Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம்
#1
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 20:19 ஈழம்] [கொழும்பு நிருபர்]

ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நான்காம் ஈழப் போர் தொடங்கும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வெளிவந்த கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குச் சென்றால் அத்தகைய நிலைக்கு முகம் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் யுத்தத்தினை தொடங்கினால் அது நான்காவது ஈழப்போரின் தொடக்கமாகக் கருதப்படும். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் கலந்து கொண்டாலும் அதன் இறுதிவரை அவர்கள் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றது எனச் சில தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி வடக்கு-கிழக்கிலுள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாததைக் காரணமாகச் சுட்டிக்காட்டி விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களின் போது ஆயுதக் களைவிற்காக விடுதலைப் புலிகளினால் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அத்தகைய ஒரு காலக்கெடுவை விதித்து அந்த கெடுவுக்குள் வடக்கு-கிழக்கில் இருக்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறும் இல்லையேல் தமது இயக்கம் யுத்தத்திற்கு திரும்பும் என்றும் விடுதலைப் புலிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது.

இத்தகைய சிக்கல் மிக்க நிலையே அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குத் தயாராக இருப்பதற்கான பின்னணியின் காரணம் என்று இன்றைய கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவித்துள்ளது.

puthinam.com
[b]
Reply


Messages In This Thread
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் - by I.V.Sasi - 04-16-2006, 04:28 PM
[No subject] - by Subiththiran - 04-16-2006, 04:45 PM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 07:10 PM
[No subject] - by nallavan - 04-17-2006, 02:20 AM
[No subject] - by nallavan - 04-17-2006, 02:20 AM
[No subject] - by uoorkkruvi - 04-17-2006, 04:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)