04-14-2006, 12:39 PM
திருமலையில் சிங்களக் காடையர்கள் மீண்டும் வெறியாட்டம்
[வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2006, 17:50 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் சிங்களக் காடயைர்கள் இன்று வெள்ளிக்கிழமையும் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிங்கள இளைஞரான நிசங்க என்பவரது சடலம் வரோதய நகரில் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்நபர் நேற்று வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்பட்டது.
சிங்கள இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட செய்தியறிந்த காடையர் கும்பல் ஒன்று திருகோணமலை- அனுராதபுரம் வீதியில் புறநகரான மகிந்தபுரத்தில் தமிழர் வீடுகளின் மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தியது.
தமிழரது வீடுகள் சில தீக்கிரையாக்கப்பட்டன. இந்து ஆலயம் ஒன்றும் காடையர்களின் தாக்குதலுக்குள்ளானது.
சிங்களக் காடையர்களின் வெறியாட்டத்தையடுத்து அண்மித்த பகுதிகளுக்கு தமிழர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இக்கொலை வெறியாட்டம் தொடர்பாக கிழக்குப் பிரதேச பிரதி காவல்துறை மா அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் முறைப்பாடு செய்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் என்ற அரச சார்பற்ற நிறுவனமும் சிங்களக் காடையர்களால் தாக்குதலுக்குள்ளானது. அந்த அலுவலகத்தின் பொருட்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
சம்பவப் பகுதிகளில் மேலதிக காவல்துறையினரும் படைத்தரப்பினரும் குவிக்கப்பட்டிருப்பினும் வன்முறை ஓயவில்லை.
திருமலையில் கடந்த புதன்கிழமை முதல் அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளன. பொதுச்சந்தையும் மூடப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் உள்ள ஆலயத்தில் சில தமிழர்களே இன்று சித்திரைப் பெருநாள் பூசைகளை நடத்தினர்.
கடந்த புதன்கிழமையன்று படுகொலை செய்யப்பட்டவர்களில் சிலரது இறுதி நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது.
அலெஸ் தோட்டத்தில் இன்று பிற்பகல் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரம் வெறிச்சோடி இருந்தது.
http://www.eelampage.com/?cn=25489

[b]