Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாக குடியேறுதல்
#17
ம் இங்கிலாந்தில் ஒப்படை செய்து பட்டப்படிப்பு படித்து, பின்னர் ஐரோப்பாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் அதே துறையில் வேலை செய்து நல்ல பதவியில் இருக்கும் யாழ்க் கள உறுப்பினர் ஒருவரைத்தெரியும் சொல்லட்டுமா குருக்ஸ். :wink:

நான் சொன்னது எல்லாரும் லண்டனுக்க நுழையாமல் நீங்கள் வருவது உங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக என்றால், நல்ல பாடசாலைகளில் லண்டனுக்கு வெளியால சேருங்கோ.லண்டனுக்கு வெளியால வீடும் மலிவு, லண்டனில 200 ஆயிரம் பவுண்சுக்கு பெட்டி வீட்டில இருகிறதில,வசதியான வீட்டில , நல்ல பாடசாலையில பிள்ளை படிக்க இருக்கலாம்.பிரித்தானியாவில எந்தப் பாடசாலயில பிள்ளை படிச்சது என்பது எந்த பல்கலைக்கழகத்திற்கு , எந்தப் பட்டப் படிப்புக்கு பிள்ளை போகுது என்பதைத் தீர்மானிக்குது .குருக்ஸ் சொன்ன மாதிரி கனக்க பல்கலைக் கழகங்கள் இருக்குத் தான்.ஆனா நல்ல பல்கலைக் கழகங்களுக்கு உள்ளிட நல்ல பெறுபேறும், நல்ல பாடசாலையும் அவசியம்.

மேலும் படித்து முடித்தபின் வேலை எடுக்கும் போதும் எந்த பல்கலை கழகத்தில் படித்தார் என்பதுவும் எந்தத் துறையில் படித்தார் என்பதுவும், ஒருவர் பெறப் போகும் வேலையைத் தீர்மானிக்கிறது.அத்தோடு ஆங்கிலம் சர்வதேச வியாபார மொழியாக இருப்பதால் சர்வதேச ரீதியாக வேலை தேடுபவர்கள் அல்லது தமிழ் ஈழம்,இந்தியா,இலங்கை முதலிய நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க இருப்பவர்களுக்கு இது உதவலாம்.இங்கே வரும் அனேக இந்திய மற்றும் சீன மாணவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்குச் சென்று வேலை எடுக்க இது உறுதுணையாக இருக்கிறது.

மற்றபடி வருங்காலத்தில் மேற்குலகில் அவுட் சோசிங் போன்ற நடைமுறைகளால் பல வேலைகள் இல்லாமல் போகலாம்,ஆனால் நாடு விட்டு நாடு போக விரும்புபவர்களுக்கு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்.ஐரோப்பாவில் இருந்து பாடாசலையுடன் கல்வியை நிறுத்தி விட்டு, துறைசாராத வேலைகளை குறைந்த சம்பளத்தில் செய்வதை விட ,இங்கிலாந்து வந்து பட்டப்படிப்பை மேற்கொள்வது , சர்வதேச ரீதியாக வேலை பெறக் கூடிய சாத்தியப் பாட்டை அதிகரிக்கிறது அல்லவா?இங்கே படித்த பலர் பெற்றோல் நிலையங்களில் வேலை செய்வதற்குக் காரணம் அவர்கள் லண்டனை விட்டு வெளியால் சென்று வேலை தேடாததே என்று நினைக்கிறேன்.இதைப் பற்றி குருக்ஸ் போன்றவர்களுக்குத் தான் அதிகம் தெரியும் என்று நினைகிறேன்.ஆகவே இதைப் பற்றி தெரிந்தவர்கள் மேலும் எழுதவும்.

மேலும் இங்கிலாந்தில் வைத்தியர்களுக்குத் தட்டுப் பாடு நிலவுகிறது.இன்றைய பிபிசி தகவலின் படி ஒரு குடும்ப வைத்தியர் 250.000 பவ்ன்ஸ் வரை ஒரு வருடத்தில் உழைக்கக் கூடிய சாதியப் பாடு இருப்பதாக கூறுகிறது.அதோடு இனி வைத்தியர்கள் இங்கே வேர்க் பெர்மிடில் தான் இனி உள்வர அனுமதிக்கப் படப் போகிறார்கள்.இது உள்ளூர் மற்றும் ஐரோப்பிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பைக் கூட்ட உதவுவதற்காக கொண்டுவரப் பட்டுள்ள நடைமுறை.

எது எப்படியோ நமது தமிழ்ப் பிள்ளைகள் எங்கிருந்தாலும் நல்ல நிலைக்கு வர வேணும் என்ற எண்ணோத்தோடு தான் இதனை இங்கே எழுதுகிறேன் தத் ,தமக்கு எவ்வாறான சந்தர்ப்பங்கள் உள்ளன,தங்களது பிள்ளைகளின் விருப்பம் என்ன,அவர்களுக்கு என்ன என்ன திறமைகள் உள்ளன, அவர்களுக்கு என்ன துறையில் நாட்டம் இருக்கிறது என்பவற்றை ஒவ்வொரு பெற்றோரும் சீர்தூக்கிப் பார்த்து தத் தமக்கு அனுகூலமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
நீண்டகாலத் திட்டமிடல் என்பது இங்கே மிக அவசியம்.பிள்ளைகள் வந்த பின் குறுக்கால போவானும் இதனயே செய்வார் என்று நினக்கிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-17-2006, 10:23 PM
[No subject] - by mathuka - 04-17-2006, 10:35 PM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:03 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 09:18 AM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:48 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:40 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:52 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:13 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:24 AM
[No subject] - by sinnakuddy - 04-18-2006, 11:40 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 02:43 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 04:20 PM
[No subject] - by kurukaalapoovan - 04-18-2006, 04:23 PM
[No subject] - by காவடி - 04-18-2006, 04:27 PM
[No subject] - by narathar - 04-18-2006, 06:52 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:32 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 08:31 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 01:33 PM
[No subject] - by sinnakuddy - 04-21-2006, 02:32 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 02:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 05:20 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 08:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)