Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்
#1
இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்தங்கள் நெருக்குதல்கள் யுத்தத்தை தவிர்க்க உதவாது.

சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.
Reply


Messages In This Thread
நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் - by kurukaalapoovan - 04-16-2006, 08:04 PM
[No subject] - by putthan - 04-22-2006, 03:01 PM
[No subject] - by mathanarasa - 04-23-2006, 03:46 AM
[No subject] - by kurukaalapoovan - 04-23-2006, 08:03 PM
[No subject] - by paandiyan - 04-24-2006, 03:11 AM
[No subject] - by yarlmohan - 04-26-2006, 05:42 AM
[No subject] - by இராவணன் - 04-26-2006, 03:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)