Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை
#5
திருமலை மீண்டும் பாரிய வன்முறை - 10 அதிகமான தமிழரின் வீடுகள் எரிப்பு - பாதுகாப்புத் தேடி தமிழர்கள் இடம்பெயர்வு

- எல்லாளன் - 14 April 2006 17:37


திருகோணமலை மாவட்டம், நடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு க்களிற்குள் இன்று மாலை புகுந்த பெருமளவான சிங்களக் காடையர்கள் பாரிய வன் முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 10ற்;கும் அதிகமான தமிழரின் வீடுகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. (மேலதிக விபரம் இணைப்பு)
பிற்பகல் 3.45 மணிக்குப் பின்னர் சிங்களக் காடையர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதல்களில் தமிழ் மக்களிற்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சங்கதியின் திருமலை செய்தியாளர் தெரிவிக்கின்றார். எனினும் உயிரிழப்புக்கள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

கண்ணியா பகுதியில் உள்ள நடேசர் கோயிலும் சிங்களக் காடையர்களினால் எரித்து அழிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு கலவரத்தின்போது இக்கோயில் சிங்கள் காடையர்களால் எரிக்கப்பட்டிருந்து. 2004ம் ஆண்டே இது மீளப்புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரியூட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மகிந்தபுர பகுதியில் உள்ள தமிழ் இளைஞர் அபிவிருத்தியகத்தில் இருந்த கணினிகள் அலுவலகத்துடன் சேர்த்து எரிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல உந்துருளிகளும் எரியூட்டப்பட்டுள்ளன.

மகிந்தபுர, நடேசபுரம் மற்றும் ஆந்தாங்குளம் பகுதியைச் சேரந்த தமிழ் மக்கள் பாரியளவில் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க மட்கோ சந்திப்பகுதியிலிருந்து லிங்க நகர் பகுதிக்குள் ஊடுருவி சிங்கள காடையர்கள் தமிழ் மக்களின் வதிவிடங்கள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். எனினும் அப்பகுதியில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா காவல்துறையினரால் இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. எனினும் சிங்களக் காடையர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

http://www.sankathi.com/index.php?option=c...=2575&Itemid=26
[b]
Reply


Messages In This Thread
[No subject] - by I.V.Sasi - 04-14-2006, 12:23 PM
[No subject] - by I.V.Sasi - 04-14-2006, 12:37 PM
[No subject] - by I.V.Sasi - 04-14-2006, 12:39 PM
[No subject] - by I.V.Sasi - 04-14-2006, 12:42 PM
[No subject] - by Subiththiran - 04-14-2006, 10:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)