Yarl Forum
ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: (/showthread.php?tid=172)



ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: - வினித் - 04-17-2006

ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம்
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி;ல் விடுதலைப்புலிகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளே.

இச் செயற்பாடுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.


புதினம்


- ThamilMahan - 04-17-2006

தொடர்ந்து வெளிநாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை கேட்டுநடப்பதைப்பார்த்தால் எங்கேயோ ஒரு இடத்தில கடுமையா உதைக்கிது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இது குறித்து தலமை ஆவன செய்யுமென நம்புவோம்.


- வினித் - 04-17-2006

ThamilMahan Wrote:தொடர்ந்து வெளிநாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை கேட்டுநடப்பதைப்பார்த்தால் எங்கேயோ ஒரு இடத்தில கடுமையா உதைக்கிது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இது குறித்து தலமை ஆவன செய்யுமென நம்புவோம்.


ஒரு இடமும் உதைக்கவில்லை புலிகளும் சரி தமிழ்மக்களும் சரி இவர்கள் தினிக்கும் தீர்வை ஏற்று கொள்ளுவிர்கள் என்றால் சரி அதுவரைக்கும் இப்படியான பல பக்க தாக்குதல்கள் வரும் Idea Idea


- ThamilMahan - 04-17-2006

வினித் Wrote:
ThamilMahan Wrote:தொடர்ந்து வெளிநாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை கேட்டுநடப்பதைப்பார்த்தால் எங்கேயோ ஒரு இடத்தில கடுமையா உதைக்கிது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இது குறித்து தலமை ஆவன செய்யுமென நம்புவோம்.


ஒரு இடமும் உதைக்கவில்லை புலிகளும் சரி தமிழ்மக்களும் சரி இவர்கள் தினிக்கும் தீர்வை ஏற்று கொள்ளுவிர்கள் என்றால் சரி அதுவரைக்கும் இப்படியான பல பக்க தாக்குதல்கள் வரும் Idea Idea

உது உண்மெயென்று எனக்குப்படேல்ல. அண்மையில தடைசெய்த கனடாகூட தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதாகத்தான் சொல்லியிருக்கு. இது வேறை எங்கயோ பிரச்சனை


- வினித் - 04-17-2006

Quote:உது உண்மெயென்று எனக்குப்படேல்ல. அண்மையில தடைசெய்த கனடாகூட தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதாகத்தான் சொல்லியிருக்கு. இது வேறை எங்கயோ பிரச்சனை


எங்கை இருக்கு சொன்னால் நான் ஒருக்க போய் பாத்துவிட்டு வருவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


4 அமெரிகனையும் 10 ஜரோபியனையும் போட்டு தள்ளனுமா?
:wink: :wink: