Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க
#4
<b>கிழக்குத் தளபதிகளுடன் வரும் கடற்புலிகளின் படகுகளை சுட்டுத்தள்ளுமாறு அரசு உத்தரவு</b>

[13 - April - 2006] [Font Size - A - A - A]

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் செல்லுமாயின் அவற்றைச் சுட்டுத்தள்ளுமாறு கடற்படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அவசர கூட்டமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிரேஷ்ட படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போதே, விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் செல்லுமாயின் அவற்றைச் சுட்டுத் தள்ளுமாறு கடற்படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக புலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சுகளை நடத்துவதற்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நேற்று வன்னிக்குச் சென்றிருந்தார்.

ஜெனீவாப் பேச்சுகளுக்கு முன்னர் தங்களது தளபதிகளின் வன்னிப் பயணத்திற்கு ஹெலிகொப்டர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் தங்களது படகுகளில் கண்காணிப்புக் குழுவினருடன் தங்களது தளபதிகள் கிழக்கிலிருந்து வன்னிக்கு வருவதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டதாலும், தங்களது படகுகளில் தங்களது பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யப்போவதாக கண்காணிப்புக் குழுவிடம் நேற்று முன்தினம் புலிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்தே நேற்று முன்தினம் மாலை கூடிய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து இதன் சிபார்சுகளை அரசுக்குத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்தே போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் விதத்தில் புலிகளின் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் ஏதாவது பயணம் செய்யுமாயின் அவற்றை உடனடியாக சுட்டுத் தள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவானது கண்காணிப்புக் குழுவினூடாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடற்புலிகளின் படகுகள் வரலாமென்ற எதிர்பார்ப்பில் முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகுகள் 24 மணிநேரமும் பெருமளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


http://www.thinakkural.com/news/2006/4/13/...ews_page532.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Sujeenthan - 04-12-2006, 11:38 PM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 04:01 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 08:56 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:18 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:21 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:27 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 01:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)