்சண்டானாம்.....இனி என்னத்தை எழுதனாலும் வில்லங்கம் தான்.....பொதுவ்hக அரசியலில் யான் கற்றுகுட்டி என்பதால் தான் அவை சம்பந்தமாக எழுதுவதில்;லை....சரியா....மற்றப்படி எந்த ஜீவனாக இருந்தாலும் இறந்தாலோ அல்லது இறக்கவைக்கப்பட்டாலோ எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றுமே உண்டு.நன்றி.வணக்கம்????? - mathuka - 04-20-2006 <!--QuoteBegin-Sivakolunthu+-->QUOTE(Sivakolunthu)<!--QuoteEBegin-->தன்ர சொந்தச் சகோதரங்கள் அங்க செத்துக்கொண்டிருக்குதுகள் அதுகளப் பாக்கிறத விட்டிட்டு ஒரு நடிகை செத்துப்போனது ஏதோ தங்க வீட்டில நடந்த செத்தவீடுமாதிரி இருந்து ஒப்பாரி வைக்கிறாங்க.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆ.......அப்பிடிங்களா? ஒருவர் இறந்து விட்டால் அதை கூறுவது தப்பா? அப்படி பார்த்தால் இலங்கையில் மக்கள் இறப்பதை வெளிநாட்டவர் கண்டுகொள்ளவே கூடாது போலிருக்கிறது. என்ன ஒரு பண்பு. அஹா. ஓகோ - Sivakolunthu - 04-20-2006 ஓ உங்க சொந்தங்கள் சாகிறத்துக்கே கண்ணீரக்காணம் அதுக்குள்ள அடுத்தவன் கோடிக்க போய் நிண்டு கண்ணீர் விடுறீங்களாக்கும். - Sivakolunthu - 04-20-2006 ஓர் உயிர் பிரிந்ததற்காக துயர் கொள்வதில் தப்பில்லை. அது ஒரு நடிகை எண்டதால அத இந்தக் களத்திலயும் கொண்டுவந்து போட்டு ஒப்பாரி வைக்கிறீங்க பாருங்க அதத்தான் சொல்லுறன். |