04-13-2006, 10:09 AM
Vaanampaadi Wrote:வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்]
<b>கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள்.</b>
திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அந்த பிரதேச மக்கள் கருத்துரைத்துள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subacti...m=&ucat=1&
uoorkkuruvi

