Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை:
#1
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம்
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி;ல் விடுதலைப்புலிகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளே.

இச் செயற்பாடுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.


புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: - by வினித் - 04-17-2006, 07:51 PM
[No subject] - by ThamilMahan - 04-17-2006, 07:59 PM
[No subject] - by வினித் - 04-17-2006, 08:31 PM
[No subject] - by ThamilMahan - 04-17-2006, 08:36 PM
[No subject] - by வினித் - 04-17-2006, 08:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)