02-15-2004, 09:43 PM
kuruvikal Wrote:1983 இல் தமிழர்கள் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்... அது போன்றதல்ல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றம்.....யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது முஸ்லீம் மக்களின் பாதுக்காப்புக் கருதியே....யுத்தத்தால் அவர்கள் இடர்களை சந்திப்பதை தவிர்க்க....அது மட்டுமன்றி கிழக்கில் முஸ்லீம் அரசியல் காடையர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம்பெயர்ந்தமையும் அதனால் எழுந்த பதட்ட சூழலை தணிக்கவும்...அது மட்டுமன்றி....தமிழ் மக்களின் தார்மீக உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் வகையில் முஸ்லீம் அரசியல் காடையர்களைக் கொண்டு யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கிழக்கில் தோற்றுவித்தது போல் சிங்களம் வன்முறைகளை தூண்ட முனைந்தது....இதனால் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இருந்த வரலாற்று சகோதரத்துவத்தை அழிக்க முனைந்தது.... அதை தடுக்கும் பொருட்டு.....! இப்படியும் இன்னும் பல காரணக்களாலும்...!
ஆனால் ஒரு போதும் தமிழ்மக்கள் முஸ்லீம்களை பழிவாக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயரச் செய்யவில்லை....அதற்குச் சான்று...முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போராளிகளே இவ்வளவு நியாயங்களுக்கு மத்தியிலும் அரச பொய்ப்பிரச்சாரத்தால் முஸ்லீம்கள் மத்தியில் எழுந்த கசப்புணர்வைப் போக்கும் வகையில் மன்னிப்புக் கோரியதும் நிரந்தர சமாதானச் சூழலில் திரும்ப யாழ் வருமாறு அழைத்ததும் ஆகும்.....இப்படி ஒன்று சிங்களத்தால் இன்று வரை 1983 இல் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிகழ்ந்துள்ளதா.....?????!
:twisted:
தமிழர்கள் கொழும்பிலிருந்து காடையர்களால் அடித்து துரத்தப்பட்டார்கள். கொஞ்ச நாளுக்கப்புறம் திரும்பி வந்தார்கள். முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொத்துக்களையும் கொண்டு செல்ல அனுமதியின்றி தமிழ் தலைமைத்துவத்தால் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுமாதியான் விடயங்கள் (எல்லாவற்றையும் எழுத விரும்பவில்லை) அவ்ங்களுக்கு தமிழ் தலைமைதுவத்தின் மேல நம்பிக்கை இழக்கசெய்துவிட்டது. அதனால அவஙக் சொந்த தலைமைதுவத்தை தேடிக்கிட்டாங்க. இப்ப அவங்க யாழ்பாணத்தில தமிழங்க கூடவும் கொழும்பில சிங்களவங்க கூடவும் சேர்ந்திருக்கிறதா சொல்றாங்க. அவங்க பெரும்பான்மையா இருக்கிற கிழக்குல தனி அலகு வேணுமுன்னு சொல்றாங்க. இது சரிய்ல்லை அப்பிடி குடுக்கமுடியாதுன்னு சொன்னா தமிழங்க சொன்னா அவ்ங்களுக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழங்களும் சிற்பான்மை ஆளுங்களை அடக்கினதா போயிடும். அது தான் வேணாக்கிறேன். தனி அலகுதான் வேணுமா சரி நானும் நீங்களும் சேர்ந்து சிங்கள்வங்ககிட்ட பேசுவம் அப்பிடின்னு சொல்லணும். அப்பதான் நம்மளையும் அவங்க நம்புவாங்க. நட்புணர்வு வரும். கொஞ்ச நாளாக மீண்டும் சேர்ந்தாலும் சேர்ந்துக்கலாம்.


