Yarl Forum
திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை (/showthread.php?tid=219)



திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை - I.V.Sasi - 04-14-2006

<b>

<span style='font-size:30pt;line-height:100%'>திருமலையில் தமிழருக்கு எதிராக மீண்டும் பாரிய வன்முறை
- பாண்டியன் - Friday, 14 April 2006 17:37

திருகோணமலை மாவட்டம், மகிந்தபுர பகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்விடங்க ளிற்குள் புகுந்து சிங்களக் காடையர்கள் பாரிய வன்செயல்களில் ஈடுபட்டுவருதாக தற் போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்...</span>

</b>

http://www.sankathi.com/index.php?option=c...=2575&Itemid=26

மேலதிக தகவல்கள் விரைவில்..


- I.V.Sasi - 04-14-2006

Violence erupts in Trinco suburbs

[TamilNet, April 14, 2006 11:39 GMT]
Violence erupted in Mihindapura, a suburb about five km off Trincomalee on Trincomalee-Anuradhapura road Friday afternoon as a group of persons attacked houses of Tamil residents in the area following the discovery of a body of Sinhalese youth Nissanka who was reported missing from Thursday, police sources said.
Tamil residents have started fleeing from suburbs seeking refuge in the adjoining areas, civil sources said.

Mr.K.Thurairatnasingham, Trincomalee district parliamentarian immediately brought this situation to the notice of the Deputy Inspector General of Police (east region), sources said.

The office of the Trincomalee District Youth Development Aham (TDYDA), a non-governmental organization was also attacked and motorbikes and other materials in the office were also burnt in the violence. Several houses and a prominent Hindu temple in the area were also attacked, sources said.

More policemen and troops were sent to the site to contain the violence.

There was no marked improvement in the situation in Trincomalee, civil sources reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17764


- I.V.Sasi - 04-14-2006

<img src='http://img86.imageshack.us/img86/9772/edit2006041429mk.png' border='0' alt='user posted image'>


- I.V.Sasi - 04-14-2006

திருமலையில் சிங்களக் காடையர்கள் மீண்டும் வெறியாட்டம்
[வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2006, 17:50 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் சிங்களக் காடயைர்கள் இன்று வெள்ளிக்கிழமையும் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


சிங்கள இளைஞரான நிசங்க என்பவரது சடலம் வரோதய நகரில் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்நபர் நேற்று வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்பட்டது.

சிங்கள இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட செய்தியறிந்த காடையர் கும்பல் ஒன்று திருகோணமலை- அனுராதபுரம் வீதியில் புறநகரான மகிந்தபுரத்தில் தமிழர் வீடுகளின் மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தியது.

தமிழரது வீடுகள் சில தீக்கிரையாக்கப்பட்டன. இந்து ஆலயம் ஒன்றும் காடையர்களின் தாக்குதலுக்குள்ளானது.

சிங்களக் காடையர்களின் வெறியாட்டத்தையடுத்து அண்மித்த பகுதிகளுக்கு தமிழர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இக்கொலை வெறியாட்டம் தொடர்பாக கிழக்குப் பிரதேச பிரதி காவல்துறை மா அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் என்ற அரச சார்பற்ற நிறுவனமும் சிங்களக் காடையர்களால் தாக்குதலுக்குள்ளானது. அந்த அலுவலகத்தின் பொருட்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

சம்பவப் பகுதிகளில் மேலதிக காவல்துறையினரும் படைத்தரப்பினரும் குவிக்கப்பட்டிருப்பினும் வன்முறை ஓயவில்லை.

திருமலையில் கடந்த புதன்கிழமை முதல் அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளன. பொதுச்சந்தையும் மூடப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரில் உள்ள ஆலயத்தில் சில தமிழர்களே இன்று சித்திரைப் பெருநாள் பூசைகளை நடத்தினர்.

கடந்த புதன்கிழமையன்று படுகொலை செய்யப்பட்டவர்களில் சிலரது இறுதி நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது.

அலெஸ் தோட்டத்தில் இன்று பிற்பகல் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரம் வெறிச்சோடி இருந்தது.


http://www.eelampage.com/?cn=25489


- I.V.Sasi - 04-14-2006

திருமலை மீண்டும் பாரிய வன்முறை - 10 அதிகமான தமிழரின் வீடுகள் எரிப்பு - பாதுகாப்புத் தேடி தமிழர்கள் இடம்பெயர்வு

- எல்லாளன் - 14 April 2006 17:37


திருகோணமலை மாவட்டம், நடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு க்களிற்குள் இன்று மாலை புகுந்த பெருமளவான சிங்களக் காடையர்கள் பாரிய வன் முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 10ற்;கும் அதிகமான தமிழரின் வீடுகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. (மேலதிக விபரம் இணைப்பு)
பிற்பகல் 3.45 மணிக்குப் பின்னர் சிங்களக் காடையர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதல்களில் தமிழ் மக்களிற்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சங்கதியின் திருமலை செய்தியாளர் தெரிவிக்கின்றார். எனினும் உயிரிழப்புக்கள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

கண்ணியா பகுதியில் உள்ள நடேசர் கோயிலும் சிங்களக் காடையர்களினால் எரித்து அழிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு கலவரத்தின்போது இக்கோயில் சிங்கள் காடையர்களால் எரிக்கப்பட்டிருந்து. 2004ம் ஆண்டே இது மீளப்புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரியூட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மகிந்தபுர பகுதியில் உள்ள தமிழ் இளைஞர் அபிவிருத்தியகத்தில் இருந்த கணினிகள் அலுவலகத்துடன் சேர்த்து எரிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல உந்துருளிகளும் எரியூட்டப்பட்டுள்ளன.

மகிந்தபுர, நடேசபுரம் மற்றும் ஆந்தாங்குளம் பகுதியைச் சேரந்த தமிழ் மக்கள் பாரியளவில் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க மட்கோ சந்திப்பகுதியிலிருந்து லிங்க நகர் பகுதிக்குள் ஊடுருவி சிங்கள காடையர்கள் தமிழ் மக்களின் வதிவிடங்கள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். எனினும் அப்பகுதியில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா காவல்துறையினரால் இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. எனினும் சிங்களக் காடையர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

http://www.sankathi.com/index.php?option=c...=2575&Itemid=26


- Subiththiran - 04-14-2006

இன்னொரு முறை சர்வதேசம் முன் தங்கள் சுயரூபம் வெளிப்படுவதை விரும்பாத சிங்களபேரினவாதிகள்
அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன், புலிகளை வலுச்சண்டைக்கு இழுக்க முயற்சி செய்கினம்.

இது நல்லதுக்கில்லை :evil: :evil: (சிங்களக்காடையர்களுக்கும் முப்படைகளுக்கும்)

கொல்லப்பட்ட மக்களுக்கும் அழிக்கப்பட்ட உடமைகளுக்கும் Cry விரைவிலேயே பதில் சொல்லுவினம்.