04-16-2006, 06:55 AM
இப்பகுதியில் ஈழம் , இலங்கை என்பவை தமிழ் சொல்லா என பலரும் சந்தேகத்தோடு கருத்துக்கள் எழுதியிருப்பதால் அச்சொற்கள் பற்றி இராம , கி அவர்கள் தனது பதிவு ஒன்றில் எழுதிய விளக்கம்.
தமிழ் சொற்கள் எந்த அடிச்சொல்லில் இருந்து உருவாகி இருக்கலாம் என பல கட்டுரைகளை அவர் தந்துள்ளார்.
<b>இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.
இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.
ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். </b>
நன்றி இராம கி.
http://valavu.blogspot.com/2006/03/blog-post_13.html
இதை தொகுப்பதில் உதவிய வசந்தனுக்கும் நன்றி.
அதற்கப்பால்
ஈழம் எனும் சொல் சங்க இலக்கியங்களில் இருந்து பாவனையில் இருக்கும் சொல், சங்க காலத்தில் சிங்களம் எனும் மொழியே தொன்றாத காலம்.
அப்படி இருக்கும் போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்குமோ எண்டது சந்தேகம் தான்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>