04-18-2006, 10:40 AM
அஜீவன்,
நீங்க சொன்ன 'பழிவாங்கல்' விளங்கவில்லை.இதை இன்று தான் நான் கேள்விப் படுகிறேன்,இதை மேலும் விரிவாக விளக்க முடியுமா?இது வெண்டுமென்றே நடத்தப்படும் இனப்பாகுபாடா?
இங்கே இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்,பொதுவாகவே தெற்கு ஆசிய நாட்டவர், குறிப்பாக இந்தியர்,இலங்கையர் தமது குழந்தைகளின் கல்வியில் அதிக சிரந்தை எடுப்பதால் அவர்கள் கூடிய பெறுபேறுகளைப் பெற்று நல்ல பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகின்றனர். இதில் எந்தவிதமான இனத்துவப் பாகுபாடுமில்லை.ஆனால் இதில் வர்க்க ரீதியான பாகுபாடு உண்டு.காரணம் பிரித்தானியாவில் தனியார் பள்ளிகள் ஆகக் கூடிய மாணவர்களை ஒக்ஸ்போர்ட்,கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புகின்றன.இந்த தனியார் பாடசாலைகளில் ஒரு வருடத்திற்கு மட்டும் ஒன்பதினாயிரம் பவுன்ட்ஸ் வரை அறவிடுகிறார்கள்.இது வசதி படைதவர்களாலயே கட்டக் கூடிய தொகை.
அடுத்தது இருக்கும் அரச பாடசாலைகளின் தரத்தில் வெகுவான வேறு பாடுகள் உண்டு.கிரமர் ஸ்கூல் என்னும் பரீட்சை வைத்து தெரிந்தெடுக்கும் பள்ளிக் கூடங்கள் முழு இங்கிலாந்திலும் ஒரு நூற்று ஐம்பதே இருக்கின்றன.இதற்கு தமது குழந்தைகளை அனுப்ப பல பெற்றோர் தனியார் ரீயுசன் சென்டர்களை நாடுகின்றனர்.இதிலும் குறிப்பாக ஆசிய பெற்றோரே பிள்ளைகளை அதிக அழுத்ததிற்கு உட்படுத்துகின்றனர்.மேற்கத்தியப் பெற்றோர் அவ்வளவாக இதனைச் செய்வதில்லை.அடுததாக கொம்ப்ரியென்சிவ் என்னும் அரச பாடசாலைகள் அந்த அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாணவர்களை உள் வாங்குகின்றன.இதுவும் ஒருவகை வர்க்க பிரிவினையூடாகவே நடை பெறுகிறது. நல்ல பாடசாலைகள் இருக்கும் சுற்று வட்டாரத்தில் வீடுகளின் விலைகள் கூடியே இருக்கிறது.இதனால் கூடிய விலை உள்ள இடங்களில் வீடுகளை வாங்கக் கூடியவரே ,இதனால் பயன் பெறுகின்றனர்.அதோடு நம்மவர் லண்டனை மையமாகவே வைத்து புலம் பெயருவதால் நல்ல பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் சாத்தியம் குறைகிறது.இதை விடுத்து லண்டனுக்கு வெளியால் உள்ள நல்ல பாடசாலைகளை அண்மித்து வீடுகளை வேண்டினால் பிள்ளயை நல்ல பாடசாலைக்கு அனுப்பும் சாத்தியம் கூடும்.அதே நேரம் வேலை எடுப்பது சிரமமாக இருக்கும்.இப்போது சிலர் இதற்காகவே லண்டனை விட்டு வெளி இடங்களில் குடி யேறுகின்றனர்.இது சம்பந்தமாக மேலும் தகவல் களை எங்கே பெற முடியும் என்று இங்கே இணைக்கிறேன் ,ஐரோப்பாவில் இருந்து இடம் பெயருபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நான் அறிந்தவரை சில பேர் துணைவியையும் பிள்ளைகளையும் இங்கு அனுப்பிப் படிபிக்கிறார்கள்.அதோடு இங்கிலாந்துப் பல்கலை கழகங்களுக்கு வரும் வெளி நாட்டு மாணவர்களின் தொகையும் அதிகரித்துச் செல்கிறது.இனி வரும் ஆண்டுகளில் இது மும்மடங்காக கூடும் என்று சொல்லப் படுகிறது.தற்போது மட்டும் 300,000 வெளி நாட்டு மாணவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கின்றனர்.
மேலும் இங்கிலாந்தில் செக்கெண்டரி பாடசாலைகளில் ப்ரென்ச்சையோ,ஜேர்மனயோ இரண்டாம் மொழியாகப் படிக்கலாம்.ஐரோப்பாவில் பின்னர் வேலை தேடுவதற்கும் ,தாம் வந்த நாட்டு மொழியைத் தொடர்ந்து படிப்பதற்கும் இது உதவி செய்கிறது.
ஐரோப்பா இன்று ஒன்றாகி வரும் சூழலில் கல்வி,வேலை வாய்ப்பு என்பவற்றில் இருக்கும் சந்தர்ப்பங்களை புலம் பெயருவதன் மூலம் நிறை வேற்றிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் புலம் பெயர்ந்ததே இந்த வாய்ப்புக்களைப் பயன் படுத்தத் தானே,இதில இங்கிலாந்து என்றால் என்ன ஐரோப்பிய நாடுகள் என்றால் என்ன?இன்று கல்விக்காக இங்கிலாந்துக்கு வருபவர்கள், பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் வேலை வாய்ப்புக்காக ஐரோப்பாவுக்குள் புலம் பெயரலாம்.இரு மொழித் தகமை இதற்கு வெகுவாக உதவும்.