04-18-2006, 04:20 PM
narathar Wrote:அஜீவன்,<span style='font-size:25pt;line-height:100%'>இனப்பாகுபாடு என்பதை விட
நீங்க சொன்ன 'பழிவாங்கல்' விளங்கவில்லை.இதை இன்று தான் நான் கேள்விப் படுகிறேன்,இதை மேலும் விரிவாக விளக்க முடியுமா?இது வெண்டுமென்றே நடத்தப்படும் இனப்பாகுபாடா?
இங்கு புலம் பெயர்ந்தவர்கள் கல்வி கற்று சிறப்பாகத் தேறினால்
இவர்களது வேலைக்கு துண்டு விழுமோ என்ற அச்சம் இந்த நாட்டவர்களிடையே இருக்கிறது.
இதனாலேயே ஆரம்ப கல்வி பெறும் குழந்தைகளை
மனதளவில் தளர்ச்சியடையும் நடை முறைகளை ஆசிரியர்களே கையாள்கின்றனர்.
பெற்றோரால் அவற்றை புரிந்து கொள்ள முடிந்தாலும்
அதைத் தட்டிக் கேட்கும் மனோ நிலையிலோ
அல்லது மொழி அறிவு கொண்ட நிலையிலோ அவர்களும் இல்லை.
இது குழந்தைகளை மனோதத்துவ ரீதியாக பாதிக்கிறது.
இதனால் பலர் தமது முயற்சிகளை தளர்த்திக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் ஆங்கில கல்வி உள்ள நாடுகளுக்கு
தற்காலிகமாக புலம் பெயர்வது வெற்றியாகவே அமையும்.
<b>இதற்கான பல தகவல்களை கொடுத்த நாரதருக்கு நன்றி ........</b>
அதே வேளை நாரதர் சொல்லும் கருத்தே எனது கருத்துமாகும்.</span>
narathar Wrote:ஐரோப்பா இன்று ஒன்றாகி வரும் சூழலில் கல்வி,வேலை வாய்ப்பு என்பவற்றில் இருக்கும் சந்தர்ப்பங்களை புலம் பெயருவதன் மூலம் நிறை வேற்றிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் புலம் பெயர்ந்ததே இந்த வாய்ப்புக்களைப் பயன் படுத்தத் தானே,இதில இங்கிலாந்து என்றால் என்ன ஐரோப்பிய நாடுகள் என்றால் என்ன?இன்று கல்விக்காக இங்கிலாந்துக்கு வருபவர்கள், பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் வேலை வாய்ப்புக்காக ஐரோப்பாவுக்குள் புலம் பெயரலாம்.இரு மொழித் தகமை இதற்கு வெகுவாக உதவும்.
[size=15]ஆம்
தற்போதும் கல்விமான்கள் இந் நாடுகளுக்கு தேவைப்படும் போது
விசேடமான முறையில் அவர்களை
இந் நாடுகள் வரவழைத்து பயன் படுத்திக் கொள்கின்றன.
இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் மரியாதையும் நல்ல விதமாகவே இருக்கிறது.
இந்த வருடம் சுவிஸுக்கு 12'000 கணணி நிபுணர்கள் தேவை.
இருந்தாலும் இங்கு இத் தேவையை நிறைவு செய்ய கல்வி கற்பவர்கள் குறைவாகவே இருக்கின்றனர் என்று
ஒரு அமைச்சர் அண்மையில் தொலைக் காட்சி பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
இதுபோலவே ஏனைய வேலை வாய்ப்புகளுக்கும் உள்ளது.............
இங்கு பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களுக்கு இந்த கல்விப் பயணம் நிச்சயம் இவ்வகையில் மேன்மை தரும்.
இடையிடையே இந் நாடுகளுக்கு வந்து போவதனூடாக அந்த தொடர்புகள் அற்றும் போகாது.
அதையும் சரியாக பயன் படுத்தினால்
நாளைய ஐரோப்பாவில் வெற்றி பெற
இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
நன்றி...........

